STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 093 (The Kurku-promise 5) This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malagasy -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Sindhi -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
93. குர்கு – வாக்குத்தத்தம் 5சந்தோஷத்தின் மிகுதியால் ரிங்கு தனது கிராமத்தை நோக்கி ஓடினான். ரிங்கு: “புலி செத்துவிட்டது. புலி செத்துவிட்டது. நாங்கள் அதை கொன்றுவிட்டோம்”. தனது பெரிய அண்ணனைக் குறித்து பட்டு பெருமைப்பட்டான். பட்டு: “மிகவும் அற்புதம். அதை வேட்டையாடும் போது நீ பயந்தாயா?” ரிங்கு: “அதிக பயம். ஆனால் நான் விண்ணப்பம் பண்ணினேன். பின்பு என் இருதயம் வேகமாக துடிக்கவில்லை”. (மோட்டாரின் சத்தம்) ரிங்கு: “அது நிச்சயம் அந்த வெள்ளை மனிதன் ஷாகிப் குரூப் தான். அவர் தான் எனக்கு இயேசுவைப் பற்றி கூறியவர்”. பட்டு: “வா! சீக்கிரம் அவரிடம் ஓடிச் செல்வோம்”. இரண்டு இந்திய சிறுவர்களும் அடுத்த தெரு முனையை நோக்கி ஓடினார்கள். அப்போது அவர்கள் ஒரு காரியத்தை கண்டார்கள். அந்த நற்செய்தியாளரின் ஜீப் சகதிக்குள் மாட்டிக்கொண்டது. ரிங்கு காளைகளைப் பயன்படுத்தி, அந்த ஜீப்பை வெளியில் கொண்டு வந்தான். ஷாகிப் குரூப்: “நல்லது. ரிங்கு! உனது உதவிக்கு மிகவும் நன்றி. நான் இன்று உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். இனி நீண்ட காலம் நாம் ஒருவரையொருவர் காண முடியாது. ஆண்டவராகிய இயேசு எப்போதும் உன்னுடன் இருக்கிறார் என்பதை நினைவிற்கொள். அவருக்கு உண்மையாய் இரு. அவருக்கு பிரியமானதை செய். பாவம் உனக்கு சந்தோஷத்தை தராது. அந்த இறைவனின் கடிதத்தை நீ இன்னும் வைத்திருக்கிறாயா?” ரிங்கு: “ஆமாம். நான் எனது டர்பனில் அதை வைத்திருக்கிறேன்”. ஷாகிப் குரூப்: “இறைவனின் வார்த்தையை உனது இருதயத்தில் வைத்துக்கொள். நீ அதை சார்ந்து இரு. அப்புறம் ஒரு விஷயம், எனது ஆர்கனைக் காணவில்லை”. ரிங்குவிற்கு தர்ம சங்கடமாகி விட்டது. அவன் தான் திருடன். அவன் ஒரு பழைய பொருட்கள் இடத்தில் அதை மறைத்து வைத்திருந்தான். ஷாகிப்பிற்கு இது தெரியுமா? ஷாகிப் குரூப்: “அதைத் தேடுவதற்கு எனக்கு நேரம் இல்லை. நீ எனக்காக அதைத் தேடுவாயா? நீ அதைக் கண்டுபிடித்தால், நகரத்தில் இருக்கும் திருமதி. மெர்ரியிடம் கொண்டு வா. நான் பிரசங்கம்பண்ணும் இடத்தை அவள் அறிந்திருப்பாள். என்னிடம் அதை கொடுத்து விடுவாள்”. ரிங்கு தனது தோளை ஒருபுறம் சாய்த்து அவருக்கு உறுதியளித்தான். இவ்விதமாகத் தான் ஒரு இந்தியன் வாக்குப்பண்ணுவான். ஒரு உண்மையான குர்கு- வாக்குத்தத்தம். மனச்சோர்வுடன் அவன் வீட்டிற்கு போனான். ரிங்கு: “நான் தான் திருடன் என்பதை நான் ஏன் ஒத்துக்கொள்ளவில்லை? நான் ஒரு மாய்மாலக்காரன். ஆண்டவராகிய இயேசுவே! நீர் இப்போதும் எனது சத்தத்தை கேட்கிறீரா? நான் திருடிவிட்டேன். என்னை மன்னியுங்கள். தயவாய் எனது பாவத்தை மன்னித்து, சரியானதைச் செய்ய உதவுங்கள்”. இந்த விஷயத்தில் செய்ய வேண்டிய சரியான காரியம் என்ன? ரிங்கு உடனடியாக அதை அறிந்துகொண்டான். அவன் திருடியதை மறுபடியும் திரும்பக் கொடுக்க வேண்டும். ஆனால் அது கடினம். மற்றவர்கள் அவனைக் குறித்து என்ன நினைப்பார்கள்? அவன் தனது இருதயத்தில் ஒரு மெல்லிய சத்தத்தைக் கேட்டான். “அந்த ஆர்கனை எடுத்து உடனடியாக கொடுத்துவிடு”. நீயும் இப்படிப்பட்ட சத்தத்தை கேட்கிறாயா? ஏதாவது ஒன்றை திருடிய பின்பு, அதை எவ்விதம் சரி செய்வது? அடுத்த நாடகத்தில் நாம் அதைக் காண்போம். மக்கள்: உரையாளர், ரிங்கு, பட்டு, ஷாகிப் குரூப். © Copyright: CEF Germany |