Home -- Tamil? -- Perform a PLAY -- 113 (Can your God do everything)
113. உனது இறைவன் எல்லாவற்றையும் செய்ய இயலுமா
கேத்ரின்: “ஜோதி! இதைக் கற்பனை செய்து பார். எனக்கு 25 டாலர் பணம் கிடைத்துள்ளது. ஏனெனில் நற்செய்தியாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நான் விண்ணப்பம் பண்ணியிருந்தேன்”.
ஜோதி: “நீ என்ன சொல்லுகிறாய்?”
கேத்ரின்: “எப்போதெல்லாம் எனக்கு கூடுதல் பணம் கிடைக்கிறதோ, அப்போது நற்செய்திப் பணிக்காக நான் இறைவனுக்கு காணிக்கை கொடுப்பேன். இப்போது நான் ஒரு பொம்மையை வாங்கப் போகிறேன். கிறிஸ்துமஸ் சமயத்தில் அது சீனாவிற்கு அனுப்பப்படும். நீ என்னுடன் வருகிறாயா?”
ஜோதி: “சரி! வருகிறேன்!”
நீண்ட முடி மற்றும் நீலநிற ஆடையுடன் இருந்த பொம்மையை வாங்கும்படி அவர்கள் பொம்மைக் கடையில் தீர்மானித்தார்கள். விண்ணப்பம்பண்ணிய பிறகு, கேத்ரினும், ஜோதியும் நேராக திருமதி. ஹாட்மனின் வீட்டிற்கு சென்றார்கள்.
(அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம், கதவு திறக்கின்றது)
கேத்ரீன்: “வணக்கம்! திருமதி.ஹாட்மன்! இது ஒரு கிறிஸ்மஸ் அன்பளிப்பு”.
திருமதி.ஹாட்மன்: “நல்லது. ஆனால் பரிசுப்பொருட்கள் பெட்டி எல்லாம் மூடப்பட்டுவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள். இதைப் பெற்றுக்கொள்ள இயலாது”.
கேத்ரீன்: “இந்த பொம்மை சீனாவிற்கு போக வேண்டும். இதை வாங்குவதற்கென்று இயேசு எனக்கு பணத்தைக் கொடுத்தார்”.
இந்த சிறுமி மிகவும் உறுதியாகப் பேசுவதைக் கண்ட திருமதி.ஹாட்மன், அந்தப் பெட்டியைத் திறந்தாள்.
கேத்ரீன்: “மிகவும் நன்றி திருமதி.ஹாட்மன்! இறைவன் இதற்கென்று ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார்”.
சகோதரி ரூத் இதை அறிந்திருந்தாளா? அவள் சீனாவில் நற்செய்திப் பணி செய்தாள். ஒரு வாலிபப் பிள்ளைக்கு ஜெர்மன் மொழியை கற்றுக்கொடுத்தாள். அடினா மொழிகளில் புலமை பெற்றிருந்தாள். ஆனாலும் அற்புதங்களைச் செய்கிறவரும், அவளை அதிகமாக நேசிக்கிறவருமாகிய உயிருள்ள இறைவனைக் குறித்து அவள் ஒருபோதும் கேள்விப்படவில்லை.
அடினா: “உனது இறைவன் உண்மையாகவே எல்லாக் காரியங்களையும் செய்ய முடியுமா?”
சகோதரி ரூத்: “ஆமாம். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை”.
அடினா: “அப்படியென்றால் நீலநிற ஆடை அணிந்த ஜெர்மானியப் பொம்மையை, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் எனக்கு அவர் அனுப்ப வேண்டும். தயவு செய்து அவரிடம் இதைச் சொல்லுங்கள்!”
இறைவன் எவ்விதமாக இந்த ஆசையை நிறைவேற்றுவார் என்பதை சகோதரி ரூத்தினால் கற்பனைச் செய்து கூட பார்க்க முடியவில்லை. எனவே அவள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பெட்டியைத் திறந்தாள். அவளுடைய விண்ணப்பத்திற்கான பதிலாக பொம்மை அங்கிருந்தது. இது தற்செயலாக நிகழ்ந்தது அல்ல.
சகோதரி ரூத்: “ஆண்டவராகிய இயேசுவே! உமக்கு நன்றி. நீர் உயிருடன் இருக்கிறீர். உம்மால் எல்லாவற்றையும் உண்மையாகவே செய்ய முடியும். அடினா உம்மை அறிந்துகொள்ளும்படி உதவும்”.
அவள் சுற்றிலும் மூடப்பட்டிருந்த அந்தப் பரிசை அடினாவிடம் கொண்டு சென்றாள்.
சகோதரி ரூத்: “அடினா! ஆண்டவராகிய இயேசு உனக்கு இதை அனுப்பியுள்ளார்”. (பேப்பரைப் பிரிக்கும் சத்தம்)
அடினா: “அவள் மிகவும் ஆச்சரியப்பட்டாள்! அவள் விரும்பிக் கேட்ட அதே வகைப் பொம்மை இது”.
அவள் சந்தோஷத்தினால் அந்த அறையில் துள்ளிக்குதித்து ஓடினாள். திடீரென்று அவள் அமைதியானாள்.
அடினா: “சகோதரி ரூத், இயேசுவால் எல்லாம் கூடும். நான் அவரை விசுவாசிக்கிறேன். எனது ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளார். ஆண்டவராகிய இயேசுவே! என் வாழ்வில் வாரும். எனது இருதயத்தை தூய்மைப்படுத்தும். நான் 100% உமக்கு சொந்தமாக விரும்புகிறேன். ஆமென்”.
அடினாவின் இருதயத்தில் உண்மையான கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி வந்தது. அவள் இதை அநேக மக்களுக்குச் சொன்னாள்.
மக்கள்: உரையாளர், கேத்ரீன், ஜோதி, திருமதி.ஹாட்மன், அடினா சகோதரி.ரூத்.
© Copyright: CEF Germany