Home -- Tamil -- Perform a PLAY -- 010 (A Christmas quiz)
10. கிறிஸ்துமஸ் வினா - விடை
நாம் ஏற்கெனவே அறிவித்த கிறிஸ்துமஸ் வினா-விடை இன்று.
பேசுபவர் (ஒரு குழந்தை): “எனக்கு எல்லா பதில்களும் தெரியும் என்று நம்புகிறேன்!”
கிறிஸ்துமஸ் என்பது பிறந்த நாள் கொண்டாட்டம். அது ஆண்டவராகிய இயேசுவின் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் முழு உலகிலும் மக்கள் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். நானும் அப்படிச் செய்கிறேன். உலக இரட்சகர் பிறந்ததை எண்ணி, நான் மகிழ்ச்சியடைகிறேன்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிறந்த போது, நடு இரவில் இறை தூதன் வந்தான். “பயப்படாதிருங்கள்” என்று ஆடுகளை மேய்த்த மேய்ப்பர்களிடம் இறை தூதன் கூறினான். “சந்தோஷப்பட்டு களிகூருங்கள். நான் உங்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறேன். இதோ இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். அவரே மேசியா. அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. நீங்கள் குழந்தையை துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்”. என்றான்.
உடனே திரளான தூதர்கள் தோன்றினார்கள். “இறைவனுக்கே மகிமை! இரட்சகர் பிறந்திருக்கிறார். இறைவன் மக்களை அதிகமாக நேசிக்கிறார். அவர் உன்னையும் அதிகம் நேசிக்கிறார்!”
இப்போது நாம் கிறிஸ்துமஸ் வினா-விடையைத் துவங்குவோம். நான் ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு பதில்கள் கூறுவேன். நீங்கள் சரியான ஒன்றை எழுதவேண்டும்.
1. இயேசு எங்கு பிறந்தார்? பெத்லகேம் அல்லது கெய்ரோ?
2. இயேசுவின் தாயார் பெயர் என்ன? சாராள் அல்லது மரியாள்.
3. யோசேப்பு என்ன வேலை செய்தார்? எலக்ட்ரீசியன் அல்லது தச்சர்.
4. உலக இரட்சகர் பிறந்ததைக் குறித்து தூதர்கள் யாரிடம் கூறினார்கள்? மேய்ப்பர்கள் அல்லது ஏரோது.
நீங்கள் மின்னஞ்சல் மூலம் உங்கள் பதில்களை அனுப்பலாம். அல்லது எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் முகவரி, வயது குறிப்பிடவும்.
பேசுபவர் (ஒரு குழந்தை): “செம ஜாலி! நான் சரியாக பதில் அளித்துவிட்டேன்!”
உனக்கு எனது ஆலோசனை: நீ வேதாகமத்தை வைத்திருந்தால் லூக்கா 2-ம் அதிகாரத்தை வாசி. இயேசுவின் பிறப்பைக் குறித்த கதைக்கு சரியான பதில்களை நீ அறிய முடியும்.
மக்கள்: உரையாளர், குழந்தை.
© Copyright: CEF Germany