Home -- Tamil -- Perform a PLAY -- 051 (Two gifts)
51. இரு பரிசுகள்
1. நண்பன்: “நமது நண்பன் எப்படி இருக்கிறான் என்பது உனக்குத் தெரியுமா?”
2. நண்பன்: “மிகவும் மோசமான நிலையில் உள்ளான்”.
1. நண்பன்: “இரவு பகலாக படுத்திருந்து, அசையக் கூடாத நிலையில் இருப்பது மிகவும் வேதனையான காரியம்”.
2 நண்பன்: “நான் அவனைக் குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன்”.
1 நண்பன்: “நாம் அவனை இயேசுவிடம் கொண்டு போவோம். அவர் இப்போது கப்பர்நகூமில் இருக்கிறார். அவர் அவனை சுகப்படுத்துவார்”.
இவர்கள் உண்மையான நண்பர்கள். அவர்கள் திமிர்வாத நோயினால் அவதிப்பட்ட நண்பனை குற்றம் சாட்டவில்லை. அவனை படுக்கையுடன் இயேசுவிடம் சுமந்து கொண்டு போனார்கள். அவர்கள் கொஞ்சம் தாமதமாக சென்றார்கள். இயேசு பிரசங்கித்துக்கொ ண்டிருந்த வீடு முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. வாசல் முன்பும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. எனவே வாசல்வ ழியாய் போவது என்பது இயலாத காரியமாய் இருந்தது. ஒவ்வொருவரும் இயேசு போதிப்பதைக் கேட்க விரும்பினார்கள். அவரைப் போல இறைவனைக் குறித்து ஒருவரும் போதிக்க முடியாது.
2 நண்பன்: “எனக்கு ஒரு யோசனை, மேற்புரம் செல்லுவதற்கான படிகளை உங்களால் பார்க்கமுடிகிறதா?”
1 நண்பன்: “நீ என்ன சொல்ல வருகிறாய் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அதைச் செய்வோம். வாருங்கள்”.
படிக்கட்டுகள் வழியாக தங்களுடைய நண்பனை கவனமாக சுமந்து சென்றார்கள். பின்பு ஓட்டைப் பிரித்து, மேலே திறப்புண்டாக்கினார்கள், அதன் வழியாக வியாதிப்பட்ட நண்பனை படுக்கையுடன் இயேசுவிற்கு முன்பு இறக்கினார்கள். இயேசு அவனுக்கு உதவுவாரா? இயேசு மேலே இருந்த நண்பர்களைப் பார்த்தார். அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டார். அவர்தி மிர்வாதக்காரனிடம் இப்படிக் கூறினார்.
இயேசு: “உனது பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன”.
இயேசு அவனுக்கு மன்னிப்பைக் கொடுத்தார். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. எவ்விதம் இவர் பாவங்களை மன்னிக்க முடியும்? இறைவன் மட்டுமே நம்முடைய பாவங்களை மன்னிக்கமுடியும் என்று சிலர் எண்ணினார்கள். இயேசு இறைவனின் குமாரன்எ ன்பதையும், அவர் பாவங்களை மன்னிக்க முடியும் என்றும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்தார்.
இயேசு: “உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன? பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு போ என்று சொல்வதோ எது எளிது? நான் இரண்டையும் செய்ய முடியும் என்பதை இப்போது நீங்கள் காண்பீர்கள்”.
பின்பு இயேசு அந்த திமிர்வாதக்காரனிடம் கூறினார்.
இயேசு: “எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, வீட்டிற்கு போ என்று நான் உனக்குச் சொல்லுகிறேன்”.
அனைவரும் ஆடாமல் ஆசையாமல் கவனித்துப் பார்த்தார்கள். அந்த திமிர்வாதக்காரன் அசைய ஆரம்பித்தான். அவன் எழுந்தான். தனது படுக்கையை சுற்றினான். நடக்க ஆரம்பித்தான். இயேசு அவனை குணமாக்கினார். ஒவ்வொருவரும் இறைவனை துதித்தார்கள். அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கூறினார்கள்.
மக்கள்: “இது போல ஒரு நாளும் நாங்கள் கண்டதில்லை”.
அந்த மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவனாக வீட்டிற்கு திரும்பிச் சென்றான். அந்த மனிதனுக்கு இயேசு கொடுத்த இரண்டு பரிசுகள் எவை? எங்களுக்கு எழுதுங்கள். நாங்கள் உங்களுக்கு பதிலளிப்போம்.
எப்போதும் நினைவிற்கொள்ளுங்கள்: இயேசு உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார்!
மக்கள்: உரையாளர், இரண்டு நண்பர்கள், இயேசு, மக்கள்.
© Copyright: CEF Germany