Home -- Tamil? -- Perform a PLAY -- 163 (Secret in the Wilden woods 1)
163. அடர்ந்த காட்டுப் பகுதியின் இரகசியம் 1
மார்கரெட் அத்தை மீது ரூத் மன வருத்தத்துடன் இருந்தாள். அவள் தவறு செய்ததினால், படுக்கைக்கு இரவு உணவு இல்லாமல் செல்லும்படி தண்டனை பெற்றாள்.
அவளுடைய அறைக்கு பிலிப்பு இரகசியமாக வந்தான்.
பிலிப்பு: “ரூத்! இது உனக்குத் தான். நான் எனது பாக்கெட்டில் இதை மறைத்து வைத்திருந்தேன்”.
ரூத் மிகவும் பசியுடன் இருந்தாள். சான்ட்விச்சை எடுத்து சாப்பிட்டாள்.
ரூத்(வாயில் உணவுடன்): “பிலிப்பு, நான் நல்லவளாக இருக்க விரும்புகிறேன். ஏன் என்னால் முடியவில்லை?”
பிலிப்பு: “எனக்குத் தெரியவில்லை. நீ மனவருத்தமடைவதை நிறுத்த முயற்சிக்க வேண்டும். அப்போது நீ இப்படிப்பட்ட காரியங்களை சொல்ல மாட்டாய். நம்முடைய பெற்றோர்கள் வட இந்தியாவிற்கு நற்செய்தியாளர்களாக சென்றுள்ளதால், மார்க்ரெட் அத்தை நம்முடன் இருக்கிறார்கள்”.
ரூத் தனது வாயில் பாதி சான்ட்விச்சை வைத்திருந்தாள்.
திடீரென்று அவர்கள் மார்க்ரெட் அத்தை நடந்து வரும் சத்தத்தைக் கேட்டார்கள். பிலிப்பு தனது அறைக்கு ஓடினான். தனது சாதாரண ஆடையுடன் படுக்கையில் படுத்தான்.
மார்க்ரெட் அத்தை: “குட் நைட்! பிலிப்பு! குட் நைட் ரூத்!”
பிலிப்பு: “குட் நைட்! மார்க்ரெட் அத்தை!”
ரூத் தூங்குவது போல் நடித்தாள்.
அடுத்தநாள் காலையில், பிலிப்பு தங்கள் விடுமுறை சுற்றுலாவிற்கு திட்டம் போட்டான்.
பிலிப்பு: “நாம் அடர் காட்டுப் பகுதியில் மறைக்கப்பட்டுள்ள பொருள்களை கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேளை ஓடை அருகே பறவைகள் இருக்கலாம். நாம் ஒரு கூடாரத்தை உருவாக்குவோம். அது இயற்கை ஆய்வு மையமாக செயல்படும்”.
ரூத் மிகவும் ஆர்வத்துடன் இருந்தாள்.
மரங்களை நோக்கிச் சென்ற குறுகியப் பாதையில் இரண்டு பேரும் ஓடினார்கள். திரு.டேனரின் ஆட்டு மந்தையை ரூத் நின்று கவனித்தாள். ஒரு சிறிய ஆட்டுக்குட்டி அவளிடம் வந்து, அவள் கையைத் தடவியது. அதற்கு பெற்றோர்கள் இல்லை. சிலசமயம் அது ஓடிவிடும்.
பிலிப்பு: “வா! ரூத்! நமக்கு நிறைய நேரம் இல்லை”.
அவர்கள் கூடாரம் போட சிறந்த இடத்தைக் கண்டுபிடித்தார்கள். ரூத் மரக்கிளைகளை சேகரித்தாள். பிலிப்பு அவர்களுடன் சேர்ந்து செவ்விந்திய கூடாரத்தைக் கட்டினான். அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் இரகசிய இடத்திற்கு வந்தார்கள்.
ஒரு நாள் ரூத் வீட்டில் இருந்து, துணிகளை காயப்போட வேண்டியிருந்தது. அவள் அதை விரும்பவில்லை. அவள் கோபத்துடன் தூய்மையான துணிகளை கீழே விழும்படி செய்தாள்.
மார்கரெட் அத்தை: “நீ அதிக கவனமுடன் இருக்க வேண்டாமா? உனது செயலுக்காக மன்னிப்பு கேள்”.
ரூத்: “என்னால் மன்னிப்பு கேட்க முடியாது! மார்கரெட் அத்தை”.
மார்கரெட் அத்தை: “ரூத்! நான் நீண்ட காலமாக ஒன்றை யோசிக்கிறேன். நான் உன்னை தங்கும் விடுதிப் பள்ளிக்கு அனுப்பப் போகிறேன்”.
ரூத்: “அப்படியென்றால் நான் ஓடிவிடுவேன்”. (கதவை அடைக்கும் சத்தம்)
ரூத் கோபத்துடன் ஓடினாள். அதிக தூரம் சென்றாள். எங்கே? அவள் எங்கே இருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. ஆனால் மார்கரெட் அத்தையின் வார்த்தைகள் அவளை பின்தொடர்ந்தன.
(மெதுவான பின்னணி சத்தம்): நான் உன்னை தங்கும் விடுதிப் பள்ளிக்கு அனுப்பப் போகிறேன். அப்படியென்றால் நான் ஓடிவிடுவேன். நான் உன்னை தங்கும் விடுதிப் பள்ளிக்கு அனுப்பப் போகிறேன். அப்படியென்றால் நான் ஓடிவிடுவேன் …
அவள் ஓடிச்சென்றதினால் என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் நீ கேட்பாய்.
மக்கள்: உரையாளர், பிலிப்பு, ரூத், மார்கரெட் அத்தை.
© Copyright: CEF Germany