Home -- Tamil? -- Perform a PLAY -- 149 (It‘s difficult for Inam 1)
149. இனாமுக்கு கடினமான நேரம் 1
துணிக்கூடை நிறைந்து காணப்பட்டது. இனாம் அதை ஆற்றுக்கரைக்கு சுமந்துசென்றாள். அங்கே அவள் அழுக்குத் துணிகளை வெளியே எடுத்தாள். அதை நீருக்குள் நனைத்து, பெரிய கல்லின் மீது வைத்து துவைத்தாள்.
இது கடினமான பணி. அந்தக்காட்டில் வாஷிங் மெஷின் எங்கும் இல்லை. இனாமின் பழுப்பு நிற முகத்தில் இருந்து கண்ணீர் வந்தது. அவள் மறுபடியும் மோசமான அடிகளை வாங்கினாள். இனாம் வயல்வெளிகளை நோக்கிப் பார்த்தாள். நெற்செடிகள் சிறியவைகளாக இருந்த காலத்தை நினைத்துப்பார்த்தாள்.
(நினைக்கும் போது பின்னணி இசை சத்தம்)
இனாம்: “வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தோனேஷியாவிற்கு வந்தார்கள். மரத்தினால் ஒரு சிறிய சபையைக் கட்டினார்கள். அனைவரும் அங்கே வர முடிந்தது. அந்த இடத்தில் இருந்து வந்த அருமையான பாடல்களின் சத்தத்தை நான் கவனித்தேன். பிறகு நான் உள்ளே சென்றேன். இயேசுவைக் குறித்த அற்புதமான கதைகளைக் கேட்டேன். அவர் நமக்காக சிலுவையில் மரித்தார் என்பதை அறிந்தேன்.
நான் அவரை பின்பற்றத் தீர்மானித்தேன். அவருக்கு எனது வாழ்வைக் கொடுத்தேன். நான் விண்ணப்பம் பண்ணியதை என்னுடைய பெற்றோர்களிடம் சொன்ன போது, அவர்கள் என் மீது கடுங்கோபம் கொண்டு, என்னை அடித்தார்கள்”.
(பின்னணி இசை)
இனாம் அழுதாள். அடி வாங்கியதனால் அல்ல, தனது பெற்றோர்களை நினைத்து அழுதாள்.
இனாம்: “ஆண்டவராகிய இயேசுவே, எனது பெற்றோர்களும் உம்மை விசுவாசிக்கவும், உமக்காக வாழவும் விரும்புகிறேன். அவர்களும் ஒரு நாளில் பரலோகிற்கு வர வேண்டும். அவர்கள் இரட்சிப்பை இழந்து போகாதபடி காத்துக்கொள்ளும்”.
இனாம் துணிக் கூடையை தூக்கிக்கொண்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தாள்.
அம்மா (கோபத்துடன்): “நீ ஏன் இவ்வளவு தாமதமாக செயல்படுகிறாய்? போ! உடனே செல்! உணவு ஆயத்தம் செய்!”
மதிய உணவிற்குப் பின்பு இனாம் ஓய்ந்திருந்தாள்.
எல்லாம் அமைதியாய் இருந்த போது, அவள் ஜன்னல் வழியே ஏறி வெளியே சென்று பெரிய காட்டுக்குள் இருந்த சிறிய சபையை நோக்கிச் சென்றாள்.
(பின்னணி இசை)
அவள் ஆராதனையை தவிர்க்க விரும்பவில்லை. அவள் கற்றுக்கொண்ட பாடல்களும், வேத வசனங்களும் அவளுக்கு புதிய தைரியத்தைத் தந்தன. ஆனால் வீட்டில் அவளுடைய பெற்றோர்கள், அவளை அடிப்பதற்கு குச்சியுடன் காத்திருந்தார்கள்.
இனாம் இயேசுவுக்காக வாழ தீர்மானித்ததில் இருந்து, அவளுக்கு வாழ்க்கை கடினமாக இருந்தது. அவள் அடிக்கடி அடிகளை வாங்கினாள். ஆனாலும் இயேசுவை தொடர்ந்து நம்பினாள். அவள் வியாதிப்பட்ட போது, அவளுடைய அம்மா மந்திரவாதி மருத்துவரை அழைத்தாள். அவன் ஒரு பானத்தை தயார் செய்தான். ஏதோ ஒரு மந்திரத்தை ஓதினான்.
இனாம் இதைக் குடிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். மந்திரவாதி அந்த பானத்தை கொடுத்தான். அந்த நேரம் அவளது அம்மாவை அழைத்தாள்.
அம்மா: “நான் சமையலறைக்குச் செல்கிறேன். சோறு கொதித்துக் கொண்டிருக்கிறது?”
மந்திரவாதி அவளைப் பின்தொடர்ந்தான். உடனடியாக இனாம் ஜன்னல் வழியே அந்த பானத்தை வெளியே ஊற்றிவிட்டாள்.
யாராவது அதைக் கண்டுபிடித்தால் என்ன ஆகும்?
அடுத்து வரும் நாடகத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை நீ கேட்பாய்.
மக்கள்: உரையாளர், இனாம், அம்மா.
© Copyright: CEF Germany