Home -- Tamil? -- Perform a PLAY -- 083 (Daniel‘s test 1)
83. தானியேலின் சோதனை 1
மாபெரும் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேம் பட்டணத்தை சூழ்ந்துகொண்டு, அதை வென்றான். யூதர்களுக்கு நம்பிக்கையற்ற நிலை காணப்பட்டது. யோயாக்கீம் ராஜா சிறைபிடிக்கப்பட்டு கொண்டு போகப்படும்படி இறைவன் அனுமதித்தார். அவன் பொய்யான தெய்வங்களை வணங்கினான். இப்போது அவைகள் உதவவில்லை. பகைவன் நகரத்தின் பொக்கிஷசாலையை கொள்ளையடித்தான். தேவாலயத்தில் இருந்து திருடினான்.
நேபுகாத்நேச்சார் ராஜா: “அஸ்பேனாஸ், இளம் இஸ்ரவேலர்கள் எனக்கு சேவை செய்ய வேண்டும். பலசாலிகளை, ஞானம் உள்ள அழகான வாலிபர்களை தெரிந்துகொள்ளுங்கள்”.
அடிமைப்படுத்தப்பட்டவர்கள் 600 மைல்கள் தூரம் நடந்து சென்றார்கள். அவர்களில் தானியேலும், அவனுடைய நண்பர்களும் இருந்தார்கள். இறுதியாக அவர்கள் பாபிலோன் மகா நகரத்தை அடைந்தார்கள். அவர்களுக்கு ராஜாவின் அரண்மனையில் என்ன கிடைத்தது? அவர்கள் ஒவ்வொரு சிறிய கட்டளைக்கும் கீழ்ப்படிய வேண்டும். அவர்களுக்கென்று எந்த உரிமையும் கிடையாது. ஆனாலும் இறைவனுக்கு உண்மையாயிருக்கும்படி தானியேலும், அவனுடைய நண்பர்களும் மிகவும் உறுதியாக தீர்மானித்திருந்தார்கள்.
உனது தீர்மானம் அப்படிப்பட்டதா? உனது பள்ளியில், வீட்டில் நீ எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்கின்றாயா? நண்பர்கள் மத்தியில், விளையாட்டு நேரங்களில் உண்மையாக இருக்கின்றாயா? நாம் இறைவனுக்கு உண்மையாயிருப்பதற்கு அவர் தகுதியானவர்.
தானியேலும் அவனுடைய நண்பர்களும் தங்களுடைய முதல் சோதனையை சந்தித்தார்கள். சிறைக்கைதிகளுக்கான மூன்று ஆண்டுகள் விதிமுறைகளை ராஜா கட்டளையிட்டான். அவர்கள் பாபிலோனிய மொழியையும், பிற கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ராஜாவின் மேஜையில் அவர்களுக்கு முன்பு வைக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.
தானியேல்: “அனனியா, இந்த உணவை சாப்பிடுவது இயலாத காரியம் இது இறைவனுடைய விதிமுறைகளுக்கு எதிரானது”.
அனனியா: “நமக்கு வேறு ஏதாவது சாப்பிட கிடைக்கும் என்று நீ எண்ணுகிறாயா?”
தானியேல்: “நாம் ராஜாவின் மேஜையில் இவைகளை சாப்பிடக் கூடாது”.
அஸ்பேனாஸ்: “ராஜா இதை உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். நான் உங்களுக்கு அனுமதி அளித்தால், உங்கள் உடல்நிலை மற்றவர்களை விட மோசமாகிவிடும். ராஜா என் தலையை துண்டித்துவிடுவார்”.
தானியேல்: “பத்து நாட்கள் நீர் எங்களை சோதித்துப் பாரும். எங்களுக்கு காய்கறி உணவுகளைத் தாரும். எங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து, உமக்கு விருப்பமானபடி செய்யும்”.
அதற்கு அந்த பிரதானிகளின் தலைவன் சம்மதித்தான். வேதாகமம் நடந்ததை இப்படி விளக்குகின்றது. பத்து நாட்கள் ஆனபின்பு, தானியேலும், அவனுடைய மற்ற நண்பர்களும் மற்றவர்களைவிட திடகாத்திரமாக இருந்தார்கள். எனவே தலைவன் அவர்களை காய்கறி உணவை தொடர்ந்து சாப்பிடும்படி விட்டுவிட்டான்.
தானியேல் உறுதியாக இருந்தான். அவன் இறைவனுக்கு உண்மையுள்ளவனாக இருந்தான். அதற்குரிய பலனைப் பெற்றான். மூன்று ஆண்டுகள் சென்றபின்பு ராஜா கைதிகளை பரிசோதித்தான். அவர்களில் தானியேலும் அவனுடைய நண்பர்களும் சிறந்தவர்களாக இருந்தார்கள்.
நேபுகாத்நேச்சார் ராஜா: “எனது அரசாங்கத்தில் உள்ள அனைவரிலும் இந்த வாலிபர்கள் பத்து மடங்கு சிறப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு சேவை செய்ய விரும்புகிறேன்”.
ஆனால் இதற்கு பின்பு அவர்கள் வாழ்வதற்கு பேராபத்து கடந்து வந்தது. நான் அதைக் குறித்து அடுத்த நாடகத்தில் கூறுகிறேன்.
மக்கள்: உரையாளர், நேபுகாத்நேச்சார், தானியேல், அனனியா, அஸ்பேனாஸ்.
© Copyright: CEF Germany