Home -- Tamil? -- Perform a PLAY -- 143 (Like the Chinese 4)
143. சீனாக்காரனைப் போல 4
ஹட்சன் டெய்லர் தனக்கு ஐந்து வயதான போது, வளர்ந்த பின்பு என்னவாக மாறவிரும்பினார் என்பதை அறிந்திருந்தார்.
ஹட்சன்: “நான் பெரியவனான பின்பு, சீனாவிற்கு நற்செய்தியாளராகச் செல்வேன்”.
அவருக்கு 21 வயதான போது, சீனாவிற்கு பயணம் சென்று, அந்த மொழியைக் கற்றுக் கொண்டார். அநேக மக்களுக்கு இயேசுவைக் குறித்துக் கூறினார். இந்த சிறந்த பணி சில நேரங்களில் கடினமாக இருந்தது.
மனிதன்: “ஏய், இங்கு நீ என்ன செய்கிறாய்? அந்தப் பக்கம் போ!”
போர்வீரன்: “நாங்கள் வெளிநாட்டு பிசாசையும், அவனுடைய கூட்டாளிகளையும் கொல்லப்போகிறோம்”.
மனிதன்: “இல்லை! நாங்கள் அவர்களை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறோம்”.
கொடிய வீரர்கள் நற்செய்தியாளர்களை அடித்தார்கள். ஹட்சன் சாகும் அளவிற்கு அடித்தார்கள். கடுமையான வலி ஏற்பட்டது. இருப்பினும் அவர் நகைச்சுவை உணர்வுடன் பேசினார்.
ஹட்சன்: “என் கையைப்பிடி, என் நண்பனே, நமது டைரிகளில் இதைப்பற்றி எழுதலாம்”.
அவர்கள் இயேசுவின் அன்பை விட்டு விலகிச் சென்றார்கள். இயேசு ஒவ்வொருவரின் பாவங்களுக்கு சிலுவையில் மரிக்கும்போது, அதிக பாடுகள்பட்டார். ஹட்சன் இதை எண்ணிப்பார்த்தார். ஆண்டவராகிய இயேசுவை இன்னும் அதிகமாக நேசித்தார். அவர்கள் நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட போது, இது அவருக்கு அதிகப் பெலனைக் கொடுத்தது.
உயர் நீதிபதி அவர்களின் வாதங்களைக் கவனித்துக் கேட்டார்.
ஹட்சன்: “துங்ஸ்சௌ” வில் உள்ள மக்களுக்கு நாங்கள் இயேசு இரட்சகரைக் குறித்துச் சொல்ல விரும்பினோம். அவர் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். இது வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் இந்தப் புத்தகத்தை பரிசாக உங்களுக்குத் தருகிறோம்”.
உயர் நீதிபதி இதை விரும்பினார். அவர்களை அடிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு தேநீர் கொடுத்தார். சிறைச்சாலைக்குப் பதிலாக அவர்கள் இயேசுவைப் பற்றிப் பிரசங்கிக்கும்படி அனுமதித்தார்.
இயேசு காரியங்களை வாய்க்கப்பண்ணுகிறார். ஹட்சன் இதற்காக அவருக்கு நன்றி கூறினார். ஆனால் இதற்குப் பின்பு, அவர் வீட்டிற்குப் போனபோது, மிகவும் சோர்வுற்றார். அவருடைய சீன உதவியாளர் அவர் எப்படி அரிசி உணவு மற்றும் வாத்து முட்டைகளை குச்சிகளாய் பயன்படுத்தி உட்கொள்கிறார் என்பதைக் கண்டார்.
சீனர்: “டெய்லர், நீ எங்களைப் பேல் சாப்பிடுகிறாய். எங்களைப் போல் பேசுகிறாய். ஏன் எங்களைப் போல் நீ உடை அணியக் கூடாது?”
ஹட்சன்: “ஏன் கூடாது? இது நல்ல கேள்வி! நான் அணிகிறேன்”.
சீனர்: “நீ இதைச் செய்தால் மக்கள் நிச்சயம் நீ பேசுவதைக் கவனிப்பார்கள்”.
ஹட்சன்: “இயேசு பூமிக்கு வந்த போது, அவர் நம்மைப்போல மனிதனாக வந்தார். நம்மைப் போல அவர் மாறினார். நான் சீனரைப் போல மாற விரும்புகிறேன். இதைச் செய்ய நீங்கள் எனக்கு உதவுவீர்களா?”
இயேசுவின் மீதான அன்பினால் ஹட்சன் தனது ஆங்கில சூட்கோட்டை மாற்றி சீன உடையை அணிந்துகொண்டார். நீண்ட கருமையான மேலாடை அவரை மிகவும் அழகாகக் காண்பித்தது.
சீனர்: “இப்போது நீ சீனரைப் போல் காணப்படுகிறாய்!”
சுங்மிங் என்ற தீவில், ஹட்சன் டெய்லர் வேதாகமத்தை கற்றுக்கொடுத்தார். வியாதியுள்ளவர்களை பராமரித்தார். அங்கு திடீரென்று சில பிரச்சினைகள் ஏற்பட்டன.
பெண் 1: “நீ அதைக் கேட்டாயா? டெய்லர் நல்லவர். அவர் இந்த தீவை விட்டு வெளியேற வேண்டும்”.
பெண் 2: “நமது டாக்டர்கள் பொறாமைப்படுகிறார்கள். ஏனெனில் டெய்லர் அநேக நோயாளிகளை பராமரிக்கிறார். சிறந்த மருந்துகளைக் கொடுக்கிறார்”.
பெண் 1: “உயர் நீதிமன்றத்தில் அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள்”.
பிறகு என்ன? அடுத்த நாடகத்தில் நான் அதை உங்களுக்குச் சொல்வேன்.
மக்கள்: உரையாளர், ஹட்சன் டெய்லர் குழந்தையாக, ஹட்சன் டெய்லர் பெரியவராக, மனிதன், போர்வீரன், சீனர், பெண் 1, பெண் 2.
© Copyright: CEF Germany