STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 053 (Envy has terrible consequences 1)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

53. பொறாமை மிக மோசமான விளைவுகளைக் கொண்டு வருகிறது 1


நீ விளையாட்டில் ஈடுபடுவதுண்டா? அப்போது அவர்களுடன் இணைந்து செல்கிறாயா? அல்லது சண்டை போடுகிறாயா? ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்கிறீர்களா? நாம் ஒருவருக்கொருவர் இசைந்து செல்வதை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. யாக்கோபின் குடும்பத்தில் அவர்கள் இன்னும் இதை கற்றிருக்கவில்லை. அவர்களது கதை வேதாகமத்தில் உள்ளது. ஒரே குடும்பத்தில் பன்னிரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அக்குடும்பத்தில் அநேக காரியங்கள் நடந்து கொண்டிருந்தன.

1 சகோதரர்: “எனக்கு இவ்வளவு தான் கிடைக்கிறது. யோசேப்பு எப்போதுமே சிறப்பானதைப் பெறுகிறான்”.

2 சகோதரர்: “எல்லாம் அவனுக்குத் தான் கிடைக்கிறது”.

1 சகோதரர்: “நாம் கடினப்பட்டு உழைக்கிறோம். ஆனால் அவன் விரும்பும் அனைத்தையும் அப்பா அவனுக்குக் கொடுக்கிறார்”.

2 சகோதரர்: “அவனுக்கு கொடுக்கப்பட்ட புதிய அங்கியை நீ பார்த்தாயா?”

1 சகோதரர்: “நம்மை நேசிப்பதை விட அப்பா அவனை அதிகமாக நேசிக்கிறார். அது சரி இல்லை”.

சகோதரர்கள் பொறாமைப்பட்டார்கள். நீ இதுபோல எப்போதாவது சிந்தித்ததுண்டா? பேசியதுண்டா? நமது இருதயங்களில் உள்ள பொறாமை மோசமான விளைவுகளைக் கொண்டு வருகின்றது. அது தீய குணங்களாகிய பொறாமை, வெறுப்பு, பகை இவைகளை மட்டும் விளைவிக்கக்கூடிய விதையைப் போன்று உள்ளது. இதைக் குறித்து நாம் இயேசுவிடம் உடனடியாக அறிக்கை செய்வது தான் சரியான காரியம் ஆகும். நமது இருதயத்தில் இருந்து பொறாமையை அவர் எடுத்துப் போடும்படி கேட்க வேண்டும்.

யோசேப்பின் சகோதரர்கள் இதை செய்யவில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. எனவே அவர்களுடைய பொறாமை வளர்ந்து கொண்டேயிருந்தது. அவர்கள் யோசேப்பை வெறுத்தார்கள். அவன் இல்லாமலிருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார்கள். இது யோசேப்பை பாதித்தது. குடும்பத்தில் இருந்து அவன் ஒதுக்கப்பட்டவனாக காணப்பட்டான். மேலும் அவனை கேலி செய்தார்கள். இருப்பினும் இவைகள் அனைத்தையும் சகித்துக்கொள்ளும் பெலனை இறைவன் யோசேப்பிற்கு கொடுத்தார். கனவின் மூலம் யோசேப்பிடம் இறைவன் பேசினார். அடுத்த நாள் காலையில் தன்னுடைய சகோதரர்களிடம் அதைக் குறித்துப் பேசினான்.

யோசேப்பு: “நான் ஒரு கனவு கண்டேன். நாம் அறுவடை செய்த அரிக்கட்டுகளைக் கட்டிக் கொண்டிருந்தோம். என்னுடைய அரிக்கட்டைச் சுற்றிலும் உங்கள் அரிக்கட்டுகள் வணங்கிக் கொண்டிருந்தன”.

1 சகோதரர்: “அதன் அர்த்தம் என்ன? நீ எங்களுக்கு இராஜாவாக விரும்புகிறாயா?”

யோசேப்பு: “பின்பு நான் இன்னொரு கனவு கண்டேன். சூரியன், சந்திரன், பதினொரு நட்சத்திரங்கள் என் முன்பு தாழ விழுந்து வணங்கிக் கொண்டிருந்தன”.

2 சகோதரர்: “அமைதியாய் இரு, சொப்பனாக்காரனே, நீ அதிகமாக பேசுகிறாய்”.

இறைவன் கனவின் மூலம் பேசிய காரியங்களை யோசேப்பு சொல்லாமல் இருந்திருந்தால் நலமாக இருந்திருக்கும். இதன் பின்பு இன்னும் அதிகமாக யோசேப்பை அவனுடைய சகோதரர்கள் வெறுத்தார்கள். அவன் சாகவேண்டும் என்று விரும்பினார்கள். பொறமையின் விளைவுகளை உன்னால் காண இயலுகிறதா? யோசேப்பின் அப்பாவும் கனவின் நிமித்தம் அவனைத் திட்டினார். ஆனாலும் யோசேப்பு கனவை மறக்கவில்லை. இதனுடைய அர்த்தம் என்ன? அடுத்த நாடகத்தில் தொடர்ந்து காண்போம்.


மக்கள்: உரையாளர், யோசேப்பு, இரண்டு சகோதரர்கள்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 26, 2018, at 08:23 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)