Home -- Tamil -- Perform a PLAY -- 024 (Very good)
24. அது மிகவும் நன்றாய் இருந்தது
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்துடன் இருந்தார்கள். ஆசிரியர் கணிதத் தேர்வு விடைத்தாளை கொடுத்தார். அவரவர் எதிர்பார்த்த தரம் அவர்களுக்கு கிடைத்தது. அநேக சிறுபிள்ளைகள் கனவு காணும் தரத்தை குறித்து நான் வேதாகமத்தில் கண்டுகொண்டேன்.
அது எங்கே என்பது உனக்கு தெரியுமா? இறைவனின் படைப்பு குறித்து பேசும் பகுதி தான் அது. அவருடைய படைப்பு A+ தரம் பெறுகின்றது. இறைவன் அனைத்தையும் எவ்விதம் படைத்தார் என்பதை மீண்டும், மீண்டும் நான் எண்ணி வியக்கிறேன். பூனை, நாய், சிறிய எறும்புகள், பலமிக்க யானைகள், சேட்டை செய்யும் குரங்குகள், மீன்கள், பறவைகள் என்று அனைத்தையும் படைத்தார்.
மிருகங்களைப் படைக்கும் முன்பு, இறைவன் அவைகள் உண்பதற்கான மரங்கள் மற்றும் தாவர வகைகளைப் படைத்தார். மேலும் அழகிய பூக்கள், சிறிய பனித்துளி, பெரிய சூரிய காந்திப்பூ, அழகிய ரோஜா, நறுமணம் வீசும் பூக்கள் அனைத்தையும் உருவாக்கினார். ஒவ்வொன்றும் மீண்டும் உருவாகும் வகையில் விதைகளைப் படைத்தார். ஒவ்வொன்றையும் ஞானமாய் உருவாக்கினார். முதலாவது அவர் ஒளியைப் படைத்தார். ஒளியில்லாமல் வாழ்வு என்பது சாத்தியமில்லை.
இறைவன் அனைத்தையும் எப்படி படைத்தார் என்பது உனக்குத் தெரியுமா?
தமது வார்த்தையினால் படைத்தார். வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. நீ பார்க்கின்ற அனைத்தையும் இறைவன் தமது வார்த்தையினால் படைத்தார். ஆரம்பத்தில் ஒன்றும் இல்லாமல் இருந்தது. இறைவன் அனைத்தையும் வளரும்படி செய்தார். பெரிய வெடிப்புக் கொள்கை அல்ல, தற்செயலும் அல்ல. சர்வ வல்லமையுள்ள இறைவன் ஒன்றுமில்லாமையில் இருந்து அனைத்தையும் உண்டாக்கினார்.
பின்பு சிறப்பான ஒரு காரியம் படைக்கப்பட்டது.
இறைவன் கூறினார்: “மனுஷனை உண்டாக்குவோமாக”. அவர் ஆணையும், பெண்ணையும் படைத்தார்.
ஆறாம் நாளில் இறைவன் அனைத்தையும் கண்டார். அது அவருக்கு சந்தோஷமாக இருந்தது. அது மிகவும் நன்றாக இருந்தது. அவர் அனைத்தையும் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கொடுத்தார். ஒரு பயங்கரமான காரியம் நடைபெறும்வரை அவர்கள் அற்புதமான வாழ்வை பரதீசில் இறைவனுடன் அனுபவித்தார்கள்.
அடுத்த நாடகத்தில் நாம் அக் கதையைக் காண்போம்.
மக்கள்: உரையாளர்.
© Copyright: CEF Germany