Home -- Tamil? -- Perform a PLAY -- 092 (A man-eating tiger 4)
92. மனிதனை தின்னும் புலி 4
ஷாகிப் குரூப்: “ரிங்கு! என்ன ஆயிற்று? ஏன் பதற்றப்படுகிறாய்?”
ரிங்கு: “ஷாகிப்! நாங்கள் புலி வேட்டைக்கு போகிறோம். நமது கிராமத்தில் ஒரு மனிதனைத் தின்னும் புலி சுற்றிக் கொண்டிருக்கிறது”.
ஷாகிப் குரூப்: “நீயும் போகிறாயா?”
ரிங்கு: “ஆமாம். ஒருவேளை அது என்னைத் தாக்கினால் அல்லது தீய ஆவிகள் வந்தால் என்ன செய்வது?”
ஷாகிப் குரூப்: “உன்னைப் பாதுகாக்கிற ஒருவர் இருக்கிறார். அவர் பலமுள்ளவர். அனைத்தையும் செய்ய வல்லவர். அவர் தீய ஆவிகளை விட வல்லமையுள்ளவர். அவர் இயேசு. தீய ஆவிகளின் வல்லமையில் இருந்து நம்மை விடுவிக்கும்படி அவர் வந்தார் என்று வேதாகமம் கூறுகிறது”.
ரிங்கு: “உண்மையாகவே இயேசு வல்லமை நிறைந்தவரா?”
ஷாகிப் குரூப்: “ஆமாம், மிகுந்த வல்லமையுள்ளவர்”.
ரிங்கு: “உங்களைப் போல நானும் அவரை விசுவாசிக்க விரும்புகிறேன்”.
தனக்கு இயேசு தேவை என்பதை ரிங்கு தெளிவாக உணர்ந்தான். அவன் விண்ணப்பம் செய்து, தனது வாழ்வில் அவரை அழைத்தான். அவன் காண முடியாத இறைவனிடம் பேசினான். தனது வார்த்தைகளை இயேசு கேட்கிறார் என்ற நிச்சயம் அவனுக்கிருந்தது.
ஷாகிப் குரூப்: “ரிங்கு! நீ எப்போதும் இயேசுவுடன் பேச முடியும். புலி வேட்டையின் போது, அவரிடம் உதவி கேள்”.
சில மணி நேரம் கழித்து அவர்கள் புறப்பட்டார்கள். அந்த மனிதர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். ரிங்கு விளக்கை எடுத்துக்கொண்டான். அவர்கள் பழைய மரத்தின் மீது அமைதியாய் ஏறினார்கள். அவர்கள் அந்தப் பகுதி முழுவதும் சுற்றிலும் பார்த்தார்கள். ரிங்கு அமைதியாய் விண்ணப்பம் செய்தான்.
ரிங்கு: “ஆண்டவராகிய இயேசுவே! அந்தப் புலி யாரையும் கொல்லும் முன்பு நாங்கள் அதைக் கொன்று விட உதவி செய்யும்”.
உனக்கு ஏதாவது தெரிகிறதா? ஏதோ ஒன்று அசைவது போல் தெரிகிறது. ரிங்கு தனது அப்பாவின் தோளை இறுகப் பிடித்துக்கொண்டான். அவனுக்கு மூச்சுவிட கூட சிரமமாக இருந்தது. பசியுடன் இருந்த புலி, காளையின் மாம்சத்தை முகர்ந்து பார்த்தது. சுற்றிலும் பார்த்தது. அப்போது அந்தக் காரியம் நிகழ்ந்தது. (துப்பாக்கி சுடும் சத்தம்)
அப்பா: “ஓ! நான் தவற விட்டுவிட்டேன்”.
மனிதன்: “கவனமாக இருங்கள். அது வருகின்றது. நம்மை நோக்கி தாவப்போகிறது”.
அப்பா: “ரிங்கு, அந்த விளக்கின் வெளிச்சத்தை அதன் கண்கள் மீது காட்டு”.
ரிங்கு: “ஐயோ! இந்த விளக்கு வெளிச்சம் சரியாக வரவில்லை. ஆண்டவராகிய இயேசுவே! நான் என்ன செய்வேன்?”
ரிங்கு தனது முழுப் பலத்துடன் அந்த விளக்கின் வெளிச்சத்தை புலியின் மீது காட்டினான். அந்த வெளிச்சத்தினால் புலிக்கு கண் கூசியது. புலி தடுமாறியது. அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டது.
புலி இன்னொரு முறை தவ்வியது. பின்பு அந்த தரையில் காயத்துடன் சுருண்டு விழுந்தது. ரிங்குவின் அப்பா துப்பாக்கியில் மீண்டும் குண்டுகளைப் போட்டு சுட்டார். (துப்பாக்கியின் சத்தம்) அந்த ஆபத்தான மிருகம் செத்து விழுந்தது.
ஒவ்வொருவரும் மன நிம்மதி அடைந்தார்கள். ரிங்கு அமைதியாக விண்ணப்பம் பண்ணினான்.
ரிங்கு: “இறைவனே! நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் எங்களுக்கு உதவினீர்”.
இறைவன் யாரையும் தண்டிப்பதில்லை. அவருடனான உனது அனுபவம் எப்படி இருக்கிறது? உனது விண்ணப்பத்திற்கு அவர் எவ்விதம் பதிலளித்தார் என்பதை எனக்கு எழுதுங்கள்.
மக்கள்: உரையாளர், ரிங்கு, ஷாகிப் குரூப், அப்பா, மனிதன்.
© Copyright: CEF Germany