Home -- Tamil? -- Perform a PLAY -- 148 (The hardest test 3)
148. இறைவகடினமான சோதனை 3
நான் சொல்வது சரியா? நீங்கள் கடினமாக ஒரு தேர்வை சந்திப்பதற்குப் பதிலாக அன்று பகலில் படுக்கையில் படுத்திருப்பதை விரும்புவாய் அல்லவா?
ஆபிரகாம் வித்தியாசமாக செயல்பட்டான். அவன் அதிகாலையில் எழுந்தான். அவனுடைய கணக்கு அல்லது அறிவியல் அறிவு சோதிக்கப்படவில்லை. இறைவன் அவனுடைய விசுவாசத்தை சோதித்தார்.
இறைவனின் சத்தம்: “ஆபிரகாம்!”
ஆபிரகாம்: “இதோ! நான் இருக்கிறேன்!”
இறைவனின் சத்தம்: “உனது நேச குமாரனும், ஒரே மகனுமாகிய ஈசாக்கை மோரியாவின் மலைகளில் நான் காண்பிக்கும் இடத்தில் எனக்காக அவனைத் தகனபலியிடு”.
இறைவனை அறியாதவர்கள் மற்றும் அவரை நேசிக்காதவர்கள் இறைவன் கொடூரமானவர் என்று நினைப்பார்கள். தன்னை சோதிப்பவரைக் குறித்து மோசமாக எதுவும் ஆபிரகாம் நினைக்கவில்லை.
வேதாகமம் நமக்கு எளிமையாகக் கூறுகிறது: ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தனது கழுதையின் மேல் சேணங்கட்டினான். அவன் தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு சென்றான். தனது மகன் ஈசாக்குடன் இரண்டு வேலைக்காரர்களை அழைத்துச் சென்றான்.
அவர்கள் கிட்டத்தட்ட 75 மைல்கள் தூரம் நடந்து சென்றார்கள். அது மிக நீண்ட பயணம். அவர்கள் எந்த நேரத்திலும் மீண்டும் திரும்பி வர சந்தர்ப்பம் இருந்தது. மூன்று நாட்களுக்குப் பின்பு, ஆபிரகாம் மலையைக் கண்டான். அவன் தன்னுடைய வேலைக்காரர்களை திரும்பிப் பார்த்தான்.
ஆபிரகாம்: “கழுதையுடன் இங்கே தங்கியிருங்கள். நானும், எனது மகனும் இறைவனை ஆராதிக்கப் போகிறோம். ஆராதித்த பின்பு உங்களிடத்தில் திரும்பி வருவோம்”.
நீ இதைக் கேட்டாயா? ஆபிரகாம் கூறினான். நாங்கள் மறுபடியும் திரும்பி வருவோம். இறைவன் மறுபடியும் ஈசாக்கிற்கு வாழ்வு தருவார் என்று அவன் உறுதியாக விசுவாசித்தான். மகன் விறகுக்கட்டையை சுமந்து வந்தான். எரிப்பதற்கு கரி நெருப்புத் துண்டுகள் மற்றும் கத்தியை அப்பா சுமந்து வந்தார். அவர்கள் இணைந்து நடந்தார்கள்.
ஈசாக்கு: “அப்பா!”
ஆபிரகாம்: “சொல்! என் மகனே!”
ஈசாக்கு: “விறகு இருக்கிறது, நெருப்பு இருக்கிறது. தகனபலிக்கான ஆடு எங்கே?”
ஆபிரகாம்: “என் மகனே! தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை இறைவன் பார்த்துக்கொள்வார்”.
இறைவன் காண்பித்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, அங்கே ஆபிரகாம் பலிபீடம் கட்டி, விறகுகளை அதன் மீது அடுக்கினான். தனது மகன் ஈசாக்கை கட்டி, பலிபீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மீது கிடத்தினான். பிறகு அவன் கத்தியை எடுத்தான்.
தூதன்: “ஆபிரகாமே! ஆபிரகாமே!”
ஆபிரகாம்: “இதோ! அடியேன்!”
தூதன்: “உனது மகன் மேல் கை போடாதே. உனது ஒரே மகனைவிட இறைவனை நீ அதிகமாக நேசிக்கிறாய் என்பதை இப்பொழுதே நான் காண்கிறேன்”.
ஆபிரகாம் மிகக் கடினமான தேர்வில் வெற்றி பெற்றான்.
அந்த மோரியா மலையில் இருந்து சில நூறு அடிகள் தூரம் அநேக ஆண்டுகள் கழித்து இறைவன் தமது ஒரே குமாரனாகிய இயேசுவை பலியிட்டார். நாம் அவரை விசுவாசித்து, அவருடைய பிள்ளைகளாக மாறும்படி இப்படிச் செய்தார். நீ இப்போது என்னுடன் விண்ணப்பம் பண்ண விரும்புகிறாயா?
“ஆண்டவராகிய இயேசுவே, ஆபிரகாமைப் போல நானும் உம்மை விசுவாசிப்பேன். இப்படிப்பட்ட விசுவாசத்தை உடைய ஒருவருக்கு என்ன நிகழும்?”
மக்கள்: உரையாளர், ஆபிரகாம், இறைவனின் சத்தம், ஈசாக்கு, தூதன்.
© Copyright: CEF Germany