STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 096 (My parents are separated) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
96. எனது பெற்றோர்கள் பிரிந்து உள்ளார்கள்சிறுமி: “அது மிகவும் அருமையான விளையாட்டு”. சிறுவன்: “நாங்கள் போட்டியில் வென்றுவிட்டோம்”. சிறுமி: “பெருமையான விஷயம்”. வாலிபர் கூடுகை முடிந்த பின்பு, சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் வாழ்த்தி விடை பெற்றார்கள். ஆனால் ஸ்டெபி அப்படி இல்லை. உரையாளர்: “ஸ்டெபி! என்ன பிரச்சனை உனக்கு? உனக்கு ஏதேனும் கஷ்டம் உள்ளதா?” ஸ்டெபி: “எல்லாம் இருளாய் உள்ளது. எனது அப்பா இனிமேல் இருக்கமாட்டார். அவர் சென்றுவிட்டார். என்னையும், என் சகோதரியையும் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். அவருக்கு ஒரு பெண் தோழி இருப்பதாக அம்மா சொன்னார்கள். அவர் எங்களை விட அந்தப் பெண்ணை அதிகமாக நேசிக்கிறார்”. உரையாளர்: “நிச்சயம் இது உனக்கு வேதனையான காரியம் தான். பெற்றோர்கள் பிரிந்திருப்பதால் எவ்வளவு வேதனை என்பது எனக்குத் தெரியும்”. ஸ்டெபி: “அவர் எங்களை விட்டுச் சென்றதால் எல்லாம் இருண்டு போனதைப் போல் உள்ளது. என்ன பிரச்சினை?” உரையாளர்: “நீ கைவிடப்பட்டதைப் போல் உணருகிறாயா?” ஸ்டெபி: “நான் அவளை வெறுக்கிறேன். அவள் எனது அப்பாவை இழுத்து சென்றுவிட்டாள். அவர் மீண்டும் திரும்பி வருவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இயேசு மீண்டும் அனைத்தையும் சரி செய்ய முடியுமா?” உரையாளர்: “அவரால் நிச்சயம் முடியும் ஸ்டெபி, ஒவ்வொரு குடும்பமும் சமாதானமாய் இருக்க அவர் விரும்புகிறார். அவர் பிரிவை விரும்புவதில்லை. இங்கு ஒரு பிரச்சினை உள்ளது”. ஸ்டெபி: “என்ன பிரச்சினை?” உரையாளர்: “மக்கள் தான் அவருடைய பிரச்சினை. அவர் சொல்வதைச் செய்ய அவர்கள் விரும்புகிறதில்லை. அவர்கள் தங்கள் சொந்த வழியில் சென்று விவாகரத்து பெறுகிறார்கள். இது நிகழும்போது பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அது மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்துகிறது”. ஸ்டெபி: “எனது அப்பா மீண்டும் வர வேண்டும். மீண்டும் எல்லாம் நல்ல நிலைக்கு மாற வேண்டும்”. உரையாளர்: “நான் அதற்காக விண்ணப்பம் பண்ணுகிறேன். இயேசுவும் அதை விரும்புகிறார். அவர் எல்லாக் காயங்களையும் ஆற்றுவார். ஸ்டெபி, அதற்கு சற்று நீண்ட காலம் தேவைப்படும்”. ஸ்டெபி: “எனது அப்பாவை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாய் வருகிறது”. உரையாளர்: “நான் அதைப் புரிந்துகொள்கிறேன். இயேசு உனக்கு தமது வசனத்தின் மூலம் ஆறுதல் தர விரும்புகிறார். இந்த அட்டையில் உள்ள வசனத்தை சத்தமாக வாசி”. ஸ்டெபி: “எனது அப்பாவும், எனது அம்மாவும் என்னை ஒதுக்குகிறார்கள். ஆனாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்கிறார்”. உரையாளர்: “மக்கள் ஏமாற்றுகிறவர்கள், நம்மை கைவிடுகிறவர்கள். ஆனால் இயேசு ஒருபோதும் அப்படிச் செய்வதில்லை. நீ உனது இருதயத்தை அவரிடம் ஊற்ற முடியும். அவர் எப்போதும் உனது அருகில் இருக்கிறார். இந்த அட்டை இதை உனக்கு நினைவுப்படுத்தும்”. ஸ்டெபி: “நன்றி. நான் மீண்டும் இதைக் குறித்து உங்களிடம் பேசலாமா?” உரையாளர்: “நிச்சயமாக. ஸ்டெபி! நான் உனக்கு நேரம் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன்”. ஸ்டெபி: “நான் இப்போது விடைபெறுகிறேன்”. உரையாளர்: “சென்று வா. மீண்டும் சந்திப்போம். எனக்கு எழுது”. மக்கள்: உரையாளர், ஸ்டெபி, சிறுவன், சிறுமி. © Copyright: CEF Germany |