STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 142 (Doomed man 3) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
142. தண்டனை விதிக்கப்பட்ட மனிதன் 3டாக்டர்: “டெய்லர், நீ மிகவும் பரிதாபமாக இருக்கிறாய். உனது ஆசையை நிறைவேற்றிக்கொள். நீ நீண்ட நாட்கள் வாழ இயலாது”. ஹட்சன்: “அப்படியா? நான் நீண்ட காலம் வாழ்வேன். நான் சீனாவில் பணிசெய்யும்படி இறைவன் எனக்காக செயல்படுவார். நான் செத்தாலும் பரவாயில்லை. நான் இயேசுவுடன் இருப்பேன். நான் அதை எதிர்நோக்கி இருக்கிறேன்”. மிக மோசமான காய்ச்சலினால் மரித்த ஒருவனின் சடலத்தின் மூலம் ஹட்சன் டெய்லரை நோய் தொற்றிக்கொண்டது. அவர் குணமடைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இயேசு அவனைப் பாதுகாத்தார். ஹட்சன் தனது மருத்துவப்படிப்பைத் தொடர்ந்தார். சீனாவில் நற்செய்தியாளராக பணிபுரிய அவருக்கு இந்த படிப்பு தேவைப்பட்டது. 1853-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி அவர் ஆயத்தமாயிருந்தார். “டம்பிரைஸ்” என்ற கப்பலில் அவர் ஏறி இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு சென்றார். கடுமையான புயல் வீசிய போது கப்பல் பயணம் கடினமாக இருந்தது. கப்பல் மூழ்கத்தக்கதாக அலைகள் கப்பலோட்டிகளைப் பயமுறுத்தின. ஆனாலும் பாதுகாப்பவராகிய இயேசு அவர்களை மூழ்கவிடவில்லை. பின்பு ஒரு சமயம் காற்று வீசவே இல்லை. கப்பல் அப்படியே நின்றுவிட்டது. பின்பு கடுமையான நீர் சுழற்சி ஏற்பட்டது. கூர்மையான பாறையை நோக்கி கப்பல் சென்றது. மாலுமியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாலுமி: “இது தான் நமது முடிவு. இதற்கு மேல் நாம் செய்யக் கூடியது ஒன்றுமில்லை”. ஹட்சன்: “ஓ, நாம் செய்யக்கூடிய ஒரு காரியம் உள்ளது”. மாலுமி: “அது என்ன?” ஹட்சன்: “நாம் விண்ணப்பம் ஏறெடுக்கலாம். இறைவனை நோக்கி ஒரு காற்றை வீசச்செய்யும்படி கேட்கலாம்”. ஹட்சன் டெய்லர் விண்ணப்பம் ஏறெடுத்தார். இறைவன் அவர்களுக்கு உதவி செய்வார் என்று நம்பினார். ஹட்சன்: “கப்பலை செலுத்த ஆரம்பியுங்கள்”. மாலுமி: “என்ன முட்டாள்தனம் இது?” ஹட்சன்: “இறைவன் காற்றை அனுப்பப் போகிறார்”. மாலுமி: “இது முட்டாள்தனமானது. இது நடக்கும் போது நான் அதை நம்புவேன்”. அப்போது பரியாசம் பண்ணியவர் அற்புதத்தைக் கண்டார். திடீரென்று காற்று வீசியது. ஆபத்தான சூழ்நிலையைத் தாண்டி கப்பல் எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் வேகமாகச் சென்றது. இயேசு தனது பாதுகாக்கும் கரத்தை “டம்பிரைஸ்” கப்பல் மீது வைத்திருந்தார். அவர்கள் ஷங்காய் என்ற இடத்தில் இறங்கினார்கள். அங்கு கப்பல் நங்கூரம் பாய்ச்சி நின்றது. சீன மண்ணில் கால் பதித்து நடந்த போது ஹட்சன் சந்தோஷத்தின் மிகுதியால் அழுதார். அவருடைய இரட்சகரைக் குறித்து சீன மக்களுக்குச் சொல்ல விரும்பினார். எனவே அவர்களுடைய மொழியைக் கற்றார். அது கடினமான பணி. சிலமுறை அவருக்கு மிகவும் சோர்வு ஏற்பட்டது. ஹட்சன்: “சார் ஜீசு அய் ஓ, ஷ ட்ஸ்செங் ட்ஸ்சிங் கௌ சு ஒ”. வேறு யாராவது வந்து சீனமக்களுக்கு ஆண்டவராகிய இயேசுவைக் குறித்து சொல்ல வேண்டும் என்பது போல் காணப்பட்டது. அவரும், அவருடைய உடன்பணியாளரும் அங்கே வரவேற்கப்படவில்லை. பெண்: “துங்ஸ்சௌ! என்ற இடத்திற்கு போக வேண்டாம். அங்குள்ள மக்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள் அல்லது ஜெயிலில் அடைத்துவிடுவார்கள்”. ஹட்சன்: “மோசமான மக்கள் என்றால், நாம் அங்கு தான் செல்லவேண்டும். அவர்களுக்கு இயேசு தேவை”. (சத்தம்) ஏதோ ஒன்று நிகழ்ந்தது. அடுத்த நாடகத்தில் நான் அதை உங்களுக்குச் சொல்வேன். மக்கள்: உரையாளர், மருத்துவர், ஹட்சன்.டெய்லர், மாலுமி, பெண். © Copyright: CEF Germany |