Home -- Tamil? -- Perform a PLAY -- 159 (Whoever digs a hole 4)
159. குழியை யார் தோண்டினாலும் 4
கொடிய மனிதன் ஆமானின் கதை முடிவுக்கு வந்தது. அவன் வரப்போகிறதை அறியவில்லை. பெர்சியாவில் வாழும் யூதர்களைக் கொன்று, மொர்தெகாயை தூக்கிலிட விரும்பிய அவன், இப்போது அவனை முழு தேசத்திற்கும் முன்பு கனப்படுத்த வேண்டும்.
உயிருள்ள இறைவன் செயல்படுவதை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. இறைவன் அவருடைய மக்களை நேசிக்கிறார், அவர்களைப் பாதுகாக்கிறார்.
ஆமான் தனக்கு என்ன நிகழப்போகிறது என்பதை மட்டும் அறிந்திருந்தான். அவன் ராஜாவினால் மீண்டும் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது, பெருமையுடன் இருந்தான். விருந்தினர்களுக்காக எஸ்தர் ராணி ஆயத்தமாய் இருந்தாள். மொர்தெகாயின் வளர்ப்பு மகள் தான் எஸ்தர் என்பதை அரண்மனையில் ஒருவரும் அறிந்திருக்கவில்லை. அந்த மாலை நேரத்தில் அகாஸ்வேரு ராஜா அவளின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினான்.
ராஜா: “எஸ்தர் ராணி, உன்னுடைய விருப்பம் என்ன? எனது ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் நான் உனக்கு கொடுப்பேன்”.
எஸ்தர்: “எனது ராஜாவே, என் உயிரை எனக்குத் தாரும். எனது மக்களாகிய யூதர்களின் வாழ்வை எனக்குத் தாரும். எங்களைக் கொன்று, நிர்மூலமாக்க ஒருவன் விரும்புகிறான்”.
ராஜா(கோபத்துடன்): “யார் அவன்? அவன் எங்கே இருக்கிறான்?”
எஸ்தர்: “இந்த ஆமான் தான் மோசமான எதிரி”.
ராஜா உக்கிர கோபம் அடைந்தான். ஆமான் தனது உயிருக்காக மன்றாடினான். ஆனால் மன்றாட்டு கேட்கப்படவில்லை. வேலைக்காரர்கள் அவனுடைய முகத்தை மூடினார்கள். அவனை வெளியே கொண்டு சென்றார்கள். மொர்தெகாய்க்காக செய்யப்பட்ட தூக்கு மரத்தில் ஆமான் தூக்கிலிடப்பட்டான்.
சிறுமி: “அடுத்தவனுக்கு குழியைத் தோண்டும் ஒருவன் அதே குழியில் விழுகிறான்”.
யூதர்களை நிர்மூலமாக்க விரும்பியவர்களில் ஆமான் முதல் மனிதன் அல்ல. அவன் கடைசியானவனும் அல்ல. ஆனாலும் இறைவன் தம்முடைய மக்களைப் பாதுகாக்கிறார். அவர் இந்த தீய திட்டத்தை முறியடித்தார்.
நமது இரட்சகர் இயேசு யூதனாகப் பிறப்பது இறைவனின் திட்டமாக இருந்தது. இறைவனுக்கு சித்தமானது எதுவோ, அது நடக்கும்.
அகாஸ்வேரு ராஜா அவருடைய எதுவோ, அது நடக்கும்.
அகாஸ்வேரு ராஜா அவருடைய கரத்தில் இருந்தான்.
ராஜா: “ராஜாவின் கட்டளை: எனது ராஜ்யத்தில் உள்ள ஒவ்வொரு யூதனுக்கும் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வலிமையைப் பெறுகிறான்”.
ராஜாவின் செய்தியாளர்கள் வேகமான குதிரைகள் மீது ஏறி, தேசத்தின் எல்லா மாகாணங்களுக்கும் புதிய சட்டத்தை கொண்டு சென்றார்கள். டிசம்பர் 13-ம் தேதி அனைத்து யூதர்களின் மரண நாள் என்று, யூதர்களின் மோசமான எதிரி ஆமான் தீர்மானித்தான். ஆனால் அதே நாள் என்று, யூதர்களின் மோசமான எதிரி ஆமான் தீர்மானித்தான். ஆனால் அதே நாள் யூதர்கள் தங்கள் எதிரிகளைத் தோற்கடித்ததால் சந்தோஷமான நாளாக மாறியது.
அவர்கள் தங்கள் வெற்றியை 14-ம் தேதி கொண்டாடினார்கள். யூதர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளைக் கொடுத்தார்கள். தங்கள் உணவை ஏழைகளுக்கு பகிர்ந்துகொடுத்தார்கள்.
துன்பத்திலிருந்து சந்தோஷம் பிறந்தது. இறைவன் தன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை தெரிந்துகொண்டார், அவர்களைப் பாதுகாத்தார்.
அவருக்கே எப்போதும் கனம், மகிமை கிடைக்கிறது.
மக்கள்: உரையாளர், ராஜா, எஸ்தர், சிறுமி.
© Copyright: CEF Germany