STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 124 (The best counselor 1)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

124. சிறந்த ஆலோசகர் 1


ராஜா தேச மக்களை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகள் மும்முரமாக நடைப்பெற்றன. (பின்னனி இசை) கொடிகள் உயர்த்தப்பட்டன. சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. இஸ்ரவேலின் தென்பகுதியில் இருந்து யோசபாத் ராஜாவிற்கு பலத்த வரவேற்பு இருந்தது. இதற்குப் பின்பாக உள்ள அந்தக் காரணத்தை அவன் அறிந்துகொண்டானா? ஆகாப் ராஜா அதை சரியாகப் புரிந்து வைத்திருந்தான்.

ஆகாப்: “யோசபாத் ராஜா, ராமோத் எனக்குச் சொந்தமாக இல்லை. அது என்னை வேதனைப்படுத்துகிறது. அந்தப் பட்டணத்தை மீண்டும் பிடிக்க நீ எனக்கு உதவுவாயா?”

யோசபாத்: “நிச்சயமாக செய்யலாம். எனது இராணுவப் படைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பு இறைவனுடைய ஆலோசனையை நாம் கேட்க வேண்டும். அவர் விரும்புகிறதை மட்டும் நான் செய்ய விரும்புகிறேன”.

இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு முடிவு எடுப்பது எப்போதுமே சிறந்தது. யோசபாத் ராஜாவை உன் முன் மாதிரியாக எடுத்துக்கொள். அவனுடைய வெற்றியுள்ள வாழ்விற்கு இது தான் இரகசியம் ஆகும். ஒவ்வொருவரும் யோசபாத் ராஜாவை நேசித்தார்கள். அவனுக்கு மில்லியன் கணக்கான படைவீரர்கள் இருந்தார்கள். அவனுடைய எதிரிகள் அவனுடன் போரிட பயந்தார்கள். அவனுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பரிசுகள் குவிந்தன.

யோசபாத்தின் ஆலோசகராக இறைவன் இருந்தார். ஒவ்வொரு முடிவு எடுப்பதற்கும் அவன் இறைவனுடைய ஆலோசனையை நாடினான். ஆகாப் ராஜா முற்றிலும் வேறுபட்டவனாக இருந்தான். அவன் இந்த ஆலோசனையை விரும்பவில்லை. இறைவனின் வார்த்தையைக் கவனிக்கும்படி நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது, உங்களுக்கும் இது போன்ற அனுபவம் நேரிடலாம். ஆகாப் ராஜாவைப் போல் நாம் இல்லாமலிருப்பது நல்ல காரியம் ஆகும்.

ஆகாப்: “நாம் இந்தக் காரியத்தை செய்வோமா? நன்று! வேலைக்காரனே! தீர்க்கதரிசிகளை அழைத்து வாருங்கள்!” (காலடிச் சத்தம்)

ஆகாப்: “ராமோத் பட்டணத்தின் மீது தாக்குதல் தொடுக்கலாமா? வேண்டாமா?”

தீர்க்கதரிசி: “தாக்குங்கள்! உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்”.

ஆகாப் ராஜாவிற்கு சந்தோஷம் ஏற்பட்டது. ஆனால் யோசபாத் ராஜாவிற்கு அப்படி இல்லை. இது இறைவனின் சத்தம் இல்லை என்பதை அவன் அறிந்திருந்தான். இந்த 400 தீர்க்கதரிசிகளும் பொய்யர்களாக இருந்தார்கள். ஆகாப் எதைக் கேட்க விரும்பினானோ, அதை அந்தப் பொய்யர்கள் சொன்னார்கள். ஏனெனில் அதற்கான வெகுமதிகள் அவர்களுக்கு கிடைக்கும்.

யோசபாத்: “நாம் கேட்கக் கூடிய வேறு யாரேனும் தீர்க்கதரிசி இருக்கிறாரா?”

ஆகாப்: “இன்னும் ஒருவன் இருக்கிறான். நான் அவனை வெறுக்கிறேன். அவன் எப்போதும் அழிவுக்குரிய காரியங்களையே பேசுவான்”.

யோசபாத்: “அவனை அழைத்து வாருங்கள்”.

மிகாயா வந்தான். சில சந்தர்ப்பங்களில் இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி. நகைச்சுவையுடன் செயல்படுவது உண்டு.

ஆகாப்: “மிகாயா. நாம் ராமோத்தின் மீது தாக்குதல் தொடுக்கலாமா?”

மிகாயா: “நிச்சயமாக நீங்கள் எதிரியை தோற்கடிப்பீர்கள்!”

ஆகாப்: “நீ உண்மையை மட்டும் சொல்ல வேண்டும். இறைவன் உன்னிடம் என்ன சொன்னார்?”

அவன் உண்மையாகவே இறைவனின் ஆலோசனையைக் கேட்க விரும்பினானா? அவன் அதைக் கேட்க விரும்பினான். ஆனால் அதை செயல்படுத்த விரும்பவில்லை. மிகாயா இப்போது கோபம் கொண்டான்.

மிகாயா: “உன்னுடைய படைவீரர்கள் மேய்ப்பனற்ற ஆடுகளைப் போல மாறிவிடுவார்கள் என்பதை இறைவன் எனக்கு காண்பித்தார். ஆகாப் ராஜாவே, நீர் இல்லாமல் உமது படை மீண்டும் இங்கு திரும்பும்”.

ஆகாப் (கோபத்துடன்): “நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டீர்களா? அவன் எனக்கு மரணத் தீர்ப்பு கொடுக்கிறான். அவனை உடனடியாக சிறையில் தள்ளுங்கள்!”

என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் கேட்பீர்கள். நீங்கள் தொடர்ந்து கேட்பீர்களா?


மக்கள்: உரையாளர், யோசபாத், ஆகாப், மிகாயா, தீர்க்கதரிசி.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 27, 2018, at 08:07 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)