Home -- Tamil? -- Perform a PLAY -- 114 (An angel came)
114. ஒரு தூதன் வந்தான்
மாற்கு கம்பளவிரிப்பின் மீது படுத்திருந்தான். அவன் ஒரு புத்தகத்தை ஆர்வமுடன் படித்துக் கொண்டிருந்தான். (அழைப்பு மணியின் சத்தம்)
மாற்கு: “யார் அஙகே வாசலில் இந்த நேரம்?” (கதவைத் திறக்கும் சத்தம்)
மாற்கு: “அலெக்ஸ்! நீயா? எங்கிருந்து வருகிறாய்?”
அவன் மிகவும் ஆச்சரியப்பட்டான். மாற்குவிற்கு பேச வார்த்தைகள் வரவில்லை. இரண்டு ஆண்டுகள் முன்பு அவனுடைய சிறந்த நண்பன், வேறிடத்திற்கு சென்றிருந்தான். இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கவில்லை.
இஸ்ரேலில் ஒரு வாலிபப் பெண் முற்றிலும் எதிர்பாராத ஒருவரை சந்தித்தாள். எந்தவொரு முன் அனுமதியும் வாங்கவில்லை. திடீரென்று அவள் முன்பு அவன் நின்றான்: அது தேவ தூதன்!
இறைவன் இப்படி செயல்படுகிறார். அவர் திடீரென்று வருகிறார். ஒருவரும் எதிர்பாராதிருந்த சமயம் வருகிறார். மரியாள் அதிரிச்சியடைந்தாள்.
தூதன்: “பயப்படாதே! மரியாளே! இறைவன் உன்னை நேசிக்கிறார்“.
இறைவன் நம்மிடம் வருகிறார்; பேசுகிறார். இன்றும் அவர் இதைச் செய்கிறார். தமது வார்த்தையாகிய வேதாகமத்தின் மூலம் அவர் நம்மிடம் பேசுகிறார். சில சமயங்கள் அவர் அற்புதங்களின் மூலமாக அல்லது மற்ற மக்கள் மூலமாக பேசுகிறார். வேதாகமம் இல்லாதிருந்த காலத்தில், அவர் கனவுகளின் மூலம் பேசினார். மக்களிடம் தூதர்களை அனுப்பி பேசினார்.
தூதன்: “மரியாளே! இறைவன் உன்னுடன் இருக்கிறார். உனக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கும். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக”.
மரியாள்: “இது எப்படியாகும்? எனக்கு திருமணம் ஆகவில்லை. எனக்கு கணவன் இல்லையே”.
தூதன்: “இறைவன் உனக்குள் ஒரு அற்புதத்தைச் செய்வார். பரிசுத்த ஆவியானவர் உன்னிடத்தில் வருவார். அவருடைய பலம் உன்மேல் நிழலிடும். எனவே உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை இறைவனுடைய மகன் என்று அழைக்கப்படும்”.
மரியாள்: “நான் இறைவனுக்கு பணி செய்வேன். உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது”.
இந்த அற்புதம் நிகழந்தது. இறைவனுடைய குமாரன் பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இறைவன் இயேசு என்ற பெயரில் நமது உலகிற்கு வந்தார்.
நாம் அவரிடத்தில் வரும்படியாக, இறைவன் நம்மிடம் வந்தார்.
நான் அநேக முறை கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறேன். இந்த அற்புதம் ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. மிகப்பெரிய இறைவன் மனிதனாக மாறினார். அவர் நம்மிடம் வந்தார். இயேசுவின் மூலம் இறைவன் நம்மிடம் நெருங்கி வருகிறார். மக்கள் அவரைக் காணும்படியாகவும், அவரைத் தொடும்படியாகவும் நெருங்கி வந்தார். இந்தக் காரியம் மேய்ப்பர்களுக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. இறைவன் நம்மிடம் வருகிறார். இயேசுவாகிய அவர் உன்னிடமும் வருகிறார்.
உனது வாழ்வில் அவரை அழைக்கும்படி நீ விரும்புகிறாயா? நீ இப்படி ஒரு விண்ணப்பத்தை ஏறெடுப்பதின் மூலம் இதைச் செய்யலாம்:
மாற்கு: “ஆண்டவராகிய இயேசுவே! தயவு கூர்ந்து எனது வாழ்வில் வாரும். எனது இருதயத்தின் கதவை நான் உமக்குத் திறக்கிறேன். நான் என்றென்றும் உமக்குச் சொந்தமாக விரும்புகிறேன். என் மீதான உமது பெரிய அன்பிற்காக நன்றி செலுத்துகிறேன்”.
நீ அவரிடம் வரும்படியாக, அவர் உன்னிடம் வருகிறார்.
மக்கள்: உரையாளர், மாற்கு, தூதன், மரியாள்.
© Copyright: CEF Germany