STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil -- Perform a PLAY -- 060 (Christmas – so different 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi? -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish? -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
60. வித்தியாசமான கிறிஸ்துமஸ் 2மலைப்பகுதியின் அந்த சிறிய கிராமத்தில் ஒருவரும் கிறிஸ்துமஸைக் கொண்டாடவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பிறப்பைக் குறித்து ஒருவரும் சந்தோஷப்படவில்லை. இது டூரியாவிற்கு வித்தியாசமாக இருந்தது. அந்த நாள் காலையில் மரியாள், யோசேப்பு மற்றும் குழந்தை இயேசுவைக் குறித்த கதையை இரகசியமாக தனது சகோதரனிடம் கூறினாள். அவள் கிறிஸ்துமஸைக் கொண்டாட விரும்பினாள். ஆனால் எப்படி என்று தெரியவில்லை. கிறிஸ்தவப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மரங்கள், பரிசுகள், அலங்கார விளக்குகள் மற்றும் பாடல்கள் காணப்படும். ஆனால் இங்கு அப்படி இல்லை. அவள் முந்தானையை போட்டுக்கொண்டு ரொட்டிக்கு மாவு பிசைந்தாள். கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்தாள். ஆடுகளுக்கு உணவைக் கொடுத்தாள். களைப்புற்ற தனது அம்மாவிற்கு உதவி செய்வதில் டூரியா மகிழ்ச்சியடைந்தாள். இதுவும் கிறிஸ்துமஸைக் கொண்டாடும் ஒரு வழிமுறை ஆகும். அன்று மாலை அநேக விருந்தினர்கள் வந்தார்கள். எல்லோரும் விடுமுறை நாளில் வந்திருந்த டூரியாவைக் காண விரும்பினார்கள். அவர்கள் முயலைக் சமைத்து, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டார்கள். அனைவருக்கும் அது ருசி மிகுந்ததாக இருந்தது. உணவருந்திய பின்பு ஹாசன் திடீரென்று பேசினான். ஹாசன்: “டூரியா, இன்று காலையில் நீ கூறிய இயேசுவைக் குறித்த கதையை இப்போது எங்களுக்குச் சொல்?” அந்த அறையில் மயான அமைதி ஏற்பட்டது. இயேசு என்ற பெயரை ஒருவரும் அங்கு விரும்பவில்லை. அனைவரும் டூரியாவை கோபத்துடன் பார்த்தார்கள். அவளது உறவினன் அர்மீன் அவளை பரியாசம் பண்ணினான். அர்மீன்: “உனக்கு பள்ளியில் அதைக் கற்றுக் கொடுத்தார்களா? நீ ஒருபோதும் அதைப் பற்றி பேசக்கூடாது”. டூரியா அமைதியாய் இருந்தாள். அவள் தனிமையை உணர்ந்தாள், புறக்கணிக்கப்பட்டாள். இயேசுவும் அநேக ஆண்டுகள் முன்பு இவ்விதம் புறக்கணிக்கப்பட்டார். என்ன நடந்தாலும் அவள் இயேசுவிற்கு உண்மையாக இருக்க விரும்பினாள், அவளுடைய அப்பா பேசினார். அப்பா: “வேதாகமத்தில் உள்ள கதையை டூரியா நம்பவில்லை. நமக்கு வேறு மதம் உண்டு. அவள் அதை அறிந்திருக்கிறாள். சரிதானே டூரியா?” டூரியா: “இல்லை. நான் இயேசுவை விசுவாசிக்கிறேன். நாம் பரலோகம் செல்வதற்கு அவர் மட்டுமே ஒரே வழியாக இருக்கிறார். இயேசு கூறுகிறார்: நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”. (யோவான் 14:6) 13 வயது டூரியாவை இருள் சூழ்ந்து கொண்டதைப் போல இருந்தது. மற்றவர்கள் இயேசுவைப் புறக்கணித்து டூரியாவைக் காயப்படுத்தினார்கள். அவள் அழுதுகொண்டே வெளியே ஓடிச்சென்றாள். ஆண்டவராகிய இயேசுவை நேசித்தவளாக அவள் மட்டுமே காணப்பட்டாள். ஏன் மற்றவர்கள் அவரை நேசிக்கவில்லை? டூரியாவிடம் இதற்கு பதில் இல்லை. திடீரென்று அவளுடைய சகோதரன் ஹாசன் அவள் அருகிலே நின்றான். ஹாசன்: “டூரியா, உனது வேதாகமக் கதைகள் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் உன்னைப் போல இருக்க விரும்புகிறேன்”. டூரியா சிரித்தாள். அவள் இனி பயப்படத் தேவையில்லை. அவளது இருதயத்தில் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவள் தனது இருதயத்தில் இயேசுவுடன் கிறிஸ்துமஸைக் கொண்டாடினாள். மக்கள்: உரையாளர், ஹாசன், அர்மீன், டூரியா, அப்பா. © Copyright: CEF Germany |