Home -- Tamil -- Perform a PLAY -- 063 (Sammy‘s discovery)
63. சாமி நட்சத்திரத்தை கண்டுபிடித்தான்
நியூயார்க்கின் தெருக்களின் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. சாமி தனது காதுகளை மூடும் வண்ணம் தொப்பியை அணிந்திருந்தான். ஒவ்வொரு மாலையிலும் தனது அப்பாவுடன் அவன் நடந்து செல்வான். கார்கள் வேகமாக போய்கொண்டிருந்தன. பெண்கள் பேருந்துகளில் தங்கள் சாமான் பைகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
சாமி: “அப்பா, அதன் அர்த்தம் என்ன?”
அவனுடைய அப்பா சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
அப்ப: “என்ன கேட்டாய்?”
சாமி: “நட்சத்திரம், அப்பா, நட்சத்திரம், நீங்கள் அதைப் பார்க்கவில்லையா?”
ஒரு வீட்டு ஜன்னலை காண்பித்து அவன் கேட்டான். அங்கு ஒரு மெழுகுவர்த்தி இருளில் ஒளிரும் நட்சத்திரத்தைப் போல பிரகாசித்து எரிந்து கொண்டிருந்தது.
அப்பா: “தங்கள் மகனுக்காக அவர்கள் ஜன்னலில் மெழுகுவர்த்தியை வைத்திருக்கிறார்கள். தொலைதூரத்தில் நமது எதிரிகளுடன் நடைபெறும் போரில் அவன் யுத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஒருவேளை அவன் போரில் இறந்துவிட்டால் மெழுகுவர்த்தியை அணைத்துவிடுவார்கள்”.
அப்பா நடந்து செல்லும்போது நினைத்தார். எனது மகனுக்காக ஒரு மெழுகுவர்த்தியை ஜன்னலில் வைக்கும் சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது என்று நம்புகிறேன்.
சாமி நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
சாமி: “அப்பா, அங்கே ஒன்று, இங்கே மற்றொரு மெழுகுவர்த்தி. அங்கே ஜன்னலில் இரண்டு மெழுகுவர்த்திகள் எரிகின்றன. ஒருவேளை அந்த குடும்பத்திலிருந்து இரண்டு மகன்கள் யுத்தத்திற்கு போயிருப்பார்கள்”.
தெருவின் கடைசியில், சாமி தனது தலையை உயர்த்தி, திடீரென்று நின்றான். ஏதோ ஒரு விரும்பத்தகாத காரியம் நடந்தது போல அவனுக்கு தோன்றியது.
சாமி: “அப்பா, அங்கே பாருங்கள்”.
அவன் இருள்சூழ்ந்த வானில் விடிவெள்ளி நட்சத்திரத்தை கண்டுபிடித்தான்.
சாமி: “இறைவனுக்கு ஒரு மகன் இருக்கிறாரா? அவர் ஜன்னலில் தனது நட்சத்திரத்தை வைத்திருக்கிறார்”.
அப்பா: “ஆமாம் இறைவனுக்கு ஒரு மகன் இருக்கிறார். உலகத்தின் தீமையோடு யுத்தம்பண்ணும்படி தனது குமாரனை அனுப்பினார். அவர் ஜெயித்தார். ஆயுதங்களினால் அல்ல, அன்பினால் ஜெயித்தார். அவர் தனது உயிரையே கொடுத்தார். தன்னை சிலுவையில் அறைந்த எதிரிகளையும் அவர் நேசித்தார். இறைவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். அவர் மூலமாக நாம் இறைவனுடனும், மற்ற மக்களுடனும் சமாதானம் பெறுகிறோம்”.
பின்பு ஜன்னலில் இருக்கும் நட்சத்திரங்களை குறித்து சாமி அடிக்கடி சிந்தித்து பார்த்தான். தனது உயிரையே தியாகம் செய்து உலகத்தின் தீமையோடு யுத்தம் செய்தவரை நினைத்துப் பார்த்தான். இயேசு நமக்கு சமாதானம் தருகிறார். இன்றும் அநேகருடைய வாழ்வில் போர்கள், பயங்கள், பாடுகள், போராட்டங்கள் காணப்படுகின்றன்.
இறைவனுடைய ஜன்னலில் ஓர் நட்சத்திரம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து தன்னிடம் கேட்கும் அனைவருக்கும் இரட்சிப்பையும், சமாதானத்தையும் தருகிறார்.
மக்கள்: உரையாளர், அப்பா, சாமி.
© Copyright: CEF Germany