STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 054 (Someone cries, the others smirk 2)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

54. அவன் கூக்குரலிடுகிறான் – அவர்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள் 2


வட இஸ்ரேலின் பகுதியில் வீட்டைவிட்டு தொலை தூரத்தில் பத்து சகோதரர்கள் தங்கள் தகப்பனின் ஆடுகளை கவனித்துக்கொ ண்டிருந்தார்கள். (ஆடுகளின் சத்தம்) அவர்களுடைய இளைய சகோதரன் மீதான பொறாமை அவர்களிடம் நிறைந்து காணப்பட்டது.

1 சகோதரர்: “சொப்பானக்காரன் யோசேப்பு இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்?”

2 சகோதரர்: “அவன் மிக செல்வாக்குள்ள மனிதனாக மாறப்போவதை இறைவன்அ வனுக்கு கூறியிருக்கிறார் போலும். நாம் அவனை வணங்குவோம். ஹா!ஹா! இது எவ்வளவு முட்டாள்தனமான காரியம்”.

1 சகோதரர்: “அப்பா அவனுக்கு கொடுத்த அழகான அங்கியைக் குறித்து ப்போதும் நான் பொறாமைப்படுகிறேன்”.

2 சகோதரர்: “இதைக் குறித்து பேசுவதை நிறுத்துங்கள். இது நமது வேதனையை அதிகரிக்கிறது. அவனது அரிக்கட்டு மட்டும் நிற்கிறதாம்”.

வீட்டில் அப்பா தனது மகன்களைக் குறித்து நினைத்துக் கொண்டிருந்தார்.

அப்பா: “யோசேப்பு, உனது பத்து சகோதரர்களைக் குறித்து நான் கவலைப்படுகிறேன்”.

அவர்கள் நலமுடன் உள்ளார்களா? ஒரு வேளை ஆடுகளை காட்டு மிருகங்கள் தாக்கிவிட்டதோ? அவர்களிடம் போய் நலம் விசாரித்து வா.

யோசேப்பிற்கு ஒரு காரியத்தை செய்ய ஐந்து முறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவன் குறைகூறாமல் உடனடியாக கீழ்ப்படிந்தான். அவன் அநேக மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. அவனுடைய சகோதரர்கள் அவனைத் தூரத்தில் கண்டார்கள்.

1 சகோதரர்: “இங்கே பாருங்கள், சொப்பனக்காரன் வருகிறான். அவனைக் கொல்லுவோம்”.

2 சகோதரர்: “அப்படிச் செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாக கிணற்றுக்குள் அவனைத் தள்ளிவிடுங்கள்”.

மூத்த சகோதரனாகிய ரூபன் தனது சகோதரனை பாதுகாக்க விரும்பினான். யோசேப்பு நெருங்கி வந்தான். அவர்களுடைய சதித்திட்டங்கள் எதையும் அவன் அறிந்திருக்கவில்லை.

யோசேப்பு: “சகோதரர்களே, உங்களுக்குச் சமாதானம்! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”

1 சகோதரர்: “அதைப் பற்றி உனக்கென்ன? உனது அங்கியை உடனடியாக் கொடு. பின்பு கிணறு எப்படி இருக்கும் என்று நாங்கள் உனக்கு காண்பிப்போம்”.

யோசேப்பு: “இல்லை! என்னை போகவிடுங்கள்! நான் என்ன தவறுசெய்தேன்?” (அவனைக் குழியில் போடும் சத்தம்)

அதிர்ஷ்டவசமாக அந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லை. ஆனால் யோசேப்பு ஏறி வர முடியாத அளவிற்கு, ஆழமான கிணறாக அது காணப்பட்டது.

யோசேப்பு: “உதவி! உதவி! என்னை வெளியில் கொண்டு வாருங்கள். என் சத்தம் உங்களுக்கு கேட்கிறதா? உதவி! உதவி!”

அவனது சகோதரர்கள் சமவெளியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒட்டகக் கூட்டங்கள் தெரிந்தன. வியாபாரிகள் எகிப்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

1 சகோதரர்: “எனக்கு ஓர் யோசனை. நாம் யோசேப்பை விற்றுவிடுவோம்”.

2 சகோதரர்: “மிகச் சிறந்த யோசனை, யூதா. நாம் பணத்தை பங்கிட்டுக் கொள்வோம்”.

ஒப்பந்தம் போடப்பட்டது. சகோதரர்கள் இருபது வெள்ளிக்காசிற்கு யோசேப்பை அந்நியர்களிடம் விற்றார்கள். அவனுடைய அழகிய அங்கியை தங்கள் தகப்பனிடம் திரும்பி கொண்டு வந்தார்கள். அது முழுவதும் இரத்தக் கறையினால் நிறைந்திருந்தது.

1 சகோதரர்: “அப்பா, இது யோசேப்பின் அங்கி தானே? நாங்கள் வழியில் இதைக் கண்டோம்”.

அப்பா: “ஆமாம். ஏதோ துஷ்டமிருகம் அவனைக் கொன்றுள்ளது. அவன் இறந்துவிட்டான். என் மகன் யோசேப்பு இறந்துவிட்டான்! என் மகனே!”

அவர்கள் பொய் சொல்லி தங்கள் பாவத்தை மறைத்தார்கள். அவனுடைய அப்பா அவர்களை நம்பினார். அவர்கள் இருதயங்களில் தீமை மட்டுமே இருந்தது. ஆனாலும் இறைவன் யோசேப்பிற்கு எல்லாவற்றையும் நன்மையாகச் செய்தார்.

இந்தக் கதையின் தொடர்ச்சியை அடுத்த நாடகத்தில் அறிந்துகொள்ள நான் ஆவலாய் இருக்கிறேன். நீயும் ஆவலாய் இருக்கிறாயா?


மக்கள்: உரையாளர், இரண்டு சகோதரர்கள், யோசேப்பு, அப்பா.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 30, 2018, at 09:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)