Home -- Tamil -- Perform a PLAY -- 049 (The good shepherd)
49. நல்ல மேய்ப்பர்
சிலகாலம் முன்பு நான் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிச் சென்றேன். அப்போது அழகான மரங்கள், திராட்சைத் தோட்டங்கள், விளைநிலங்களைக் கண்டேன். பின்பு ஒரு ஆட்டு மந்தையைக் கண்டேன். அந்த ஆடுகள் மேய்ப்பனின் சத்தத்தை மட்டும் கேட்டு பின்பற்றும் என்பது உனக்குத் தெரியுமா? அது மற்றவர்களின் சத்தத்தை கவனிக்காது.
ஆடுகள் மிக விரைவில் களைப்படைந்துவிடும். அவைகளுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்ள தெரியாது. நாய்கள் அல்லது குதிரைகளைப் போல தங்களது வீடுகளைக் கண்டுபிடித்து வர அவைகளுக்குத் தெரியாது. ஆடுகளுக்கு கண்டிப்பாக மேய்ப்பன் தேவை. மேய்ப்பன் அவைகளை வழி நடத்துவான், பாதுகாப்பான், பராமரிப்பான். நமக்கும் இது தேவை.
இயேசு கூறியது என் நினைவில் வரும்.
இயேசு: “நானே நல்ல மேய்ப்பன். என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவிகொடுத்து, என்னைப் பின்பற்றும்”.
அவர் நல்ல மேய்ப்பர், நாம் அவரின் ஆடுகள். இயேசு இதைக் குறித்து ஒரு கதை சொன்னார்.
(ஆடுகள் சத்தம் - பின்னணி இசை)
இயேசு: “ஒரு மேய்ப்பனுக்கு 100 ஆடுகள் இருந்தன. அவன் பசும்புல் வெளிகளில் அவைகளை நடத்தி, நீர்ப்பகுதிக்கு கொண்டு சென்றான். காட்டு மிருகங்கள் வந்த போது, ஆபத்தை முன்னறிந்து, அவைகளை பாதுகாத்தான். ஆடுகள் மேய்ப்பனின் அருகில் இருந்தபோது பாதுகாப்பாக இருந்தன. மாலை நேரத்தில் மேய்ப்பன் அவைகளை வீட்டிற்கு நடத்திச் செல்வான். அவைகளை எண்ணிப் பார்ப்பான். 97,98,99? ஒரு ஆடு குறைந்தது. அது வழி தவறிப்போய், தொலைந்திருந்தது. அது நம்பிக்கையற்று உதவிக்காக கத்தியது. மேய்ப்பன் இல்லாத ஆடு தொலைந்த நிலையில் உள்ளது. இப்போது மேய்ப்பன் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி புறப்பட்டு சென்றான். அவன் அதைக் கண்டுபிடித்து, சந்தோஷமாய் தன் தோள்களில் சுமந்து கொண்டு வந்தான். இப்போது அந்த ஆடு பாதுகாப்பாக இருந்தது”.
இந்த ஒரு ஆடு கூட அவனுக்கு முக்கியம். அவன் அதைத் தேடினான். கண்டுபிடித்தான். அதை நேசித்தான்.
இயேசுவே நல்ல மேய்ப்பர்.
நீ அவரின் சத்தத்தை அறிவாயா? நீ அவரைப் பின்பற்றுகிறாயா? இயேசுவுடன் இருந்தால் நமக்குப் பாதுகாப்பு உண்டு. நமக்குத் தேவையானதை அவர் தருகிறார். அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். பாடுகளின் நேரத்தில் அவர் நம்மை விட்டு விலகிச் செல்வதில்லை. ஆனால் அநேக மக்கள் அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள், தங்கள் சொந்த வழியில் நடக்கிறார்கள். ஏன் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்? என்று நீ எண்ணிப் பார்த்ததுண்டா?
மக்கள்: உரையாளர், இயேசு.
© Copyright: CEF Germany