STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 140 (Dream job 1) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
140. கனவு வேலை 1கவனமாக இரு. தேநீர் சூடாக உள்ளது. (கரண்டி வைத்து தேநீரை கலக்கும் சத்தம்) ஹட்சனுக்கு நாக்கு வெந்துவிட்டது. இங்கிலாந்தில் ஹட்சன் குடும்பத்திற்கு அது தேநீர் நேரமாக இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் அற்புதமான நேரம் அது. அந்த நேரத்தில் அப்பா அவர்களுக்கு தூரதேசமாகிய சீனாவைக் குறித்து அடிக்கடி சொல்லுவார். திடீரென்று அவர் அமைதியானார். அப்பா: “என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஏன் சீனாவிற்கு நற்செய்தியாளர்கள் போவதில்லை? மில்லியன் கணக்கான சீனர்களுக்கு இயேசுவைக் குறித்து சொல்லப்படவே இல்லை”. ஹட்சன்: “அப்பா, நான் வளர்ந்து பெரியவனாகும் போது, சீனாவிற்கு நற்செய்தியாளராகப் போவேன்”. ஐந்து வயது பையனின் வார்த்தைகளைக் கேட்டு பெற்றோர்கள் புன்முறுவல் பூத்தார்கள். அவனுக்கு அடிக்கடி வியாதி ஏற்படும். ஒரு நற்செய்தியாளராக அவன் மாறுவது கூடாத காரியம். ஹட்சன் பள்ளிக்குப் போகவில்லை. எனவே அவனுடைய அம்மா அவனுக்கு வீட்டில் கற்றுக்கொடுத்தாள். ஹட்சன் ஒரு புத்தகப்புழு. ஹட்சன்: “என்னால் இரவு படுக்கையில் தான் வாசிக்க முடியும். ஆனால் எப்போதும் அம்மா விளக்கை எடுத்துச் சென்றுவிடுவாள். எனவே ஒரு ஜோடி பழைய மெழுகுவர்த்தி விளக்கை நான் வாங்கப்போகிறேன்”. அன்று இரவு அவன் இரகசியமாக தனது கால் சட்டையின் பாக்கெட்டை நிரப்பினான். அன்று குட்நைட் சொல்லும் முன்பாகவே, அவன் தனது அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான். என்னே துரதிர்ஷ்டம்! அவனது வீட்டு விருந்தினர் ஒருவர் ஹட்சனை தூக்கி தனது மடியில் வைத்தார். அவர் நெருப்பினருகே உட்கார்ந்து கொண்டிருந்தார். ஹட்சனுக்கு சூடு ஏறியது. அவனுடைய மெழுகுவர்த்தி விளக்கிற்கும் சூடு ஏறியது. அவனுக்கு நிமிடங்கள், மணிக்கணக்காகத் தோன்றியது. அம்மா: “ஹட்சன், இப்போது படுக்கைக்குச் செல்லும் நேரம்”. ஹட்சன்: “குட்நைட்!” உடனடியாக அவனுடைய பாக்கெட்டில் மெழுகு உருகியிருப்பதை அவனுடைய அம்மா கண்டுகொண்டாள். நடந்த காரியத்திற்காக ஹட்சன் மனம் வருந்தினான். அவன் மறுபடியும் அதைச் செய்யவில்லை. புத்தகப்புழுவிற்கு இன்னொரு பழக்கம்: இருந்தது. அவனது சகோதரி அமெலியைக் கோபப்படுத்துவது. ஆனாலும் அநேக நேரங்கள் அவர்கள் பிரியாமல் இணைந்திருப்பார்கள். பூச்சிகள் மற்றும் பறவைகளை கவனித்துப் பார்ப்பார்கள். ஹட்சன் 13 வயது நிரம்பிய போது, பார்மசி படிக்க ஆரம்பித்தான். அவன் எதிர்காலத்திற்கான பெரிய திட்டம் வைத்திருந்தான். ஒரு குறிப்பிட்ட விடுமுறைநாளில் அவனுடைய முழு வாழ்க்கையும் மாறியது. அவன் ஒரு கிறிஸ்தவ நூலை வாசித்தான். ஹட்சன் மீது வைத்திருந்த அன்பினால் இயேசு மரித்து உயிர்த்தெழுந்தார் என்பதை அவன் உடனடியாக புரிந்துகொண்டான். ஹட்சன்: “ஆண்டவராகிய இயேசுவே, என்னை நேசிப்பதற்கு நன்றி. நான் உமக்குச் சொந்தமாயிருக்க விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் சொல்கிறீரோ, அதை நான் செய்வேன் ஆமென்”. அவன் இந்த விண்ணப்பத்தை செய்த பின்பு, இயேசு இப்படிக் கூறினார்: எனக்காக சீனாவிற்குச் செல். நற்செய்தியாளராக இருப்பது அவனுக்கு ஐந்து வயதிலிருந்தே பெரிய ஆசையாக காணப்பட்டது. அவனுக்கு 17 வயது ஆன போது, அவன் எதிர்காலத்திற்காக தன்னை ஆயத்தம்பண்ணினான். அவனுடைய பயிற்சி ஒருவேளை உனக்கு ஊக்கத்தை அளிக்கும். அதைக்குறித்து அடுத்த நாடகத்தில் நான் உங்களுக்கு சொல்வேன். நீ அதை தவறவிட்டுவிடாதே! மக்கள்: உரையாளர், அப்பா, ஹட்சன், அம்மா. © Copyright: CEF Germany |