STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 139 (The King’s invitation 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
139. இராஜாவின் அழைப்பு 2இராஜாவின் இரதம் தெருக்களின் வழியே கடந்து சென்றது. திரைகள் விலக்கப்பட்டன. ஜன்னல் திறக்கப்பட்டது. என்ன நிகழப்போகிறது என்பதைக் காண மக்கள் ஆர்வமுடன் இருந்தார்கள். பெண்: “லோதேபாரில் ராஜாவின் செய்தியாளர்கள்? அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!” அயலகத்தார்: “அவர்கள் யாரை பார்க்கப் போகிறார்கள்? ஒருவேளை நகரத்தலைவனோ?” அவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம், அந்த இராஜரதம் மேவிபோசேத் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்றது. தாவீது இராஜா அவனுக்கு அழைப்பு கொடுத்திருந்தான். மேவிபோசேத்தால் இதை நம்பவே முடியவில்லை. ஒரு முடவன், புறக்கணிக்கப்பட்டவனுக்கு ராஜாவின் அழைப்பு கிடைத்தது. இது நிச்சயம் அற்புதமானது. நீ பொறாமைப்படத் தேவையில்லை. நீயும் அழைக்கப்படுகிறாய். ஒரு நீதியுள்ள இராஜா! நித்தியமான இராஜா உன்னை அழைக்கிறார். இயேசு இராஜாதி இராஜா! மேவிபோசேத் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டான். நீயும் ஒருவேளை முக்கியமற்றவனாகக் கருதப்படலாம். அவர் அழைப்பை ஏற்றுக்கொள். முடவன் இராஜாவிடம் கொண்டுவரப்பட்டான். தாவீது: “மேவிபோசேத், பயப்படாதே. நான் உனக்கு இரக்கம் காண்பிக்க விரும்புகிறேன்”. மேவிபோசேத்: “ஆனால் நான் அதற்குத் தகுதியானவன் அல்ல”. தாவீது: “நான் உனக்கு நிலம் தருகிறேன். எனது வேலைக்காரர்கள் அதில் விதைத்து, அறுவடை செய்வார்கள். அவைகள் எல்லாம் உனக்குச் சொந்தம்”. தாவீது இராஜா மேவிபோசேத்தை அழைத்தது மட்டும் அல்ல, அவனுக்கு பரிசுகளையும் கொடுத்தான். நித்தியமான இராஜா இயேசு உன்னை அழைக்கிறார். உனக்கு பரிசுகளை வழங்க விரும்புகிறார். அவருடைய பரிசுகள் விலைமதிக்க முடியாதவை. மன்னிப்பு, மகிழ்ச்சி, சமாதானம், நிலைவாழ்வு … நான் அதை முழுவதும் பட்டியலிட முடியாது. இயேசுவிடம் வா. அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள். இராஜாவின் அழைப்பையும், அவருடைய இரக்கத்தையும் மேவிபோசேத் எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் சிறப்பான ஒரு காரியம் அவனுக்கு நேரிட்டது. தாவீது: “மேவிபோசேத், நீ என்னுடன் வந்து வாழும்படி விரும்புகிறேன்”. காணஇயலாத இராஜா இயேசு உன்னை ஞாயிற்றுக்கிழமை மட்டும் சந்தித்துப் போக விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் உன்னுடன் இருக்க விரும்புகிறார். நீ அதை விரும்புகிறாயா? உனது இருதயம் மற்றும் எண்ணங்களில் எப்போதும் நீ அவருடன் இருக்கிறாயா? இயேசு உனது வாழ்வை நன்றாக ஆளுகை செய்வார். அவரை விட ஒரு சிறந்த இராஜாவை நான் அறியவில்லை. தாவீது இராஜாவின் அழைப்பு மேவிபோசேத்தின் வாழ்வை முற்றிலும் மாற்றியது. ஆண்டவராகிய இயேசுவின் அழைப்பு உனது வாழ்வையும் முற்றிலும் மாற்றிவிடும். இயேசு உன்னை அழைக்கிறார். உனக்கு இரக்கம் காண்பிக்க விரும்புகிறார். நீ எப்போதும் அவருடன் இருக்க விரும்புகிறார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள். நீ விண்ணப்பத்தின் மூலம் உனது பதிலை அவருக்கு தெரிவிக்கலாம். இயேசு இராஜா உன் சத்தத்தைக் கேட்கிறார். மக்கள்: உரையாளர், பெண், அயலகத்தான், தாவீது, மேவிபோசேத். © Copyright: CEF Germany |