STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 123 (The runaway)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

123. ஓடிப்போனவன்


சிறிய பாதையின் வழியாக அவன் ஓடினான். கற்கள் இடறி தடுமாறினான். முட்கள் அவனது பாதத்தை பதம் பார்த்தன.

ஒநேசிமு (மூச்சிறைக்கும் சத்தம்): “நான் தப்பி வந்துவிட்டேன். நான் மிகவும் மனச்சோர்வுற்றிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கப் போகிறேன். தொலைதூரம் செல்லப்போகிறேன். யாரும் என்னைப் பிடித்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும்”.

ஓடிப்போகும் அடிமைகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பியால் ஒரு அடையாளத்தை அவர்களின் சரீரத்தில் போட்டு விடுவார்கள். இல்லையெனில் அவர்கள் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்படுவார்கள். எனவே தான் ஒநேசிமு மிகவும் வேகமாக ஓடிச் சென்றான்.

அவன் பெயரின் அர்த்தம் “பயனுள்ளவன்”. திருடிவிட்டு ஓடிப் போகின்ற ஒருவனுக்கு இப்பெயர் பொருந்துமா? வெளிநாட்டில் ஒரு புதிய வாழ்வைக் குறித்த கற்பனை அவனுக்கு இருந்தது. அவன் ரோமில் சென்று மறைந்து வாழ விரும்பினான். இந்தப் பெரிய நகரத்தில் ஒநேசிமு தனது எஜமானின் நண்பனிடமே செல்வான் என்று யார் நினைத்திருப்பார்?

பவுல்: “நீ ஒடி வந்திருக்கிறாயா?”

ஒநேசிமு: “நான் வாழ்வை அனுபவிக்க விரும்புகிறேன். நான் ஒரு அடிமையாக இருக்க விரும்பவில்லை”.

பவுல்: “அப்படியென்றால், உனது புதிய வாழ்வில் நீ இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறாயா?”

ஒநேசிமு: “நிச்சயமாக! மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் என்று நம்புகிறேன். நான் ஓடி வரவில்லையென்றால் எனக்குப் பணப்பிரச்சினை இருந்திருக்கும் … நான் தவறான வழியில் செல்லவில்லை என்று கருதுகிறேன்”.

பவுல்: “ஒநேசிமு! நீ புதிய வாழ்வை தவறான இடத்தில் தேடுகிறாய்”.

இயேசுவில் மட்டுமே புதிய வாழ்வைக் காண முடியும் என்பதை ஒநேசிமு அந்த ரோம் நகரில் புரிந்துகொண்டான். ஏனெனில் அவர் நமது பாவத்தை மன்னிக்கிறார். நம்மை புதுப்பிக்கிறார். நீ புதிய வாழ்வை இப்போது ஆரம்பிக்க விரும்புகிறாயா? இயேசு உனக்கு புதிய வாழ்வைத் தருகிறார். தனது பாவத்தை அறிக்கையிடும் ஒவ்வொருவருக்கும் அவர் புதியவாழ்வைத் தருகிறார். அவர்கள் தங்கள் நம்பிக்கையை அவர் மீது வைக்கிறார்கள். ஒநேசிமு இந்தப் புதிய வாழ்வை பெற்றுக்கொண்டான். அடுத்து செய்ய வேண்டியது என்ன?

பவுல்: “உனது எஜமான் பிலேமோனிடம் நீ திரும்பிச் செல்வது தான் சரியான காரியம்”.

ஒநேசிமு: “மறுபடியும் அங்கு செல்வதா?”

பவுல்: “கவலைப்படாதே. அவனிடம் கொடுப்பதற்கான ஒரு கடிதத்தை நான் உனக்காக எழுதுகிறேன். அவன் எனது நண்பன். அவன் இயேசுவை நேசிக்கிறான். மீண்டும் உன்னை தன்னுடன் மனப்பூர்வமாக சேர்த்துக் கொள்வான்”.

நிச்சயமாக செய்கிறேன் என்று சொல்லி ஒநேசிமு திரும்பிச் சென்றான்.

பிலேமோன்: “நீ மறுபடியும் இங்கு வந்துவிட்டாயா? நாங்கள் எல்லா இடத்திலும் உன்னை விசாரித்தோம்”.

ஒநேசிமு: “நான் இந்தக் கடிதத்தை உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன்”.

பிலேமோன். “பிரியமுள்ள பிலேமோனே, நான் ஒநேசிமுவை மீண்டும் உன்னிடம் அனுப்புகிறேன். அவன் இயேசுவுடன் புதிய வாழ்வைப் பெற்றிருக்கிறான். அவன் உனக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால், நான் அதைத் திருப்பிச் செலுத்துகிறேன். எல்லாவற்றையும் சரிசெய்கிறேன்”.

ஒநேசிமு மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டான். இயேசுவின் மூலமாக பழைய இடத்தில் ஒரு புதிய வாழ்வை அவன் பெற்றான்.


மக்கள்: உரையாளர், ஒநேசிமு, பவுல், பிலேமோன்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 27, 2018, at 08:00 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)