Home -- Tamil? -- Perform a PLAY -- 146 (Speaking stones 1)
146. பேசும் கற்கள் 1
நீ ஏதாவது சேகரித்திருக்கிறாயா? தபால்தலைகள் அல்லது காசுகள்? ஜாக்கின் அலமாரி முழுவதும் கற்கள் காணப்பட்டன.
ஆன்ட்ரியா: “ஆ! இவ்வளவு கற்களை நீ எங்கு வாங்கினாய்?”
ஜாக்: “மலை சுற்றுலா சென்ற போது இதைக்கண்டு எடுத்தேன். அந்த கல் பெர்லின் சுவர் அருகே இருந்தது. எகிப்தில் பள்ளத்தாக்குகளின் ராஜா என்ற இடத்தில் எனது மாமா இதை வாங்கி வந்தார்”.
ஆன்ட்ரியா: “ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளது. அதன் அளவு, நிறம் மாறுபடுகிறது”.
ஜாக்: “அநேக கற்கள் எனது அனுபவத்தை நினைவுபடுத்துகின்றன”.
ஆபிரகாமும் கற்களை சேகரித்தார் என்பது உனக்குத் தெரியுமா? அவருடைய அலமாரியில் அல்ல. அது மிகவும் பெரிய கல். அவர் 4000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தார். சேகரிக்கப்பட்ட கற்கள் குறிப்பிட்ட இடங்களில் நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டன.
ஆன்ட்ரியா: “ஏன்?”
இறைவனின் சத்தம்: “ஆபிரகாம், உனது வீட்டையும், உனது இனத்தையும் விட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்குப் போ”.
ஆபிரகாம் இறைவனைக் காணவில்லை. ஆனால் அவருடைய சத்தத்தை தெளிவாகக் கேட்டான். தான் என்ன செய்ய வேண்டுமென்று அறிந்துகொண்டான்: எல்லாவற்றையும் விட்டுவிடு. இறைவன் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு சிறப்பானதொன்றை கொடுக்கும் முன்பு, அந்த நபர் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
இறைவனின் சத்தம்: “நான் உனக்கு புதிய தேசத்தைக் கொடுப்பேன். உன்னை பெரிய ஜாதியாக்குவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உனது பெயரைப் பெருமைப்படுத்துவேன்”.
ஆபிரகாம் தான் போகும் பாதை இன்னதென்று அறியாதிருந்தான். அவனும், அவனுடைய மனைவியும் தங்கள் சொந்த நாட்டை விட்டுப் புறப்பட்டார்கள். ஏனெனில் அவன் இறைவனை விசுவாசித்தான், இறைவனுக்கு கீழ்ப்படிந்தான்.
நீண்ட பயணத்திற்குப் பின்பு, இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாட்டிற்கு ஆபிரகாம் வந்து சேர்ந்தார்.
அவனிலிருந்து ஒரு பெரிய தேசம் உருவாகும் என்பதை அவன் கற்பனை செய்து பார்த்தானா? அந்த நாட்டில் இருந்து நமது இரட்சகர் நீண்ட ஆண்டுகள் பின்பு தோன்றினார். அதை அவன் கற்பனை செய்து பார்த்தானா?
இந்த அந்நிய தேசத்தில், ஆபிரகாம் மீண்டும் அந்த தெளிவான சத்தத்தைக் கேட்டான்.
இறைவனின் சத்தம்: “நான் இந்த நாட்டை உனது சந்ததிக்கும் கொடுப்பேன்”.
இப்போது ஆபிரகாம் மிகவும் நிச்சயத்துடன் இருந்தான். இது தான் சரியான வழி. அவனுடைய இலக்காக இறைவன் இருந்தார். ஒரு பலிபீடத்தைக் கட்டியது தான் முதலாவது அவன் செய்த காரியம் ஆகும். அவன் ஒரு கல்லை நட்டு வைத்தான். அது இறைவனையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் அவனுக்கு நினைவுபடுத்தியது. மேலும் தென்புறத்திலும் ஒரு நினைவுக்கல்லை நாட்டினான்.
நீயும் கற்களை சேகரித்து வைத்துள்ளாயா? நீ இறைவனுடன் பெற்றிருக்கும் அனுபவத்தை அது நினைவுபடுத்தும், உதாரணத்திற்கு அவர் விண்ணப்பத்திற்கு பதில் கொடுக்கும்போது அல்லது அவர் உன்னைப் பாதுகாக்கும்போது உனது அலமாரியில் ஒரு சிறிய கல்லை வைக்கலாம். இந்த கற்கள் உனக்கு இறைவனை நினைவுபடுத்தும். நீ தொடர்ந்து அவரை நம்பும்படியும், அவருக்காக வாழும்படியும் உன்னை உற்சாகப்படுத்தும்.
இதற்குபின்பு ஆபிரகாமிற்கு என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் நீ கேட்பாய்.
மக்கள்: உரையாளர், ஆன்ட்ரியா, ஜாக், இறைவனின் சத்தம்.
© Copyright: CEF Germany