STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 094 (Bad conscience 6) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
94. குத்தும் மனச்சாட்சி 6ரிங்கு நற்செய்தியாளரின் ஆர்கனை திருடியிருந்தான். இப்போது அவனது மனச்சாட்சி அவனை உறுத்தியது. திருடுதல் ஒரு மனிதனுக்கு சந்தோஷத்தை தராது. நீ இதை அறிந்துகொள்ள முடிகிறதா? நீ கடையில் ஏதாவது ஒரு பொருளை அல்லது அம்மாவிடமிருந்து பணத்தை திருடியுள்ளாயா? நீ அதை சரி செய்வதற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது. ரிங்கு இந்த வழியை தெரிந்து கொண்டான். அவன் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டான். அவன் திருடியதைத் திருப்பிக் கொடுக்க விரும்பினான். அவன் காளை வண்டியை எடுத்தான். ஆர்கன் பெட்டியை அதன் மீது வைத்தான். பட்டு: “ரிங்கு, நீ என்ன செய்கிறாய்?” ரிங்கு: “நான் அந்த ஆர்கனை மறுபடியும் கொடுக்கப்போகிறேன்”. பட்டு: “உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? நீ அதை திரும்பக் கொடுக்கிறாய் என்றால், எதற்காக அதைத் திருடினாய்? நீ இயேசுவை விசுவாசிக்க ஆரம்பித்ததில் இருந்து, உன்னை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”. ரிங்கு: “வண்டியில் ஏறு, நாம் போகும் வழியில் உனக்கு நடந்த எல்லாவற்றையும் கூறுகிறேன்”. ரிங்கு வேகமாக நகரத்தை நோக்கிச் சென்றான். திருமதி மெர்ரியை அங்கே சந்தித்தது அவனுக்கு மகிழ்ச்சி. அவள் இந்தியாவில் வேதாகம மொழிபெயர்ப்பு பணியை செய்தாள். திருமதி மெர்ரி: “ஹலோ! நீங்கள் இருவரும் வந்திருப்பது மிகவும் சந்தோஷம். உங்கள் உதவி எனக்கு தேவை. எனது மொழிபெயர்ப்பில் சில குர்கு வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் எனக்கு உதவி செய்வீர்களா?” ரிங்கு: “நிச்சயம் செய்வோம். நான் முதலில் ஷாகிப் குரூப் அவர்களை பார்க்க வேண்டும்”. திருமதி மெர்ரி: “அவர் இங்கு இல்லை. அவர் வியாதியுடன் இருந்தார். எனவே அமெரிக்காவில் உள்ள தனது வீட்டிற்கு ஆகாய விமானம் மூலம் சென்றுவிட்டார். மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஷாகிப் குரூப் இப்போது பரலோகில் இருக்கிறார்”. ரிங்கு: “ஷாகிப் பரலோகத்திலா? ஆண்டவராகிய இயேசுவுடனா? அவர் நிச்சயம் அங்கு மகிழ்ச்சியுடன் இருப்பார். அவரை இனிமேல் இங்கு நாம் பார்க்க முடியாது”. திருமதி மெர்ரி: “ஆமாம். இனிமேல் அவரை இங்கு காண முடியாது”. இந்த செய்தி ரிங்குவிற்கு பெரிய வருத்தத்தை அளித்தது. அவன் கதறி அழுதான். திருமதி மெர்ரி: “இங்கு பார். அவரின் படம் ஒன்று என்னிடம் உள்ளது. உனக்கு அது வேண்டுமா?” ரிங்கு: “மிகவும் நன்றி! தாருங்கள். இது எனது ஷாகிப். இவர் தான் எனக்கு ஆண்டவராகிய இயேசுவைக் குறித்துக் கூறினார்”. திருமதி மெர்ரி: “ரிங்கு! இறைவன் உன் வாழ்விற்கான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். நீ மற்றவர்களுக்கு அவரைக் குறித்து சொல்ல வேண்டும்”. ரிங்கு: “நான் ஒரு ஆர்கனை திருடியுள்ளேன். அது வண்டியின் மீது உள்ளது”. ரிங்கு அதைக் கொண்டு வந்து கொடுத்தான். திருமதி.மெர்ரி அவனை மன்னித்தார். அவன் மனம் இலகுவானது”. ரிங்கு: “திருமதி மெர்ரி, நாங்கள் விடை பெறுகிறோம். அடுத்த முறை நாம் சந்திக்கும் போது இன்னும் நிறைய குர்கு வார்த்தைகளை கற்றுத்தருகிறேன். இப்போது நாங்கள் நெருப்பிற்கான விறகுகளை சேகரிக்க வேண்டும்”. அவன் பயணம் செய்யும் போது விண்ணப்பம் பண்ணினான். ரிங்கு: “நன்றி! ஆண்டவராகிய இயேசுவே! நீர் என்னை மன்னித்தீர். நான் ஆர்கனைத் திரும்பித் தந்ததை சொல்லுங்கள். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நான் உமக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன்”. பட்டு: “ரிங்கு! நீ எனக்கு ஆண்டவராகிய இயேசுவைப் பற்றி கூறுவாயா?” ரிங்கு: “ஆமாம். நான் ஒவ்வொரு நாளும் அவரைக் குறித்து சொல்ல விரும்புகிறேன்”. மக்கள்: உரையாளர், ரிங்கு, பட்டு, திருமதி மெர்ரி. © Copyright: CEF Germany |