Home -- Tamil? -- Perform a PLAY -- 112 (Mirror of the truth)
112. இறைவனுடைய வார்த்தை கண்ணாடி
இன்று கண்ணாடியில் எத்தனை முறை நீ உன்னைப் பார்த்தாய்?
மாற்கு கண்ணாடியைப் பார்த்தான். அவன் அதிர்ச்சியடைந்தான். அவன் சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, கண்ணாடியை கோபத்துடன் எடுத்தான். தரையிலே தூக்கிப் போட்டான். (கண்ணாடி உடையும் சத்தம்)
இதைப் போலவே, அநேக மக்களும் வேதாகமத்தை இப்படிப் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு கண்ணாடி ஆகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வாழ்வில் காணப்படும் தவறுகளை காண்பிக்கின்றது. அநேகர் இதை விரும்புகின்றதில்லை.
அநேக ஆண்டுகளுக்கு முன்பு எரேமியா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் இஸ்ரவேலின் இறைவனுடைய வாயாக செயல்பட்டான். அவனும் மக்கள் மத்தியில் இதைப் போன்ற அனுபவத்தைக் கண்டான். அவனுடைய பிரசங்கங்கள் தேசத்தின் கண்ணாடியைப் போல் இருந்தது. ஆனால் அவர்கள் மாற விரும்பவில்லை. இறைவன் அவர்கள் மீது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடன் இருந்தார்.
இறைவனின் சத்தம்: “எரேமியாவே! தோற் சுருளை எடுத்துக்கொள். நான் உனக்குச் சொல்லும் அனைத்தையும் எழுது. ஒருவேளை இந்த மக்கள் எனக்குச் செவிகொடுப்பார்கள்; தங்கள் வாழ்வில் மாற்றத்தைப் பெறுவார்கள்”.
இந்தப் பணியை முடிக்க சில மாதங்கள் ஆனது. எரேமியா தனது உதவிக்காரனுக்கு இறைவனுடைய வார்த்தையை கூறினான். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் எழுதினான்.
எரேமியா: “பாரூக்! நாம் இறுதியாக முடித்துவிட்டோம். இறைவனுடைய ஆலயத்திற்குள் செல்வதற்கான அனுமதி எனக்கு மறுக்கப்பட்டுள்ளதை நீ அறிவாய். நீ இந்த சுருள்களை எடுத்துக்கொண்டு அங்கு செல்”.
இந்த சுருள்களில் உள்ளவற்றை சத்தமாக வாசித்த போது, மிகாயா கவனித்துக் கேட்டான். அரசனுடைய அரண்மனையில் இருக்கும் அமைச்சரை வேகமாக தேடிச் சென்றான்.
மிகாயா: “இறைவனுடைய ஆலயத்தில் பாரூக் இறைவார்த்தையை வாசிக்கிறான். நாம் வாழும் வாழ்க்கை முறை சரியல்ல. இறைவன் நம்மை தண்டிக்கப் போகிறார்”.
அமைச்சர்: “அந்த மனிதனை தோற் சுருள்களுடன் கொண்டு வாருங்கள்”.
பாரூக் வந்தான். அமைச்சரின் இருதயத்திற்கு இறைவனுடைய வார்த்தை கண்ணாடியைப் போல இருந்தது.
அமைச்சர்: “பாரூக், நீ இவற்றையெல்லாம் எப்படி எழுதினாய்?”
பாரூக்: “எரேமியா எனக்குச் சொன்னார். நான் மையினால் அதை எழுதினேன்”.
அமைச்சர்: “நாங்கள் அரசனிடம் இதைக் குறித்து முறையிடுவோம். பாரூக், நீ எரேமியாவுடன் தலைமறைவாயிருக்கிறாய். நீங்கள் இருவரும் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை”.
இராஜா தனது குளிர்கால அரண்மனையில் நெருப்பின் முன்பு அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான். அவனுடைய வாழ்வில் ஒழுங்கற்ற பல காரியங்கள் காணப்பட்டன. அவன் இறைவனுடைய வார்த்தையை கவனித்து கேட்க விரும்பவில்லை. சில வார்த்தைகள் வாசிக்கப்பட்டவுடனே அவன் எழுந்து நின்றான். கத்தியை எடுத்து, அந்த சுருளை கிழித்தான். பின்பு தீயில் அதைப் போட்டான். முழு சுருளும் எரிந்து போகும்படி அவன் தொடர்ந்து இப்படிச் செய்தான்.
ஒவ்வொரு செயலும் அந்தரங்கத்தில் இன்னுமொரு முறை எழுதப்படுகின்றது. இறைவனுடைய அன்பு பெரியது. நமக்காக எழுதப்பட்ட அவருடைய வார்த்தை நமக்கு உள்ளது.
உனக்கு என்னுடைய ஆலோசனை: வேதாகமத்தை தினந்தோறும் வாசி. நீ மாற்றம் பெறு. உன்னுடைய இருதயத்தில் நீ நன்றாக இருக்கும்படி இறைவன் விரும்புகிறார்.
மக்கள்: உரையாளர், எரேமியா, இறைவனுடைய சத்தம், அமைச்சர், பாரூக், மிகாயா.
© Copyright: CEF Germany