STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 161 (Can the dead live 2)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

161. மரித்தவன் உயிருடன் வாழ முடியமா 2


நீ விரும்பியது போல் இயேசு உனது விண்ணபத்திற்கு பதில் அளிக்கவில்லை யென்றால், நீ என்ன செய்வாய்? நீ அவரைக் குறித்து தவறாக நினைப்பாயா? இனி விண்ணப்பம் பண்ணக் கூடாது என்று நினைப்பாயா?

தனது சகோதரன் மரித்துவிட்டாலும், மார்த்தாள் இப்படிச் செய்யவில்லை. இறுதியில் இயேசு வந்த போது, லாசருவை அவர்கள் ஏற்கனவே அடக்கம்பண்ணியிருந்தார்கள்.

மார்த்தாள்: “இயேசுவே, நீர் இங்கே வந்திருந்தீரானால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்”.

இயேசு: “லாசரு மீண்டும் எழுந்திருப்பான்”.

மார்த்தாள்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனை இறைவன் எழுப்புவார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்”.

இயேசு: “நானே உயர்த்தெழுதலும், ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் மரித்தாலும் பிழைப்பான். நீ இதை விசுவாசிக்கிறாயா?”

மார்த்தாள்: “நீர் இறைவனுடைய குமாரன் என்பதை நான் விசுவாசிக்கிறேன்”.

இயேசுவை விசுவாசிப்பது தான் எப்போதும் நாம் செய்யும் சிறந்த செயல் ஆகும்.

சிலசமயங்களில் அவரைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அவரை விசுவாசிபபது தான் சிறந்த காரியம் ஆகும்.

மார்த்தாள் வீட்டை நோக்கி ஓடினாள்.

மார்த்தாள்: “மரியாள், இயேசு உனக்காக காத்திருக்கிறார்”.

(ஓடுகின்ற சத்தம்) தனது சகோதரன் மரித்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”.

அவள் தனது கண்களில் கண்ணீருடன் இயேசுவை நோக்கி ஓடினாள்.

மரியாள்: “இயேசுவே, நீர் இங்கே இருந்திருந்தீரானால், லாசரு மரித்திருக்கமாட்டான்”.

இயேசு: “அவனை எங்கே அடக்கம் செய்தீர்கள்?”

மரியாள்: “என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்”.

அந்தக் கல்லறையை நோக்கி அநேக அழுக்கின்ற மக்களும் கூடப் போனார்கள். கல்லறை பெரிய கல்லினால் மூடப்பட்டிருந்தது. அங்கே இயேசுவும் கண்ணீர்விட்டார்.

மனிதன்: “அவர் அழுகின்றார். அவனை அதிகமாக அவர் நேசித்தார்”.

மனிதன் 2: “அவனை சாகாமலிருக்க பண்ணக்கூடாதா?”

இயேசு: “இந்தக் கல்லை எடுத்துப்போடுங்கள்”.

மார்த்தாள் உடனே பதறினாள்.

மார்த்தாள்: “ஆண்டவரே! மரித்து நாலு நாளாயிற்றே! நாறுமே!”

இயேசு: “மார்த்தாளே, நீ என்னை விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய்”.

மோசமான காரியங்கள் நிகழ்ந்தாலும் இயேசுவை விசுவாசிப்பது எப்போதுமே சிறந்த காரியம். அவரைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், இயேசுவை விசுவாசிப்பது நாம் செய்யும் சிறந்த காரியம் ஆகும்.

மனிதர்கள் கல்லைப் புரட்டினார்கள். பின்பு இயேசு மேலே பார்த்தார்.

இயேசு: “பிதாவே, நீர் எப்போதும் எனது விண்ணப்பத்தைக் கேட்கிறீர். லாசருவே! வெளியே வா!”

ஒரு அற்புதம் நிகழ்ந்தது. மரித்த மனிதன் கல்லறையை விட்டு வெளியே வந்தான்!

இதைக் கண்ட அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள். என்ன நிகழ்ந்தாலும் சரி.

இயேசுவை விசுவாசிப்பது நாம் செய்யும் சிறந்த காரியம் ஆகும். நீ இயேசுவை விசுவாசிக்கிறாயா?


மக்கள்: உரையாளர், மார்த்தாள், இயேசு, மரியாள், இரண்டு மனிதர்கள்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 27, 2018, at 12:08 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)