STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 165 (The secret place is taken 3) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
165. இரகசியமான ஒரு இடம் 3ரூத்(வியப்புடன்): “மார்கரெட் அத்தை. திருமதி.ரெபிங்கர் என்னை மீண்டும் அழைக்கிறார். அவர்களுடைய இரட்டைப் பிள்ளைகளை நான் ஞாயிறு அன்று வெளியே கூட்டிச் செல்ல வேண்டும். நான் போகலாமா? தயவு செய்து போகலாம்! என்று சொல்லுங்கள்”. மார்கரெட் அத்தை: “இதை செயல்படுத்துவது முடியாத காரியம். நான் திருமதி.மில்லருக்கு வாக்குப்பண்ணி விட்டேன். அவருடைய சகோதரனின் பிள்ளையுடன் நீ விளையாட வேண்டும்”. ரூத்: “நான் போக விரும்பவில்லை! நான் அவளை வெறுக்கிறேன். நான் எங்கு போக விரும்புகிறேனோ, அங்கு போகிறேன்!” மார்கரெட் அத்தை: “ரூத்! உனது அறைக்குச் செல். நீ மாறிவிட்டாய் என்று நினைத்தேன்”. ரூத்: “எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை!” (கதவை அடைக்கும் சத்தம்) ரூத் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. அவள் படுக்கையில் மனங்கசந்து அழுதாள். மார்கரெட் அத்தை: “ரூத்! என்ன ஆயிற்று உனக்கு?” ரூத்(தேம்பி அழுதாள்): “நான் மறுபடியும் கெட்டவளாகி விட்டேன். நல்ல மேய்ப்பன் இப்போதும் என்னை நேசிக்கிறாரா? அவர் மறுபடியும் என்னை மன்னிப்பார் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?” மார்கரெட் அத்தை: “நிச்சயமாக ரூத்! நீ உண்மையாகவே மனம்வருந்தி, ஆண்டவர் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உன்னை மன்னிப்பார்”. ரூத் விண்ணப்பம் செய்தாள். தனது அத்தையிடம் தன்னை மன்னிக்கும்படி கேட்டாள். பின்பு அவள் மன அமைதியுடன் தூங்கினாள். அடுத்த நாள் எழுந்தாள். ரூத்தும், பிலிப்புவும் காட்டு மரங்களில் இருந்த தங்கள் இரகசிய இடத்திற்குச் செல்ல திட்டம் பண்ணினார்கள். மிகவும் சீக்கிரமாக உடன் பிறந்தோர் செயல்பட ஆரம்பித்தார்கள். அவர்களின் செவ்விந்திய கூடாரம் மிகவும் சிறப்பாக இருந்தது. பிலிப்பு வாசல் வழியே ஊர்ந்து சென்றான். அவன் அதே வழியில் வெளியே வந்தான். பிலிப்பு: “யாரோ அங்கே இருக்கிறார்கள். வெளியே வாருங்கள்! இது எங்களுடைய கூடாரம்!” டெர்ரி: “உங்கள் கூடாரம் ஒன்றும் எனக்குத் தேவையில்லை. நான் இதைவிட அருமையான ஒன்றைக் கட்டுவேன்”. அவர்கள் கூடாரத்தில் இருந்து கிழிந்த சட்டையுடன் ஒரு பையன் தவழ்ந்து வெளியே வந்தான். அவனுக்குப் பத்து வயது நிரம்பியிருக்கும். பிலிப்புவிற்கும், ரூத்திற்கும் அவனை மிகவும் பிடித்துவிட்டது. டெர்ரி அவர்களின் சிறந்த நண்பனாக மாறினான். அவர்கள் தங்கள் இடத்தை அவனுக்கும் கொடுத்தார்கள். காட்டு மரங்களில் உள்ள இரகசியங்களை அவனுக்குக் காண்பித்தார்கள். டெர்ரி ஒரு குரங்கைப் போல் ஏறினான். எவ்வளவு உயரமான மரமும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. பிலிப்பு: “காத்திரு! டெர்ரி! எதையும் செய்யாதே! அந்தக் கிளை மிகவும் மெல்லியதாக உள்ளது”. (கிளை உடையும் சத்தம்) அது உடைந்தது. டெர்ரி கீழே தரையில் விழுந்தான். அவன் பேச்சு மூச்சற்றவனாக கிடந்தான். பிலிப்பு: “ரூத்! அவனுக்கு உயிர் இருக்கிறது. இவனுடன் நீ இரு. நான் போய் ஏதாவது உதவி பெற முடியுமா? என்று பார்க்கிறேன்”. ரூத் டெர்ரியை நினைத்து பயந்து, விண்ணப்பம் செய்தாள். ரூத்: “ஆண்டவராகிய இயேசுவே, டெர்ரி சாகாதபடி காத்துக்கொள்ளும். நான் அவனுக்கு உம்மைக் குறித்து சொல்ல விரும்புகிறேன். அப்போது அவன் உமது ஆடுகளில் ஒன்றைப் போல மாறுவான்”. இறுதியாக உதவி கிடைத்தது. டெர்ரியை ஒரு படுக்கையில் போட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பிலிப்பு: “ரூத், டெர்ரி இறந்துவிடுவான் என்று நீ நினைக்கிறாயா?” அடுத்த நாடகத்தில் நீ தொடர்ந்து காண்பாய். மக்கள்: உரையாளர், ரூத், மார்கரெட் அத்தை, பிலிப்பு, டெர்ரி. © Copyright: CEF Germany |