STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 021 (Sin begins little by little 6)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

21. பாவம் சிறியதாக ஆரம்பிக்கிறது 6


ஆகாப் இராஜா தனது அரண்மனையில் அங்கும், இங்கும் நடமாடிக் கொண்டிருந்தான். அவன் இன்னுமொரு முறை ஜன்னல் ஓரம் சாய்ந்து கொண்டு திராட்சைத் தோட்டத்தைக் குறித்து வியந்து கொண்டிருந்தான்.

ஆகாப்: “எனக்கு அந்த திராட்சை தோட்டம் வேண்டும். எனது அரண்மனைக்கு மிக அருகில் உள்ளது. நான் அதில் மிக அழகான தோட்டம் உருவாக்குவேன்”.

அவன் உரிமையாளரிடம் சென்றான்.

ஆகாப்: “நாபோத்தே! உனது திராட்சைத் தோட்டத்தை எனக்கு விற்றுவிடு”.

நாபோத்: “அது முடியாத காரியம். எனது பிதாக்களின் சுதந்திரம் அது. அதை விற்பதற்கு உரிமை கிடையாது. அது இறைவனுடைய சட்டம். ஆகாப் எதுவும் சொல்லாமல் வீட்டை நோக்கி சோகத்துடன் சென்றான். அவன் போய் படுத்துக் கொண்டான்”.

உனக்கு விருப்பமான ஒன்று கிடைக்காத போது, நீயும் இப்படிச் செய்ததுண்டா? ஆகாப் இராஜா சுவரின் பக்கமாக தனது முகத்தை திருப்பிக் கொண்டான்.

யேசபேல்: “என்ன நிகழ்ந்தது உங்களுக்கு?”

அவன் சொன்னதை யேசபேல் கேட்டுக்கொண்டாள். பின்பு அவள் கூறினாள்.

யேசபேல்: “நீர் எழுந்திரும். நீர் விரும்பியதை அடைவீர். உமக்கு மகிழ்ச்சி பெருகும்”.

அந்த நகரத்தின் அதிகாரிக்கு அரசி ஒரு கடிதம் எழுதினாள். அரசனின் கையெழுத்தை போலியாகப் போட்டு, அரசனின் முத்திரை மோதிரத்தால் முத்திரையிட்டாள்.

அந்த அதிகாரி இந்த வார்த்தைகளை வாசித்தான். ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணி நாபோத்தை அழைத்தான். பிற்பாடு அவன் மீது குற்றச்சாட்டை வைத்தான். “நீ இறைவனையும், இராஜாவையும் நிந்தித்துவிட்டாய், நீ சாக வேண்டும்”.

அப்படியே நிகழ்ந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி நாபோத் அந்த அழைப்பை ஏற்றான். மாலையில் அவன் இறந்தான்.

ஒரு சிறிய பாவம் மிகப் பெரியதாக வளர்வது எவ்வளவு ஆபத்தானது.

பார்த்தல் - விரும்புதல் – பொறாமை – பெருமை – சுயபரிதாபம் – பொய்கள் – கொலை.

நாபோத்தின் மரணச் செய்தி மிக வேகமாக பரவியது. ஆகாப் இராஜா அந்த திராட்சைத் தோட்டத்தை தனக்கு எடுத்துக்கொள்ள விரைந்து சென்றான். ஆனால் இறைவன் என்ன எண்ணுவார் என்று அவன் யோசித்து செயல்படவில்லை. திடீரென்று எலியா அவன் முன்பு தோன்றினான். ஆகாப் முகம் வெளிறிப் போனது.

ஆகாப்: “எனது எதிரியே, நீ என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?”

எலியா: “ஆமாம், நான் உன்னை கண்டுபிடித்துவிட்டேன். நீ உன்னை பாவத்திற்கு விற்றுப்போட்டாய். இறைவன் பாவத்தை வெறுக்கிறார். அது உன்னையும், உன் குடும்பத்தையும் அழிக்கும்”.

இராஜா மீண்டும், மீண்டும் இந்த வார்த்தைகளை நினைத்துக் கொண்டிருந்தான். அவன் செய்த அனைத்திற்காகவும் வருத்தப்பட்டான். கடவுள் அவனது இருதயத்தைப் பார்த்தார். அவனுக்கு இரக்கமுள்ளவராக இருந்தார். நமது பாவங்களை ஆண்டவராகிய இயேசுவிடம் நாம் அறிக்கையிடும் போது, நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார்.


மக்கள்: உரையாளர், ஆகாப், யேசபேல், நாபோத், எலியா.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 25, 2018, at 03:29 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)