Home -- Tamil -- Perform a PLAY -- 050 (Attention danger of an avalanche)
50. அவலாஞ்சியின் ஆபத்து
சுவிட்சர்லாந்து மலைகளில் ஒரு சிறுவன் தனது ஆடுகளை மேய்த்தான். அவன் பூக்களை, மலைகளின் அழகை ரசித்தான். ஒருவர் சிறிய மலைப்பாதை வழியே மேலே ஏறி வந்தார்.
ஹைக்கர்: “வாழ்த்துகள், வணக்கம் உன் பெயர் என்ன?”
ஹென்றி: “வணக்கம். என் பெயர் ஹென்றி”.
ஹைக்கர்: “நீ மட்டும் இங்கு தனியாக இருக்கிறாயா?”
ஹென்றி: “ஆமாம். எனக்கு விடுமுறை. என் அப்பாவின் ஆடுகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன்”.
ஹைக்கர்: “நீ ஒரு மேய்ப்பன். உனக்கு நல்ல மேய்ப்பனைக் குறித்து தெரியுமா?”
ஹென்றி: “இல்லை. யார் அவர்?”
ஹைக்கர்: “அவர் ஆண்டவராகிய இயேசு. மக்கள் கீழ்ப்படியாத ஆடுகளைப் போல, தங்கள் வழிகளில் போகிறார்கள் என்று வேதாகமம் கூறுகின்றது. நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடுகிறார். நம்மை வழிநடத்த விரும்புகிறார். நம்மை பராமரிக்கிறார். ஒரு நாளில் நம்மை பரலோகிற்கு அழைத்துச் செல்வார்”.
ஹென்றி: “நான் மரிக்கும் போது என்னை அவர் சேர்த்துக் கொள்வாரா?”
ஹைக்கர்: “ஆமாம். உன் வாழ்வின் மேய்ப்பராக அவர் இருக்கும்படி நீ கேட்க வேண்டும்”.
ஹென்றி: “நான் அதை இப்போதே செய்ய விரும்புகிறேன்”.
ஹென்றி என்ற அந்த சிறுவன் ஒரு எளிய விண்ணப்பத்தை ஏறெடுத்தான். அவனுடைய இருதயத்தில் இருந்து அது வந்தது. அவன் இயேசுவைப் பற்றிக்கொள்ள விரும்பினான்.
ஹைக்கர்: “நீ இப்போது நல்ல மேய்ப்பருக்கு சொந்தமானவனாக மாறிவிட்டாய். “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்” என்ற இந்த வேதாகம வசனங்களை நீயும் சொல்ல முடியும்”.
ஹென்றி: “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்”.
அவன் இதை மகிழ்ச்சியுடன் தனது பெற்றோர்களுக்கு அறிவித்தான். அவன் விடுமுறை முடிந்தது. மீண்டும் அவன் பள்ளிக்கு செல்ல வேண்டும். குளிர்காலம் வந்தது. சுவிட்சர்லாந்து மலைகளில் அது மிகவும் குளிரான காலமாக இருக்கும் ஆபத்தான பனிப்பொழிவு ஏற்படும். ஹென்றி ஓர் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்டான். திடீரென இடிசத்தம் கேட்டது. அவன் ஓட நினைத்தான். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. பனிப்பொழிவு அவனை மூடியது. பெரிய பனிக் கட்டிகளுக்கு கீழே அவன் கிடந்தான். இருட்டான பின்பு அவனுடைய பெற்றோர்கள் கவலை கொண்டார்கள். இறுதியில் அவனைக் கண்டபோது துக்கமடைந்தார்கள். ஆனால் “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்” என்ற வசனம் அவர்களை ஆறுதல் படுத்தியது. ஒரு நாளில் ஹென்றியை பரலோகில் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு நாளில் அவர்கள் அனைவரும் நல்ல மேய்ப்பருடன் என்றென்றும் இருப்பார்கள்.
நீயும் இப்படிக் கூற முடியுமா? “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்”.
மக்கள்: உரையாளர், ஹைக்கர், ஹென்றி.
© Copyright: CEF Germany