STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 162 (Detective seeks co-workers)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

162. துப்பறிவாளன் உடன் வேலையாட்களை தேடுகிறான்


அவன் சோர்ந்துபோய்விட்டான். அந்த அருமையான வேலையைச் செய்ய துணையாளர்கள் அவனுக்கு தேவைப்பட்டார்கள்.

நீ அவனுக்கு உதவ முடியுமா? எந்த நேரத்திலும் அவன் வரக்கூடும்.
(அழைப்பு மணியின் சத்தம்) நிச்சயம் அவனாகத்தான் இருக்க வேண்டும்.

துப்பறிபவன்: “ஹலோ ஸ்டெவி ஸ்னூப் என்பது என் பெயர். நான் துப்பறிபவன். எனக்கு உன் உதவி தேவை. நீ 1000 வழக்குகளின் தீர்வை காண வேண்டும்”.

உனது பணி மிகவும் பெரிய பணி.

துப்பறிபவன்: “ஏன் 999 மட்டும்! இது முதலாவது வழக்கு. இது மிகவும் இரகசியமானது. மிகவும் அவசரமானது. அறியப்படாத யாரும் அவனை நெருங்கிவிடக் கூடாது. அவன் ஏமாற்றுக்காரன், மக்களின் பணப்பையில் இருந்து பணத்தை எடுக்கும் தந்திரமிக்கவன். அவன் தொலை தூரத்தில் இல்லை. நீ அவனை பிடிக்க வேண்டும்”.

வேதாகமத்தில் நற்செய்தி நூல் லூக்கா அதிகாரம் 19 வசனம் 2-ல் இந்த மனிதனைக் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது.

உனது தேடும் பணியில் லூக்கா 19 வசனம் 2 உனக்கு உதவும்.

உனக்கு வேதாகமம் இல்லையென்றால், எனக்கு எழுது. நான் உனக்கு ஒரு வேதாகமம் அனுப்புவேன்.

துப்பறிபவன்: “இரண்டாவது வழக்கில் நீ கவனமாக இருக்க வேண்டும். இவன் ஆயுதங்களை பயன்படுத்துகிறான். அவன் அதிர்ச்சி தரும் வார்த்தைகளால் உயிருள்ள இறைவனை சபிக்கிறான். அவனுக்கான காலணிகளை தயார் செய்வது கடினம். அவன் காலணி அளவு கிட்டத்தட்ட 73 ஆகும்!”

வேதாகமத்தில் அவனை எங்கே காண முடியும் என்பதை எழுது:

1சாமுவேல் 17ம் அதிகாரம், வசனம் 4. நான் மறுபடியும் சொல்கிறேன் 1சாமுவேல் 17:4 வேதாகமத்தில் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால், பொருளடக்க அட்டவணையைப் பார்.

துப்பறிபவன்: “மூன்றாவது வழக்கு எனக்கு முக்கியமான ஒன்று. இந்த மனிதன் கடைசியில் ஆற்றினருகே காணப்பட்டான். அவனுடைய உடைகள் ஒட்டக மயிரால் செய்யப்பட்டிருந்தது. அவனுக்கு பிடித்த உணவு பிரியாணி அல்ல. வெட்டுக்கிளியும், காட்டுத் தேனும் அவனுக்குப் பிடிக்கும். (தொண்டையை சரி செய்யும் சத்தம், இருமல்)
அவன் ஒவ்வொருவரையும் இறைவனுடன் வாழும் படியும், தங்கள் பாவங்களில் இருந்து மனம்திரும்பும்படியும் அழைக்கிறான். அநேகர் அவனுக்கு செவிகொடுத்தார்கள். தங்கள் பாவங்களை அறிக்கையிட்டார்கள். இந்த நபரை நான் கண்டால் எனது மன அழுத்தம் சரியாகும்”.

மத்தேயு 3 வசனம் 1-ல் மேலும் குறிப்புகளை காணமுடியும். மத்தேயு 3:1.

வேதாகமத்தல் மத்தேயு 1 வசனம் 21-ல் இந்த நபர் யாருடன் இணைந்து செயல்பட்டான் என்பதை நீ காணமுடியும்.

நீங்கள் எங்களுக்கு அனுப்பும் பதிலை துப்பறியும் ஸ்டெவி ஸ்னூப் ஆவலுடன் எதிர்பார்க்கிறான்.

துப்பறிபவன்: “சரி! சீக்கிரம் செல்லுங்கள்! இந்த வழக்குகள் மிகவும் அவசரமானவை!”

இதைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெற வாழ்த்துகிறேன்.

துப்பறிபவன்: “துப்பறியும் ஸ்டெவி ஸ்னூப்”


மக்கள்: உரையாளர், துப்பறியும் ஸ்டெவி ஸ்னூப்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 27, 2018, at 12:16 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)