STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 034 (The most important question)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

34. மிக முக்கியமான கேள்வி


வானத்தை அண்ணாந்து பார்த்து, பேச்சற்றவர்களாக சீஷர்கள் அந்த மலையில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு நொடிக்கு முன்பாக இயேசு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். உடனே அவர் பரலோகிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு முன்பாக அவர் மறைந்து போனார். ஆச்சரியப்படத்தக்க விதமாக இரண்டு மனிதர்கள் அவர்கள் முன்பு தோன்றினார்கள்.

தூதன்: “நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்க்கிறீர்கள்? இந்த இயேசு எப்படி வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ அப்படியே வருவார்”.

இயேசு மறுபடியும் வருகிறார். இது மிகப்பெரிய வாக்குத்தத்தம் அல்லவா?

சிறுமி: “இயேசு மறுபடியும் வருவார் என்பது உண்மை தானா?”

ஆமாம். வேதாகமத்தில் அவரே கூறியிருக்கிறார். நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன். ஆயத்தம் பண்ணின பின்பு, நீங்களும் என்னிடத்தில் இருக்கும் படி உங்களை சேர்த்துக் கொள்ள வருவேன்.

சிறுவன்: “இயேசு எப்பொழுது வருவார்?”

சீஷர்கள் இதே கேள்வியை கேட்ட போது, அவர் இப்படிக் கூறினார்.

இயேசு: “அந்த நாளைக் குறித்து அறிவது முக்கியமல்ல. அதை விட முக்கியம் நீங்கள் என்னை விட்டு விலகாமல் இருப்பது ஆகும். என்னில் விசுவாசமாயிருங்கள். எனக்காக காத்திருங்கள். பிதா ஒருவர் மட்டுமே அந்த நேரத்தை அறிந்திருக்கிறார்”.

இருப்பினும் இயேசு கூறினார், நாம் அவர் வருகையை உணர முடியும். அவர் வரும் முன்பு யுத்தங்களும், பூமிஅதிர்ச்சிகளும் உண்டாகும். அவர் வருகை தாமதிக்காது.

சிறுமி: “இயேசு எப்படி மறுபடியும் வருவார்?”

சிறுவன்: “மேகங்கள் மீது வருவார். சரிதானா?”

நீ நன்றாக கவனிக்கின்றாய். அவர் திடீரென்று வருவார். செய்தித்தாள்கள், குறுந்தகவல்களில் அறிவிப்பு வராது. அவர் வரும் போது அனைவரும் அவரைக் காண்பார்கள். அவரை மறந்தவர்கள், அவரில்லாமல் வாழ்ந்தவர்கள், இயேசுவே இல்லை என்றவர்கள் அனைவரும் பயந்து நடுங்குவார்கள். அவரை நேசிப்பவர்கள், அவர் வருகைக்காக காத்திருப்பவர்கள் அப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அவருடன் இணைந்து பரலோகத்திற்கு செல்வார்கள்.

நான் அவர் பக்கம் இருக்கிறேனா? நீ அவர் பக்கம் இருக்கின்றாயா? இது மிக முக்கியமான கேள்வி. இறைவன் ஒவ்வொருவரும் தீர்மானித்து வர விரும்புகிறார். அவர் நம்மை நேசிக்கிறார். ஆண்டவராகிய இயேசுவின் மீது விசுவாசம் வைப்பது தான், நாம் அவர் பக்கம் இருக்கிறோம் என்பதற்கான உத்தரவாதம் ஆகும். இயேசு மறுபடியும் வருவார். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று நான் நம்புகிறேன்.


மக்கள்: உரையாளர், தூதன், சிறுமி, சிறுவன், இயேசு.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 30, 2018, at 09:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)