Home -- Tamil -- Perform a PLAY -- 059 (Tears on Christmas 1)
59. கிறிஸ்துமஸ் காலத்தில் கண்ணீர் 1
கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் அனைவரும் விடுமுறைக்காக வெளியேற ஆயத்தமானார்கள். டூரியா கிறிஸ்துமஸ் விடுமுறையை எதிர் நோக்கி இருந்தாள். அவளுடைய அப்பா அவளை அழைத்துச் செல்ல வந்தார். அது மிக நீண்ட பயணமாக இருந்தது. டூரியா அநேக காரியங்களைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
டூரியா: “அப்பா, ராகேத் என்னை மீண்டும் அடையாளம் கண்டுகொள்வாளா? ஹாசன் எப்படி இருக்கிறான்?”
டூரியா தனது பூனை மற்றும் ஆடுகளை மீண்டும் காணப் போவதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.
அவர்கள் கிராமத்தை அடைந்த போது, ஜன்னலில் ஒரு மெழுகுவர்த்தி ஒளியைக் கண்டார்கள். அந்த வெளிச்சத்தை சுற்றிலும் வண்டுகள் பறந்து கொண்டிருந்தன. சிறுமிகள் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள்.
சிறுமிகள்: “ஹலோ, டூரியா! நீ மீண்டும் வந்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நீ எப்படி இருக்கிறாய்? உனது பள்ளியைக் குறித்து எங்களுக்குச் சொல்வாயா?”
டூரியா: “நிச்சயம், ஆனால் நாளைக்கு, இப்போது தாமதமாகிவிட்டது. நாளை வந்து என்னைப் பாருங்கள்”.
டூரியாவிற்கு பிடித்த உணவை அவளது அம்மா சமைத்து வைத்திருந்தாள். பேசுவதற்கு அநேக காரியங்கள் இருந்தன. ஒரே ஒரு காரியம் வித்தியாசமாக இருந்தது. அவள் தனது படுக்கையை விரித்து தூங்கச் செல்லும்போது, அதைக் குறித்து எண்ணினாள்.
அது கிறிஸ்மஸ் காலம். கிராமத்தில் உள்ள ஒருவரும் அதைக் கொண்டாடவில்லை. இயேசுவை நேசித்தவளாக டூரியா மட்டும் அங்கு காணப்பட்டாள். அவள் அதைக் கொண்டாட விரும்பினாள். ஆனால் எப்படி என்று தெரியவில்லை.
டூரியா: “எனக்கு ஒரு யோசனை, நாளை நான் அதிகாலையில் எழுந்து எனது வேதாகமத்தை வாசிப்பேன்”.
அவள் அப்படியே செய்தாள். அவள் வீட்டை விட்டு வெளியேறி, மலைச் சிகரத்தில் ஏறினாள். அவள் தனியாக அமர்ந்து மரியாள், யோசேப்பு மற்றும் குழந்தை இயேசுவைக் குறித்து வாசித்தாள்.
டூரியா: “இயேசுவானவர் தமக்கு சொந்தமானதில் வந்தார், ஆனால் அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆண்டவராகிய இயேசுவிற்கு பெத்லகேமின் கதவுகள் அடைக்கப்பட்டன. இன்று அநேகருடைய இருதயங்கள் அவருக்கு அடைக்கப்பட்டிருக்கின்றன”.
டூரியாவிற்கு பத்து வயது இருக்கும் போது, இயேசுவை தனது வாழ்வில் ஏற்றுக்கொண்டாள். அவளுடைய ஆண்டவராகவும், இரட்சகராகவும் நம்பி ஏற்றுக்கொண்டாள்.
ஹாசன்: “டூரியா, நான் உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன். நீ என்ன வாசிக்கிறாய்?”
அவள் வேதாகமக் கதையைக் கூறினால், அவளுடைய சகோதரன் அதை ஏற்றுக் கொள்வானா? அவளுக்கு அது மோசமான விளைவுகளைக் கொண்டு வரும். அவள் உண்மையைச் சொன்னாள். உலகம் முழுவதில் கிறிஸ்மஸ் பெல் சத்தம் ஒலித்தது. அந்த சமயத்தில் ஒரு சிறுவன் இயேசுவைக் குறித்து முதல் முறையாகக் கேட்டான்.
கிறிஸ்துமஸ் நாள் மிக அழகாக ஆரம்பித்தது. ஆனால் அந்த நாளின் இறுதியில் கண்ணீர் காணப்பட்டது. ஏன்? அடுத்த நாடகத்தில் நான் அதைக் கூறுவேன்.
மக்கள்: உரையாளர், சிறுமி, டூரியா, ஹாசன்.
© Copyright: CEF Germany