Home -- Tamil -- Perform a PLAY -- 009 (He came and He’ll come)
9. அவர் வந்தார்; அவர் மீண்டும் வருகிறார்
ஆண்டின் மிக அழகான நேரம் தொடங்கியுள்ளது.
கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் கடைகளில், வீதிகளில் காணப்படுகின்றன.
வீடுகளின் அறைகளில் மரக்கிளைகள், தங்க நட்சத்திரங்கள் அலங்கரிக்கின்றன.
முதலாவது மெழுகுவர்த்தி எரிகின்றது.
(ஒரு கிறிஸ்மஸ் பாடல் – இசை மட்டும்)
ஒரு மெழுகுவர்த்தி எரிகின்றது. ஆண்டின் மிக அழகான நேரம் தொடங்கியுள்ளது. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.
அது என்னிடம் இவ்விதமாகக் கூறுகிறது: “இறைவன் உன்னையும், என்னையும் நேசிக்கிறார். அவருடைய குமாரன் குழந்தையாகப் பிறந்திருக்கிறார்”.
பிரகாசிக்கும் வெளிச்சங்கள் நற்செய்தியைக் கூறுகின்றன.
முதல் மெழுகுவர்த்தி நமக்கு நினைவுபடுத்துவது:
இயேசுவே பரலோகில் இருந்து பூமிக்கு வந்தார். அவர் நம்மைப் போன்ற மனிதனாக வந்தார். நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். அவர் அடக்கம்பண்ணப்பட்டார். மூன்று நாட்களுக்கு பின்பு உயிர்த்தெழுந்தார். அவர் இன்றும் ஜீவிக்கிறார்.
இரண்டாவது மெழுகுவர்த்தி நமக்கு கூறுவது:
இயேசுவே இந்த உலகின் ஒளியாய் இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஜீவஒளி அவரே. அவர் உனது இருதயத்தை ஒளியினாலும், சந்தோஷத்தினாலும் நிரப்ப விரும்புகிறார்.
மூன்றாவது மெழுகுவர்த்தி நமக்கு சொல்லுவது:
அவர் வருகிறார். ஆண்டவராகிய இயேசு மறுபடியும் வருகிறார். ஆனால் 2000 ஆண்டுகள் முன்பு வந்ததைப் போல் அல்ல. அவர் முன்னணையில் கிடத்தப்பட்ட குழந்தையாக மறுபடியும் வரமாட்டார். அவர் ஆண்டவராகவும், இராஜாவாகவும் வருவார்.
நான்காவது மெழுகுவர்த்தி அறிவிப்பது:
அவருக்காகக் காத்திரு. ஆயத்தமாயிரு. இன்று உன்வாழ்வில் அவர் வர இடம் கொடுப்பதே சிறந்த காரியம். இது அவர் வருகைக்கான சிறந்த ஆயத்தம்.
இயேசு வந்தார். அவர் மறுபடியும் வருவார். வருகையைக் குறித்த இந்த நற்செய்தி எல்லா மெழுகுவர்த்தியையும் விட பிரகாசமாக ஒளிர்கின்றது.
நான் உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறேன்.
இன்னுமொரு காரியம்: அடுத்த முறை கிறிஸ்துமஸ் வினா-விடை இருக்கும். நீயும் பங்கெடுப்பாயா?
மக்கள்: உரையாளர், சிறுபெண்.
© Copyright: CEF Germany