Home -- Tamil -- Perform a PLAY -- 023 (Peter starts again 8)
23. பேதுரு புதியதைத் துவங்கினான் 8
சிறுவன்: “பேதுருவுக்கு என்ன நிகழ்ந்தது?”
சிறுமி: “அவன் இன்று உண்மையாகவே சரியாக இல்லை”.
சிறுவன்: “அவன் வழக்கம் போல சிரித்துப் பேசவில்லை”.
சிறுமி: “அவன் மிகவும் அமைதியாய் இருக்கிறான்”.
பேதுரு மிகவும் சோகத்துடன் காணப்படுகிறான். என்ன காரணம்? அவன் எதையும் பேச மறுக்கிறான். அவன் ஞாயிறு பள்ளியில் இருக்கும் போது தனது முதுகில் பாரம் இருப்பதை உணருவான். பேதுரு தான் இவ்விதம் இருக்கும் வரை இறைவனை பிரியப்படுத்த முடியாது என்பதை அறிந்திருந்தான். அவன் ஆழ்ந்த யோசனையுடன் வீட்டிற்குச் சென்றான். அவன் தனியாக இருக்க விரும்பினான். நேராக தன் அறைக்குச் சென்றான்.
அவன் சுமந்து கொண்டிருந்த சுமைகளைச் சுற்றி அவனது சிந்தனைகள் சுழன்று கொண்டிருந்தது:
• கடையில் அவன் திருடிய பொருட்கள்.
• மாமா வீட்டில் இருந்து இரகசியமாய் எடுத்த பணம்.
• மக்களை பிரியப்படுத்த அவன் பேசிய பொய்கள், மோசமான நகைச்சுவைகள்.
ஆனால் இது தொடரவில்லை. பேதுரு இப்படி நினைத்தான். இயேசு எல்லாவற்றையும் புதிதாக்குவார் என்பது வேதாகமக் கதைகள் மூலம் அறிந்திருந்தான். ஒரு புதிய தொடக்கத்தை பேதுரு விரும்பினான். எனவே இதுவரை அவன் செய்யாத ஒரு காரியத்தை செய்தான் அவன் இறைவனை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். அவன் மிகவும் நேர்மையுடன் இயேசுவிடம் பேசினான். எல்லாவற்றிற்காகவும் மன்னிப்பு கேட்டான். நாம் பார்க்க முடியாத ஒருவரிடம் அவன் பேசினான். அவர் எப்போதும் நம்முடன் இருப்பவர். நம்மைக் கேட்பவர்.
பேதுரு: “ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னை நேசிப்பதற்கு நன்றி. என்னைப் பற்றிய அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். என்னுடைய பொய்கள், திருட்டு மற்றும் அசுத்தமான வார்த்தைகளுக்காக நீர் என்னை மன்னியும். எனது இருதயத்தை தூய்மைப்படுத்தும். எனது வாழ்வில் வாரும். என் ஆண்டவராக இரும். ஆமென்”.
அவன் விண்ணப்பம் பண்ணிய பின்பு பெரிய விடுதலையை உணர்ந்தான். இப்படிப்பட்ட விண்ணப்பங்களுக்கு இயேசு உடனடியாக பதில் அளிக்கிறார். மகிழ்ச்சியுடன் அவன் சொன்னான்.
பேதுரு: “ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னை மன்னித்தீர், எப்போதும் என்னுடன் இருக்கிறீர். உமக்கு நன்றி”.
பேதுரு மாற்றம் அடைந்ததை மற்றவர்கள் அறிந்தார்கள். ஒரு சிலர் அவனை கேலி செய்த போதும், அவனைப் புரிந்து கொள்ளாத போதும், அவன் காரணத்தை விளக்கினான்.
உன்னை அழுத்தும் பாரமான சுமைகள் உண்டா?
உன்னுடைய சுமை என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நீ இயேசுவிடம் எல்லாவற்றையும் கூற முடியும். பேதுரு செய்ததைப் போல நீயும் செய்.
மக்கள்: உரையாளர், இரண்டு பிள்ளைகள், பேதுரு.
© Copyright: CEF Germany