Home -- Tamil? -- Perform a PLAY -- 144 (Totally in love 5)
144. முழுமையான அன்பு 5
ஹட்சன் டெய்லர் சோகத்துடன் கதவை அடைத்தார். அவர் சுங்மிங் தீவில் தனது நண்பர்களை விட்டுப்பிரிய வேண்டும். ஏனெனில பொறாமைப்பட்ட மனிதர்கள் உயர் நீதிபதியிடம் அவரைக் குறித்து தவறாக சொல்லியருந்தார்கள். அவர் அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
ஆனால் இறைவன் அவரை கைவிடவில்லை. அவர் தீமையிலிருந்தும் நன்மையைக் கொண்டு வரமுடியும்.
அவருடைய புதிய முகவரி நிங்பு நகரத்தில் உள்ள பிரிட்ஜ் தெரு ஆகும். அவர் மகிழ்ச்சியுடன் இயேசு இரட்சகரைக் குறித்து அங்கிருந்த சீனர்களுக்கு கூறினார்.
இறைவன் அனைத்தையும் செயல்படுத்துகிறார். எனவே சிறப்பான ஒரு காரியம் ஏற்பட்டது. சிறப்பான ஒரு நபர் வந்தார். இவருடைய வீட்டிற்கு அடுத்து ஒரு மிஷனரி பள்ளிக்கூடம் இருந்தது. இங்கிலாந்தில் இருந்து வந்த பெண் அங்கு கற்றுக்கொடுத்தாள். அந்த மகிழ்ச்சியான ஆசிரியை மீது ஹட்சனுக்கு காதல் உண்டானது. அவளும் இவரை நேசித்தாள். ஹட்சன் மேரியை திருமணம் செய்ய நினைத்தார். ஆனால் அதற்கு முன்பு அவள் சில காரியங்களை முதலாவது அறிக்கையிட வேண்டும்.
ஹட்சன்: “மேரி! நான் உனக்கு சில காரியங்களை சொல்ல வேண்டும். நான் பணக்காரன் அல்ல, எனக்கு ஏதாவது தேவைப்பட்டால், நான் இயேசுவிடம் அதை தரும்படி கேட்பேன். என்னை அவர் பராமரிக்கும்படி, அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்னிடம் நிறைய பணம் கிடையாது. ஆனாலும் நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா?”
மேரி: “ஆமாம்! நாம் இணைந்து அவர் மீது நம்பிக்கை வைப்போம். நமக்கு அதிகம் தேவைகள் கிடையாது. “இயேசுவை” நாம் சிறப்பானவராக பெற்றிருக்கிறோம்”.
அநேக நணபர்கள் திருமணத்திற்கு வந்தார்கள். தன்னை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசு சிறந்த காரியத்தைத் தருகிறார். அவருடைய வார்த்தையின் படி நடக்கிறவர்களுக்கு அவர் இதை வாக்குப்பண்ணுகிறார். எனவே தான் ஹட்சனும், மேரியும் தங்கள் வாழ்வை இயேசுவுக்கு கொடுத்தார்கள். ஹட்சன் வியாதியுற்றோர் மீது அக்கறை காட்டினார். அவர்களுக்கும் பிரசங்கித்தார். மேரி சிறுபிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தாள். அநேக சிறுவர், சிறுமியருக்கு ஆண்டவராகிய இயேசுவைக் குறித்து கற்றுக்கொடுத்தாள். ஏழைகளுக்கு உணவு கொடுத்தாள். ஹட்சனும், மேரியும் வேலை செய்வதில் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை. சீனர்கள் இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதைக் கண்டு அவர்கள் அதிகமாக சந்தோஷப்பட்டார்கள்.
ஆராதனைக்கு வரும்படியான அழைப்பாக ஒவ்வொரு மாலையும் மணிச்சத்தம் ஒலிக்கும் விக்கிரக வழிபாட்டாளர் நி என்பவர் சந்தோஷமான பாடல் சத்தத்தைக் கேட்டு வந்தார். தனது வாழ்வில் முதன் முறையாக இறைவனிடம் செல்லும் ஒரேவழி இயேசுவே என்பதைக் கேட்டார்.
நி: “டெய்லர், நான் நீண்ட காலமாக சத்தியத்தைத் தேடினேன். இயேசுவே சத்தியமானவர். நான் அவரை விசுவாசிக்கிறேன். இந்த சத்தியத்தை ஆங்கிலேயர்களாகிய நீங்கள் எத்தனை ஆண்டுகள் அறிந்திருக்கிறீர்கள்?”
ஹட்சன்: “சில நூறு ஆண்டுகள்”.
நி: “என்ன? அவ்வளவு நீண்ட காலமா? ஏன் இந்த சத்தியத்தைச் சொல்லும்படி முன்பே நீங்கள் வரவில்லை?”
இந்தக் கேள்வி ஹட்சனின் மனதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. இன்னும் சத்தியத்தை அறியாத மில்லியன்கணக்கான சீனர்கள் குறித்து அவர் சிந்தித்தார். அவர் வியாதிப்படும் அளவிற்கு கடினமாக உழைத்தார். எனவே அவர் மீண்டும் நல்ல நிலைக்கு வர இங்கிலாந்திற்கு செல்லும்படியான தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.
ஒருவர் வியாதிப்பட்டிருக்கும் போதும், இறைவன் சிறப்பான காரியத்தை செயல்படுத்த முடியுமா?
இதற்கான பதிலை அடுத்த நாடகத்தில் நீ கேட்பாய். அதைக் கேட்க மறந்துவிடாதே!
மக்கள்: உரையாளர், ஹட்சன் டெய்லர், மேரி, நி.
© Copyright: CEF Germany