STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 097 (Whoever won’t listen 1) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malagasy -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Sindhi -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
97. வார்த்தையைக் கவனியாதவர்கள் 1(தட்டும் சத்தம்) மனிதன் 1: “அவன் மீண்டும் ஆரம்பித்துவிட்டான்”. பெண்: “அவன் என்னை மிகவும் கோபப்படுத்துகிறான்”. மனிதன் 2: “இறைவனே பெரியவர். மழை பெய்யப் போகிறது. அவர் சொன்னது நிறைவேறும்”. இறைவன் உண்மையாகவே அதை கூறியிருக்கிறார். இறைவன் பேசினார்: “நான் ஒரு தீர்மானம் பண்ணியுள்ளேன். இந்தப் பூமியில் வாழும் அனைவரையும் நான் நிக்கிரகம் பண்ணப்போகிறேன். அவர்களுடைய சிந்தனைகள், செயல்கள் நித்தமும் பொல்லாததாய் இருக்கிறது”. இறைவனை நோக்கிப் பார்த்து வாழ்ந்த ஒரே மனிதன் நோவா மட்டுமே. இதற்காக அவன் தைரியத்துடன் செயல்பட்டான். அவன் தீமைக்கு நேராக செல்லவில்லை. அவன் உறுதியாக இருந்தான். இறைவன் சொன்ன அனைத்தையும் செய்தான். இறைவன் அவன் மீது மகிழ்ச்சியாய் இருந்தார். இறைவன் பேசினார்: “நோவாவே! ஒரு பேழையைக் கட்டு. நான் மிகப்பெரிய ஜலப்பிரளயத்தை கொண்டு வரப்போகிறேன். உயிருள்ள அனைத்தும் மாண்டுபோகும். ஆனாலும் நான் உன்னையும், உனது மனைவியையும், உனது மகன்களையும், அவர்களுடைய மனைவிகளையும் காப்பாற்றுவேன்”. நோவா இறைவன் கூறிய அனைத்தையும் அப்படியே செய்தான். தனது மகன்களுடன் இணைந்து இறைவன் வகுத்த விதிமுறைகளின்படி பேழையைக் கட்டினான். அது கிட்டத்தட்ட 500 அடி நீளம், 72அடி அகலம், 40அடி உயரம் உடையதாக இருந்தது. அது மூன்று அடுக்குகளையும், அறைகளையும் உடையதாக இருந்தது. அந்தப் பேழைக்கு ஒரு கதவு, மேற்கூரையின் பக்கம் ஒரு ஜன்னல் இருந்தது. அது உள்ளும், புறமும் கீல் பூசப்பட்டிருந்தது. தங்கள் அயலகத்தாரிடம் இருந்து அவர்கள் அனுபவித்த பரியாசங்களை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? மனிதன் 1: “நோவா ஒரு பைத்தியம். இந்தப் பேழை மிதக்க தண்ணீர் எங்கிருந்து வரப்போகிறது?” மனிதன் 2: “நான் ஒருபோதும் மழையைப் பார்த்ததில்லை. நோவாவே! முதலில் நீ செய்வதை நிறுத்து, இந்த வாழ்வை சந்தோஷமாக அனுபவி”. ஆனால் நோவா நிறுத்தவில்லை. இறைவன் சொன்னபடியே தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். அநேக ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பின்பு, பேழை கட்டும் வேலை முடிந்தது. இறைவன் பேசினார்: “நோவாவே! உனது குடும்பத்தாருடன் பேழைக்குள் பிரவேசி. ஒவ்வொரு மிருகத்திலும் ஒவ்வொரு ஜோடி, அதற்கு தேவையான உணவை எடுத்துக்கொள். இன்னும் ஒருவாரத்தில் நான் உனக்குச் சொன்னபடியே 40 நாட்கள் இரவும், பகலும் மழை பெய்யப்போகிறது”. நோவா மழையைப் பார்த்ததில்லை. ஆனாலும் இறைவனுக்கு கீழ்ப்படிந்து செயல்பட்டான். அவன் தனது குடும்பத்துடன் பேழைக்குள் சென்றான். மிருகங்கள் வந்தன. அவைகள் தங்களுக்கு ஆபத்து வருவதை அறிந்திருப்பதைப் போல் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் அந்த ஒரே கதவின் வழியாக சென்றார்கள். நோவா உள்ளே போன பின்பு இறைவன் கதவை அடைத்தார். தன்னை நம்பியவர்களையும், தனக்கு கீழ்ப்படிகிறவர்களையும் அவர் காப்பாற்றினார். மற்றவர்களின் கதி? அவர்கள் இறைவனை விசுவாசிக்கவில்லை. முதலாவது மழைத்துளி விழுந்தது. இறைவன் சொன்னது அப்படியே நடப்பதை மக்கள் உடனடியாக உணர்ந்தார்கள். பின்பு என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் நான் கூறுகிறேன். மக்கள்: உரையாளர், இரண்டு மனிதர்கள், பெண், இறைவன். © Copyright: CEF Germany |