STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 085 (The fiery oven miracle 3) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
85. அக்கினிச் சூளை அற்புதம் 3மிகப்பெரிய சிலை தயாராகிவிட்டது. ஒன்பது அடி அகலம், 100 அடி உயரம் இருந்தது. ஒருவரும் வராமல் இருக்கக் கூடாது. ராஜாவின் செய்தியாளர்: “கவனியுங்கள், இது தான் எல்லோருக்குமான ராஜாவின் கட்டளை. நீங்கள் இசை சத்தத்தை கேட்டவுடன், தாழ விழுந்து, நேபுகாத்நேச்சார் ராஜா உண்டுப்பண்ணிய தங்கத்தாலான சிலையை வணங்க வேண்டும். யாரெல்லாம் அதை வணங்காமல் இருக்கிறார்களோ, அவர்கள் எரிகின்ற அக்கினிச் சூளைக்குள் போடப்படுவார்கள்”. கேள்விக்கே இடமில்லை. எல்லோரும் அங்கே வந்தார்கள். மூன்று பேர் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இதனிமித்தம் கலங்கவில்லை. அநேக ஆண்டுகள் முன்பு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, சொந்த நாடாகிய இஸ்ரேலை விட்டு வந்தார்கள். தங்கள் வீடுகளை இழந்தார்கள். ஆனால் இறைவன் மீதான தங்கள் விசுவாசத்தை இழக்கவில்லை. இறைவனுடைய கட்டளையை அவர்கள் அறிந்திருந்தார்கள். சிலையை ஆராதிப்பது கூடாத காரியம். (பின்னனி இசை) மூன்று நண்பர்கள் தவிர ஒவ்வொருவரும் தாழ விழுந்து சிலையை வணங்கினார்கள். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குற்றம் சாட்டுபவன்: “ராஜாவே, தங்க சிலையை பணிந்துக்கொள்ளும்படி நீர் ஒவ்வொருவருக்கும் கட்டளையிட்டிருக்கிறீர். ஆனால் மூன்று யூதர்கள் உமது வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை”. ராஜா: “என்ன? எனது கட்டளைக்கு கீழ்ப்படியவில்லையா? அவர்களை உடனடியாக என்னிடம் கொண்டு வாருங்கள்”. (தானியேலின் நண்பர்கள் ராஜாவிடம் கொண்டு வரப்பட்டார்கள்) ராஜா: “தங்க சிலையை நீங்கள் பணிந்துக்கொள்ளவில்லை என்பது உண்மையா? நான் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன். நீங்கள் இன்னமும் மறுத்தால், உடனடியாக அக்கினிச் சூளையில் போடப்படுவீர்கள். உங்கள் இறைவன் உங்களை காப்பாற்றுவார் என்று நினைக்காதீர்கள்”. உங்கள் வாழ்வில் இப்போது எது மிக முக்கியம்? உங்கள் உயிரா? அல்லது இறைவனுக்கு உண்மையாய் இருப்பதா? மூன்று நண்பர்களும் தங்கள் பதிலைக் கூற நீண்ட நேரம் யோசிக்கவில்லை. தானியேலின் நண்பன்: “எங்கள் இறைவன் விரும்பினால், எரிகிற அக்கினிச் சூளையில் இருந்து எங்களை காப்பாற்ற முடியும். எங்களை காப்பாற்றாவிட்டாலும், நாங்கள் அவருக்கு உண்மையாய் இருப்போம். நாங்கள் ஒருபோதும் இந்த சிலையைப் பணிந்துக்கொள்ள மாட்டோம்”. இவர்கள் மற்ற அனைத்தையும் விட இறைவனை அதிகமாக நேசித்தார்கள். நேபுகாத்நேச்சாருக்கு கோபம் பற்றியெரிந்தது. ராஜா: “சூளையை ஏழு மடங்கு அதிகமாக சூடாக்குங்கள். இவர்களை அதில் தூக்கிப்போடுங்கள்”. சேவகர்கள் அவர்களை தூக்கிப்போடும்படி கொண்டுப்போனார்கள். சூடு அதிகமாக இருந்ததினால் கொண்டுப்போன சேவகர்களை அந்த சூடு கொன்றுபோட்டது. ராஜா அதிர்ச்சியுடன் நெருப்புக்குள் பார்த்தார். ராஜா: “நெருப்பில் நான்கு பேர் நடப்பதை நான் காண்கிறேன். இன்னொருவரின் சாயல் இறைவனின் சாயலுக்கு ஒத்திருக்கிறது”. ராஜா அக்கினிச் சூளையில் இருந்து வெளியே வர கட்டளையிட்டார். ராஜா: “உன்னதமான சர்வவல்லமையுள்ள இறைவனின் தாசர்களே, வெளியே வாருங்கள்!” அவர்கள் அக்கினியில் எரியாமல் வெளியே வந்தார்கள். அவர்கள் முடி கருகவில்லை. அவர்களின் ஆடைகளில் இருந்து நெருப்பின் மணம் வீசவில்லை. இறைவன் அவர்களை நெருப்பிலிருந்து காப்பாற்றினார். இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யும் இறைவனைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா? எப்பொழுதும், எல்லா இடத்திலும் அவருக்கு உண்மையாயிருங்கள். மக்கள்: உரையாளர், ராஜாவின் செய்தியாளர், குற்றம் சாட்டுபவன், ராஜா, தானியேலின் நண்பன். © Copyright: CEF Germany |