Home -- Tamil -- Perform a PLAY -- 052 (Without a schedule to Hawaii)
52. கால அட்டவணையின்றி ஹவாய் பயணம்
பறவைகள் ஒரே நேர் கோட்டில் பறப்பதை நீ எப்போதாவது கவனித்துப் பார்த்ததுண்டா?
ஒவ்வொரு ஆண்டும் ஆஸின்,கொக்கு வகை பறவைகள் தெற்கு நோக்கி பறக்கின்றன. இது புறப்படும் நேரம் என்று அவைகளுக்கு கூறுவது யார்? படைத்தவராகிய இறைவன் அவைகளை வழிநடத்துகிறார்.
அவைகள் அவருடைய வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றன. தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கின்றன. சிலபறவைகள் 6000 மைல்கள் பறக்கின்றன. வசந்த காலத்தில் மீண்டும் அதே கூட்டை வந்தடைகின்றன. இது மிகப்பெரிய அற்புதம் அல்லவா?
அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டன் பைப்பரைக் குறித்து உனக்குத் தெரியுமா? அவன் அலாஸ்காவில் வசிக்கிறான். அங்கு 100% தட்பவெப்பநிலை சீராக இருக்கும். 26 நாட்கள் கழித்து அவன் முட்டையை விட்டு வெளியே வருகிறான். கிரான்பெரியும், கம்பளிப்புழுவும் அவனுக்கு உணவு. அவன் புறாவைப் போல பெரிதாக வளருகிறான். அவனது இறகுகள் பச்சை பொன்நிறத்துடன் காணப்படுகின்றன. அவனால் நன்றாக நடக்க இயலாது. ஆனால் பறக்க இயலும். அவன் தனது குளிர்கால விடுமுறையை ஹவாய் பகுதியில் செலவழிப்பது அவனுக்கு மிகவும் முக்கியமான காரியம். அவன் 88 மணி நேரம் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கிறான்.
பேசுபவர்: “விஞ்ஞானிகளுக்கு அவனுடைய பயணம் மிகவும் பெரும் இரகசியமாக உள்ளது. அவன் புறப்படும் முன்பு தனது உடல் எடையில் பாதியை அதிகரித்துக் கொள்கிறான். இது உனக்கு நிகழ்ந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார். அவனது பயணத்தின் போது அவன் 250,000 முறை மேலும், கீழும் தனது சிறகுகளை பறக்கடிக்கிறான். பறவைகளுக்கு ஸ்பீடா மீட்டர் இருந்தால், மணிக்கு 31 மைல்கள் பறப்பதை அது காண்பிக்கும்.
பறக்கும் போது ஒவ்வொரு மணி நேரமும் 0, 6 % எடையை எரித்து, சக்தியை பயன்படுத்துகிறான். இப்படிச் செய்வதால் அவனுடைய இலக்கை அடைவதற்கு 500 மைல்களுக்கு முன்பாகவே அவன் சோர்வடைந்து கடலில் விழ வேண்டும். ஆனால் அப்படி நிகழ்வதில்லை. ஏனெனில் அப்பறவைகள் V வடிவத்தில் பறந்து, ஒவ்வொரு முறையும் முன்வரிசையில் மாறி மாறி பறக்கின்றன. எனவே அவைகள் தங்கள் ஆற்றலைப் பாதுகாக்கின்றன”.
அவனுக்குள் இறைவன் வைத்திருக்கும் வழிமுறைகளை அவன் பின்பற்றுகிறான். காம்பஸ் இல்லாமல் ஒரு பறக்கும் திட்டம். அவன் இரவு முழுவதும் மேகங்களுக்கிடையில் பறக்கிறான். இருப்பினும் பறவைக் குஞ்சுகள் ஒரு போதும் ஹவாய் பகுதியில் இருப்பதில்லை. அந்தப் பெரிய கடலின் நடுப்பகுதியில் ஏதேனும் ஒரு சிறு தீவைக் கண்டுபிடிக்கின்றன. இது தற்செயலாய் நிகழ்வது இல்லை. அவைகள் இறைவனில் நல்ல சட்டதிட்டங்களை கடைபிடிக்கின்றன. இறைவனுக்கு நன்றி செலுத்தி பாடல்கள் பாடுகின்றன.
நாமும் இதே காரியத்தை செய்கின்றோமா? இறைவனின் நல் வழிமுறைகள் வேதாகமத்தில் உள்ளன. அதைப் பின்பற்றுவோர் இறுதி இலக்கை அடைவார்கள்.
மக்கள்: உரையாளர், பேசுபவர்.
© Copyright: CEF Germany