STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 098 (Punishments and promises 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malagasy -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Sindhi -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
98. தண்டணைகள் & வாக்குத்தத்தங்கள் 2பெண்: “இந்த மழை பெய்வது எப்போது தான் நிற்கும்?” மனிதன்: “நோவா சொன்னது சரியாய் நடக்கிறதே?” (பேழையைத் தட்டும் சத்தம்) அனைவரும்: “எங்களுக்கு உதவுங்கள், நோவாவே, கதவைத் திறவுங்கள். நாங்கள் உள்ளே வருகிறோம்”. மிகவும் தாமதமாகிவிட்டது. இறைவனே கதவை அடைத்துவிட்டார். மக்கள் அவருடைய வார்த்தையை கவனிக்கவில்லை. இப்போது அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இறைவனுக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் இதுதான் முடிவு. தண்ணீரின் உயரம் கூடிக்கொண்டே இருந்தது. இறைவன் சொன்னது போல 40 நாட்கள் பகலும், இரவும் மழைபெய்து கொண்டேயிருந்தது. மக்கள் உயரமான இடங்களிலும், மலைகளிலும் ஏறி தப்பிக்க நினைத்தார்கள். ஆனால் உலகின் உயரமான இடத்தை விட 16 அடி மேலாக தண்ணீர் பெருகியது. உயிருள்ள அனைத்தும் அந்த பெரிய பிரளயத்தில் மாண்டுபோயின. நோவாவும், பேழையில் உள்ள அனைவரும் பாதுகாக்கப்பட்டார்கள். தண்ணீர் முழுவதும் வற்றிப்போவதற்கு ஒரு ஆண்டு ஆகியது. நோவா: “பூமி முழுவதும் காய்ந்து போயிற்றா என்பதை அறிய, நான் ஒரு காகத்தை அனுப்புகிறேன்”. பின்பு புறாவை அனுப்பினான். அந்தப் பறவைகள் கால் வைத்து இளைப்பாற இடமில்லை. எனவே போவதும், வருவதுமாக இருந்தது. ஒருவாரம் கடந்தது. நோவா: “நான் இன்னொரு புறாவை பறக்கவிடப் போகிறேன்”. (ஜன்னலை திறக்கும் சத்தம், பறவைகளின் இறக்கை சத்தம்) திருமதி.நோவா: “பாருங்கள், ஒரு ஒலிவ இலைக் கிளையை புறா கொத்திக்கொண்டு வருகிறது”. நோவா: “தண்ணீர் சீக்கிரம் வற்றப்போகிறது”. நோவா மூன்றாவது முறை புறாவை வெளியில் விட்டான். அது திரும்பி வரவில்லை. ஒரு வருடம் கழித்து, தண்ணீர் வற்றி வெட்டாந்தரை காணப்பட்டது. இறைவன் பேசினார்: “நோவா, உனது குடும்பத்துடன் பேழையை விட்டு வெளியே வா. பறவைகளும், மிருகங்களும் பேழையை விட்டு வெளியே வரட்டும். இந்தப் பூமியில் பலுகிப் பெருகுங்கள்”. பேழையைவிட்டு வெளியே வந்த அனைவரும் வெட்டாந்தரைக்கு வந்தார்கள். நீ நோவாவாக இருந்திருந்தால் முதலாவது என்ன செய்திருப்பாய்? அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி பலி செலுத்தினான். இவ்விதமாய் தன்னை இரட்சித்த இறைவனுக்கு அவன் நன்றி செலுத்தினான். நோவா இறைவனுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்தான். இது இறைவனுக்கு பிரியமாயிருந்தது. இறைவன் பேசினார்: “நான் இனிமேல் பூமியை ஜலப்பிரளயத்தால் இனி அழிக்கமாட்டேன். இந்தப் பூமி உள்ளளவும் கோடை காலமும், மாரி காலமும், பகலும், இரவும் இருக்கும். நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கைக்கு அடையாளமாக வானவில்லை வைக்கிறேன்”. வானத்தில் முதல் வானவில் தோன்றியது. எவ்வளவு அருமையான வண்ணங்கள், இன்றைய நாள் வரைக்கும் இறைவன் உண்மையுள்ளவர் என்பதை அது நினைவுபடுத்துகிறது. அவர் தனது வார்த்தையை நிறைவேற்றுகிறார். நீ அவரை 100% சார்ந்திருக்க முடியும். நீ அடுத்த முறை வானவில்லைக் காணும் போது அவரைக் குறித்து சிந்தித்துப் பார். மக்கள்: உரையாளர், இரண்டு மனிதர்கள், பெண், நோவா, திருமதி.நோவா, இறைவன். © Copyright: CEF Germany |