Home -- Tamil? -- Perform a PLAY -- 072 (Sensation on the sea)
72. கடல் மீது ஓர் அனுபவம்
கலிலேயாக் கடலில் ஓர் அற்புத அனுபவம்!
பேதுரு: “நான் இயேசுவைக் குறித்து பிரமிப்படைகிறேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை. ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்களை வைத்து அவர் 5000 ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு போஷித்திருக்கிறார். அனைவரும் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்”.
சீஷன்: “எவ்வளவு நாம் மீதம் எடுத்தோம்? முதலில் இருந்ததை விட அதிகமாக இருந்தது”.
பேதுரு: “ஆமாம், கொஞ்சத்தில் இருந்து அவர் நிறைவைக் கொண்டு வருகிறார்”.
இறைவனின் குமாரனாகிய இயேசு ஒப்பற்றவர். அவர் கொஞ்சத்தில் இருந்து நிறைவான ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறார்.
மக்கள் இந்த அற்புதத்தைக் கண்டவுடன் பெரிதும் ஆச்சரியப்பட்டார்கள். மாலையில் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள். அப்போது இயேசு சீஷர்களுடன் உரையாடலில் ஈடுபட்டார்.
இயேசு: “படவில் ஏறி அக்கரைக்குப் போங்கள்”.
அவர் படவில் ஏறவில்லை. அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையில் மேல் ஏறினார்.
சீஷர்கள் அந்த இரவில் படவில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு புயல் காற்று வீசியது. மீனவர்கள் துடுப்புப் போட இயலவில்லை. அலைகள் படவின் மீது மோதியது. இந்த பயங்கரமான சூழ்நிலையில் இயேசு இருந்திருந்தால் எப்படியிருக்கும். அவர்கள் பயந்து அலறினார்கள். ஆனால் நிலைமை இன்னும் மோசமாகியது.
பேதுரு: “அங்கே பார், உனக்குத் தெரிகிறதா? ஆவி, ஆவேசம்”.
சீஷன்: “என்னால் நிற்கக்கூட முடியவில்லை”.
ஒரு வெள்ளை உருவம் படகை நோக்கி தண்ணீரின் மேல் நடந்து வந்தது. சீஷர்கள் பயத்தால் உறைந்து போனார்கள். ஆனால் அது ஆவி அல்ல.
இயேசு: “பயப்படாதேயுங்கள், நான் தான்! திடன் கொள்ளுங்கள்”.
சீஷர்கள் அந்த சத்தத்தை புரிந்துகொண்டார்கள். அவர் இயேசு தான். முதலாவது பேதுரு அவரிடம் தைரியமாகப் பேசினான்.
பேதுரு: “ஆண்டவராகிய இயேசுவே, நீரேயானால், நானும் உம்மிடத்தில் கடலின் மீது நடந்து வர கட்டளையிடும்”.
இயேசு: “வா!”
அற்புதம்! பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவை நோக்கி கடலின் மீது நடந்தான். அவன் இயேசுவை பார்த்துக் கொண்டிருக்கும் வரை, எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் அலைகளைக் கண்ட போது, அவன் மூழ்க ஆரம்பித்தான்.
பேதுரு: “ஆண்டவரே, என்னை காப்பாற்றும்! எனக்கு உதவும்!”
இயேசு தமது கையை நீட்டி, பேதுருவை கை தூக்கிவிட்டார். அவனைக் காப்பாற்றினார்.
இயேசு இறைவனின் குமாரன். அவர் ஒப்பற்றவர் – அவர் இரட்சிக்கிறார்!
இயேசு: “என்னை நம்பு. உன் முழு இருதயத்தையும் எனக்குக் கொடு”.
பேதுரு இயேசுவுடன் படவிற்குள் ஏறி வந்தான். புயல் வீசுவது நின்றது. கடல் அமைதியானது. ஒவ்வொருவரும் இந்த அற்புதமான ஆண்டவர் இயேசுவின் முன்பு முழங்காற்படியிட்டு, அவரைப் பணிந்து கொள்ள வேண்டும்.
பேதுரு: “நீர் இறைவனின் குமாரன்!”
இறைவனின் குமாரன் இயேசு ஒப்பற்றவர். அவரால் இயலாத காரியம் ஒன்றுமில்லை. நீயும் கடலில் நடக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் இயேசுவுடன் நீ இருக்கும் போது, ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் உன்னை வழிநடத்துவார், உனக்கு உதவி செய்வார்.
மக்கள்: உரையாளர், பேதுரு, சீஷர், இயேசு.
© Copyright: CEF Germany