STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 166 (Must Terry die 4) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
166. டெர்ரி இறந்துவிடுவானா 4பிலிப்பு: “ரூத்! டெர்ரி இறந்துவிடுவான் என்று நீ நினைக்கிறாயா?” ரூத்: “இல்லை. இயேசு அவனை குணமாக்கும்படி நான் மன்றாடியுள்ளேன்”. பிலிப்பு: “நானும் அப்படிச் செய்தேன். ஆனால் இயேசு அப்படிச் செய்வாரா என்பது எனக்குத் தெரியவில்லை”. ரூத்: “நீ நல்ல மேய்ப்பனின் ஆட்டைப் போல இருந்தால், அவர் எப்போதும் உன் சத்தத்தைக் கேட்கிறார்”. பிலிப்பு: “இது எப்படி முடியும்?” ரூத்: “நீ அவருக்குச் சொந்தமாக விரும்புகிறாய் என்பதை அவரிடம் சொல்”. போதகர் தனக்குக் கொடுத்திருந்த நல்ல மேய்ப்பன் படத்தை, ரூத் தனது சகோதரனுக்கு காண்பித்தாள். பிலிப்பு நீண்ட நேரம் அதை பார்த்துக் கொண்டே இருந்தான். பிலிப்பு: “ஆமாம்! நானும் அதைச் செய்ய விரும்புகிறேன். என்னைத் தனியாக இருக்கவிடுங்கள்”. அவனுடைய பிரகாசமான முகம், அவன் இயேசுவுக்கு சொந்தமாகிவிட்டான் என்பதைக் காண்பித்தது. டெர்ரியிடம் இருந்து வந்த கடிதம் இருவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. “பிரியமுள்ள பிலிப்பு, பிரியமுள்ள ரூத், நான் இனிமேல் மருத்துவமனையில் இருக்க மாட்டேன். என்னை வந்து பாருங்கள். எனது முகவரி காட்டு மரங்களின் இடையிலிருக்கும் கிரீக்கில் உள்ள பிர்ச் கூடாரம். உங்கள் அன்புள்ள டெர்ரி”. கிரீக்கில் உள்ள பிர்ச் கூடாராமா? அவர்களின் நண்பன் ராம்சாக்கிள் கூடாரத்தில் வசித்து வந்தான். பிலிப்பு கவனமாய் கதவைத் தட்டினான். (கதவைத் தட்டும் சத்தம்) அம்மா: “உனக்கு என்ன வேண்டும்?” ரூத்: “டெர்ரி எங்களை அழைத்திருக்கிறான்”. அம்மா: “டெர்ரிக்கு விபத்து ஏற்பட்டபோது, உடனிருந்த சிறுபிள்ளைகள் நீங்கள் தானா? உள்ளே வாருங்கள்”. டெர்ரி செயலற்றவனாக படுக்கையில் இருந்தான். அவன் உடல் மெலிந்துக் காணப்பட்டான். தனது இரண்டு நண்பர்களைப் பார்த்தவுடன் அழுதான். அவனிடம் என்ன பேசுவது என்று பிலிப்புவிற்கும், ரூத்திற்கும் தெரியவில்லை. அந்த அறை பொலிவிழந்து காற்றோட்டம் இன்றி காணப்பட்டது. டெர்ரிக்கு அநேக திட்டங்கள் இருந்தன. அவன் மதிய உணவின் போது ஒரு ரொட்டியுடன் தேநீரும் அருந்தினான். டெர்ரி மிகவும் ஏழை என்பதை பிலிப்பு, ரூத் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. வீட்டிற்கு வந்து மார்கரெட் அத்தையிடம் அனைத்தையும் கூறினார்கள். தினமும் டெர்ரியை சந்திக்க தீர்மானித்தார்கள். பிலிப்பு: “மரங்களின் படங்கள் வரையப்பட்டுள்ள எனது ஆல்பத்தை நான் கொண்டு வருகிறேன்”. ரூத்: “நான் ஆப்பிள்கள் கொண்டு வருவேன். மேலும் நல்ல மேய்ப்பன் கதையுடன் கூடிய வேதாகமம் கொண்டு வருவேன்”. பிலிப்பு: “நாம் சேமித்து வைத்ததில் இருந்து ஐநூறு ரூபாயை அவனுடைய அம்மாவிடம் கொடுப்போம். டெர்ரிக்கு பால் மற்றும் உணவு வாங்க உதவியாயிருக்கும்”. ரூத்: “முந்நூறு ரூபாய் போதுமானதாக இருக்காதா?” பிலிப்பு: “நாம் எல்லாவற்றையும் எடுத்துச்செல்வோம். போகும் வழியில் தீர்மானிப்போம்”. அவர்கள் அப்படியே செய்தார்கள். அடர் காட்டுப் பகுதியின் நடுவில் செல்லும் போது அவர்கள் வழியில் யாரை சந்தித்தார்கள் என்பதை உன்னால் யூகிக்க முடிகிறதா? அடுத்த நாடகத்தில் நீ அதைக் காண்பாய். மக்கள்: உரையாளர், பிலிப்பு, ரூத், அம்மா. © Copyright: CEF Germany |