Home -- Tamil -- Perform a PLAY -- 022 (Chariot of fire to heaven 7)
22. அக்கினி இரதத்தில் பரலோகத்திற்கு 7
எலியாவைக் குறித்த மிகப்பெரிய தேடுதல் உனக்கு நினைவில் இருக்கிறதா? அவனுடைய மறைவு ஒரு புதிராக இருந்தது.
உரையாளர்: எலிசா, நீயே அவருக்கு நல்ல நண்பர். எலியா எங்கு உள்ளார் என்பது உனக்குத் தெரியுமா?
எலிசா: “ஆமாம். எனக்குத் தெரியும்”.
உரையாளர்: நீ மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் போல் காணப்படுகிறது. நான் மிகுந்த ஆர்வமாயிருக்கிறேன்.
எலிசா: “எலியா எடுக்கப்பட்ட போது எவ்விதம் சால்வை விழுந்தது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவருடன் செல்ல தீர்மானித்தேன். நான் வருவதை அவர் விரும்பவில்லை. ஆனால் நான் அவரை விட்டு விலகவில்லை. போகும் வழியில் நாங்கள் சில தீர்க்கதரிசிகளை சந்தித்தோம். அவர்கள் கேட்டார்கள்: எலியா உன்னுடன் இருக்கும் கடைசி நாள் இது தான் என்பது உனக்கு தெரியுமா?”
உரையாளர்: இதைக் கேட்ட போது நீர் கவலைப்பட்டீரா?
எலிசா: “எனக்கு இது முன்பாகவே தெரியும். அவர்கள் அமைதியாய் இருக்கும்படி நான் கேட்டுக் கொண்டேன். நாங்கள் கிழக்குப் பக்கம் முன்னேறிச் சென்றோம். நாங்கள் யோர்தானை அடைந்தோம். நாங்கள் எந்த பாலத்தையும் அங்கு காணவில்லை. எலியா சால்வையை எடுத்தார். முறுக்கி, தண்ணீரில் அடித்தார். அந்த ஆறு இரண்டாகப் பிரிந்தது. நாங்கள் காய்ந்த நிலத்தில் கடந்து சென்றோம்”.
உரையாளர்: அது உண்மையா?
எலிசா: “ஆமாம். நான் அங்கிருந்தேன். இறைவனின் பெரியதன்மை மற்றும் வல்லமை குறித்து நான் வியந்தேன். அவர் எளிய மக்களைக் கொண்டு பெரிய அற்புதங்களைச் செய்கிறார்.
நாங்கள் நடந்து சென்ற போது, இறைவனைக் குறித்துப் பேசினோம். அப்போது பரலோகத்திலிருந்து அக்கினி இரதங்கள் பூண்ட குதிரைவண்டி இறங்கியது. எலியா அந்த இரதத்தில் ஏறி இறைவனின் காண இயலாத பரலோகம் நோக்கி சென்றார். நான் அவரை அழைத்தேன். பின்பு அவரைக் காணவில்லை. இறைவன் எலியாவை இவ்விதமாக மகிமையாய் பரலோகில் எடுத்துக் கொண்டார்”.
உரையாளர்: எனவே தான் ஒருவராலும் அவரைக் காண முடியவில்லை. கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தமைக்கு நன்றி எலிசா.
பொதுவாக மரணம் என்பது நமது வாழ்வின் முடிவு ஆகும். எப்போது நமது வாழ்வு முடியும், நமது மரணத்திற்கு பின்பு எங்கிருப்போம் என்பது நமக்கு முக்கியமானதாக இல்லை. எலியா இறைவனுடன் இருந்தார். ஏனெனில் அவர் இறைவனுடன் வாழ்ந்தார். வேதாகமம் இன்னொரு இடத்தில் இவ்விதம் கூறுகிறது. “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”. (1 யோவான் 5:12)
அடுத்த நாடகத்தில் பேதுரு எவ்விதம் இயேசுவுடன் தனது வாழ்வை தொடங்கினான் என்று நான் உங்களுக்கு கூறுவேன்.
மக்கள்: உரையாளர், எலியா.
© Copyright: CEF Germany