Home -- Tamil? -- Perform a PLAY -- 133 (School of life 1)
133. பள்ளி வாழ்வு 1
வாழ்க்கைப் பள்ளிக்கு உங்களை வரவேற்கிறோம். நீங்கள் இங்கு வந்திருப்பது அருமையான காரியம்.
சிறுமி: “எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள், இது மகிழ்ச்சி நிறைந்தது”.
(தெருக்களின் சத்தம், டயர் உரசும் சத்தம், கார்கள் சத்தம், இருசக்கர வாகனங்களின் சத்தம் …)
சிறுவனும், சிறுமியும் மாறிமாறி: “வலபக்கம் செல் – வாகனம் நிறுத்த அனுமதி இல்லை – கூர்மையான வளைவுகள் – வெள்ளை மற்றும் சிவப்பு அம்புக்குறிகள் – நான் எங்கிருக்கிறேன்? நான் எங்கு செல்ல வேண்டும்? நிறுத்தக் குறியீடு – எச்சரிக்கை: வழுக்கும் பனிப்பகுதி”.
எத்தனை அடையாளக் குறியீடுகள் – அவைகள் அதிகமாக இருக்கின்றன. சாலையின் ஓரத்தில் உள்ள போக்குவரத்துக் குறியீடுகள் மிகவும் முக்கியமானவை. உங்களை பின்னுக்கு இழுக்கவோ அல்லது உங்களை வெறுப்பேற்றவா அவைகள் அங்கு வைக்கப்படவில்லை. அவைகள் உங்களைப் பாதுகாக்கின்றன. உங்களை சரியான இடத்திற்குக் கொண்டு செல்கின்றன.
வேதாகமத்தில் இறைவன் உங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கான அடையாளக் குறியீடுகளை வைத்திருக்கிறார். தமது கட்டளைகளினால் அவர் நம்மை வெறுப்பேற்றுவதில்லை. அவர் நமது வாழ்க்கையை பாதுகாக்கிறார். அவருடைய வார்த்தைகளில் நிலைத்திருப்பவர்கள் தங்கள் பயணத்தை சரியாக முடிக்கிறார்கள்.
சிறுமி: “எங்கள் வாழ்க்கைப் பள்ளியில் இணைந்து கொள்ளுங்கள்”.
சிறுவன்: “நீ தேர்வில் நிச்சயமாக வெற்றி பெறுவாய் என்று நம்புகிறேன்”.
வாழ்க்கைப் பயணம் சாகசங்கள் நிறைந்தது.
இரண்டு பாதைகள் உள்ளன. ஆனால் ஒன்றைத் தான் நாம் தெரிந்துகொள்ள முடியும். வேதாகமம் சாலை வரைபடத்தைப் போல் உள்ளது. நாம் எந்த வழியில் செல்கிறோம் என்பதை அது நமக்குக் காண்பிக்கிறது.
வாசிப்பவர்: “குறுகிய வாசல் வழியில் செல். அகலமான வாசல் அழிவிற்கு நேராகச் செல்கிறது. அநேகர் அந்த வழியை தெரிந்தெடுக்கிறார்கள். ஆனாலும் குறுகிய வாசல் வழி நிலை வாழ்விற்கு நேராக நடத்துகிறது. சிலர் மட்டுமே அதைத் தெரிந்துகொள்கிறார்கள்”.
வேதாகமம் வழிகாட்டியைப் போல் உள்ளது. இறைவனிடம் செல்ல ஒரேவழி இயேசுகிறிஸ்து மட்டுமே என்று அது நமக்குக் காண்பிக்கிறது.
வாசிப்பவர்: “இயேசு சொல்கிறார்: நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”. (யோவான் 14:6)
நமது வாழ்வு பிரச்சினைகளின் ஊடே கடந்து செல்லும்போது, நாம் இருண்ட குகை போன்ற பகுதியில் செல்லும் போது, நம்மால் வழியைக் காண இயலாது. அப்போது நாம் வேதாகமத்தைப் பார்க்க வேண்டும். அது ஒளியைப் போல, நமக்கு வெளிச்சம் தருகின்றது.
நமது வாழ்க்கைப் பள்ளியில் இயேசுவே சிறந்த ஆசிரியராக இருக்கிறார். உனது வாழ்வு முழுவதும் அவர் உன்னுடன் வர விரும்புகிறார். நீ எங்கிருந்தாலும் சரி, விபத்து நேரத்திலும் சரி, அவர் உன்னுடன் இருக்கிறார். அவர் உன்னைத் தனியாகவிட மாட்டார். இதை அவர் வாக்குப் பண்ணியிருக்கிறார்.
வாசிப்பவர்: “ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு. நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய்”. (சங்கீதம் 50:15)
விண்ணப்பம் என்பது ஆபத்து நேரத்தில் உதவும் சிறந்த சாதனம். முயற்சி செய்து பார்!
உனது வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமைய நான் உன்னை வாழ்த்துகிறேன்.
நில்! அடுத்த நாடகத்தில் இந்தப் பயணம் தொடரும்.
மக்கள்: உரையாளர், சிறுமி, சிறுவன், வாசிப்பவர்.
© Copyright: CEF Germany