Home -- Tamil? -- Perform a PLAY -- 158 (Reward for M. 3)
158. மொர்தெகாய் கௌவிரக்கப்படுதல் 3
எஸ்தர் ராணி மிகவும் தைரியமாய் செயல்பட்டாள். அழைப்பு இல்லாமல் அவள் பெர்சியா ராஜாவிடம் போனாள். தனது உயிரை பணையம் வைத்து அவள் இதைச் செய்தாள். ஆனால் தனது மக்களாகிய யூதர்களை பாதுகாக்க விரும்பி, அவள் இதைச் செய்தாள்.
அகாஸ்வேரு ராஜா தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். எஸ்தர் வருவதை அவன் கண்டான். அவன் தனது பொற்செங்கோலை, அவளை நோக்கி நீட்டினான். அதன் அர்த்தம் “அவள் வரவேற்கப்படுகிறாள்” என்பதாகும்.
ராஜா: “எஸ்தர் ராணியே, நீ ஏன் வந்திருக்கிறாய்? உனது விருப்பம் என்ன?”
எஸ்தர்: “எனது ராஜாவே, ஆமானுடன் இணைந்து என்னுடன் விருந்துண்ண வாருங்கள்”.
ராஜா: “வேலைக்காரனே, உடனடியாக ஆமானை அழைத்து வாருங்கள். ராணி எங்களை விருந்துண்ண அழைத்திருக்கிறாள்”.
எஸ்தர் மிகவும் அருமையான உணவை அவர்களுக்கு ஆயத்தம் செய்தாள்.
ராஜா: “எஸ்தர் ராணி, உனக்கு என்ன வேண்டும்? எனது ராஜ்யத்தில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குத் தருவேன்”.
எஸ்தர்: “தயவுசெய்து நாளைக்கு இரவு உணவிற்கு வாருங்கள். ஆமானை அழைத்து வாருங்கள். அப்போது எனது விருப்பத்தை உம்மிடம் தெரிவிப்பேன்”.
நயவஞ்சகமுள்ள ஆமான் சந்தோஷத்துடனும், பெருமையுடனும் வீட்டிற்குச் சென்றான்.
ஆமான்: “நான் தான் உயர்ந்த பதவியில் உள்ளவன். ராஜாவுடன் இணைந்து சாப்பிட ராணி என்னை அழைத்திருக்கிறாள். என்னை மட்டும்! நாளைக்கு நான் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளேன். ஆனால் இந்த ஒரு காரியம் தான் என்னை தொடர்ந்து வேதனைப்படுத்துகிறது. மொர்தெகாய் என்னைப் பணிந்துகொள்ளாமல் இருக்கிறான்”.
மனைவி: “நீங்கள் அவனை சும்மா விடப் போகிறீர்களா? அந்த யூதனை தூக்கிலிடுங்கள்!”
தனது வளர்ப்புத் தகப்பனுக்கு எதிராக திட்டம் தீட்டி, ஆமான் தூக்கு கம்பம் நட்டதை எஸ்தர் அறியவில்லை. அது 80 அடி உயரம் இருந்தது. ஆனால் இறைவன் அதைக் கண்டார். அவர் ஆளுகைச் செய்கிறார்! எனவே தான் அவர் அகாஸ்வேரு ராஜாவுக்கு தூக்கமில்லாத இரவைக் கொடுத்தார்.
ராஜா: “வேலைக்காரனே, என்னால் தூங்க முடியவில்லை. எனது காலப் பதிவேட்டை கொண்டு வாருங்கள். சமீபத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை சத்தமாக வாசி”.
ராஜாவிற்கு எதிராக கொலைத் தாக்குதல் எவ்விதம் திட்டம் தீட்டப்பட்டது என்பதை மொர்தெகாய் தெரிவித்தான்.
ராஜா: “இதற்காக மொர்தெகாய் என்ன பரிசைப் பெற்றான்?”
வேலைக்காரன்: “ஒன்றும் இல்லை”.
அடுத்தநாள் ஆமான் அரண்மனைக்கு வந்தான். மொர்தெகாயை தூக்கிலிட அனுமதியை ராஜாவிடம் பெற விரும்பினான்.
ராஜா: “ஆமான்! ராஜா நன்றி செலுத்த விரும்பும் மனிதனுக்கு என்ன செய்யப்பட வேண்டும்?”
ராஜா தன்னைத்தான் கனப்படுத்தப் போகிறார் என்று ஆமான் யோசித்தான்.
ஆமான்: “அவனுக்கு ராஜ வஸ்திரம் தரிப்பிக்கப்பட்டு, கிரீடம் சூட்டப்பட வேண்டும். ராஜாவின் குதிரைகளில் ஒன்றில் அவனை நகரத்து தெருக்களில் வலம் வரச் செய்ய வேண்டும். ராஜாவின் வேலைக்காரன் அவனுடனே கூட சென்று சத்தமாய் சொல்ல வேண்டும்: “ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதன் இவன் தான்”.
ராஜா: “ஆமான்! மொர்தெகாய்க்கு இதைச் செய்!”
ஆமானின் முகம் வெளிறிப் போனது.
அடுத்த நாடகத்தில் இந்த வேதாகமக் கதையின் தொடர்ச்சியை நீ கேட்பாய்.
மக்கள்: உரையாளர், ராஜா, எஸ்தர், ஆமான், பெண், வேலைக்காரன்.
© Copyright: CEF Germany