STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 084 (The mysterious dream 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
84. இரகசியம் நிறைந்த கனவு 2நேபுகாத்நேச்சார் ராஜாவால் சரியாக தூங்க முடியவில்லை. அவன் அங்குமிங்கும் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். பின்பு தனது வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்தான். (மணி ஓசை சத்தம்) வேலைக்காரன்: “ராஜாவே நீர் வாழ்க, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?” ராஜா: “எனது ஆலோசகர்கள், மந்திரவாதிகளை உடனடியாக வரச்சொல்”. (மக்கள் நடக்கும் சத்தம், பின்பு அமைதி) ராஜா: “என்னை கலங்கப்பண்ணிய ஒரு கனவு கண்டேன். அந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு கூறுங்கள்”. மந்திரவாதிகள்: “உங்கள் கனவு என்ன என்பதை கூறுங்கள். ராஜாவே! நாங்கள் அதன் அர்த்தத்தை உமக்கு கூறுவோம்”. ராஜா: “இல்லை. நீங்கள் தான் அந்தக் கனவையும் சொல்ல வேண்டும். அதன் அர்த்தத்தையும் சொல்ல வேண்டும். இல்லையெனில் நான் உங்களைக் கொன்றுவிடுவேன்!” மந்திரவாதிகள்: “ராஜாவே! நீர் அந்த கனவை உமது அடியாருக்கு சொல்லுங்கள். நாங்கள் அதன் அர்த்தத்தை கூறுவோம்”. ராஜா: “நேரத்தை வீணடிக்காதீர்கள். அதைச் சொல்ல முயற்சியுங்கள்”. மந்திரவாதிகள்: “நாங்கள் கனவிற்கான அர்த்தத்தை கூற முடியும். இந்த உலகில் கனவையும், அதன் அர்த்தத்தையும் கூறக் கூடிய ஒரு மனிதன் கூட இல்லை. நீங்கள் கேட்பது இயலாத காரியம்”. ராஜா மிகவும் கோபப்பட்டான். நான் உங்களை கொல்லப்போகிறேன் என்றான். தானியேலும், அவனுடைய நண்பர்களும் இதனால் பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் தானியேல் பயப்படவில்லை. ராஜாவின் இந்த பயங்கரமான கட்டளையை கேள்விப்பட்டவுடன் தனது நண்பர்களிடம் தானியேல் இதைப்பற்றி கூறினான். தானியேல்: “நாம் விண்ணப்பம் பண்ணுவோம். நமது இறைவன் அனைத்தையும் அறிந்திருக்கிறார். அவர் இந்த இரகசியம் நிறைந்த கனவை எனக்கு கூற முடியும்”. இறைவன் மட்டுமே உதவக்கூடிய ஒரே நபர். அவர் அதைச் செய்தார். அந்த இரவில் இறைவன் தானியேலிற்கு கனவை வெளிப்படுத்தினார். தானியேல்: “நீர் அற்புதமான இறைவன்! உமக்கு நன்றி! நீர் அனைத்தையும் அறிந்தவர். நீர் எங்கள் விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கிறீர்”. தானியேல் ராஜாவிடம் தன்னை அழைத்துச் செல்லும்படி தானியேல் கேட்டான். ராஜா: “உண்மையாகவே எனது கனவை உன்னால் கூறமுடியுமா?” தானியேல்: “ராஜா கேட்பதை ஒரு மனிதனாலும் செய்ய இயலாது. ஆனால் உயிருள்ள இறைவன் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். எதிர்காலத்தில் நடக்கப் போவதை அவர் உமக்கு கனவில் வெளிப்படுத்தியுள்ளார். ராஜா மிகப்பெரிய சிலையை கனவில் கண்டார். அதனுடைய தோற்றம் பயங்கரமானது. தலை முழுவதும் பசும் பொன்னால் இருந்தது. இது உமது அரசாட்சியைக் குறிக்கிறது. அது மிகவும் பெரியது, வலிமையானது. உமக்குப் பின்பு வரக்கூடிய அரசாட்சிகள் சிறியவைகள். இறுதியில் ராஜ்ஜியம் பிரிக்கப்படும். அதே சமயத்தில் இறைவன் தமது அரசைக் கட்டுகிறார். இறைவனுடைய அரசு என்றென்றும் நிலைத்திருக்கும். அது நித்தியமானது. உமது கனவு உண்மையாய் நிறைவேறும்”. ராஜா: “உமது இறைவன் ராஜாதி ராஜா!” கனவைக் குறித்த விளக்கத்தைக் கேட்டவுடன் ராஜா மிகவும் சந்தோஷப்பட்டான். அவன் தானியேலை ஐசுவரியவனாக்கி, அநேக வெகுமதிகளை அவனுக்கு கொடுத்தான். அவன் அடுத்து என்ன செய்தான் என்பதை அடுத்த நாடகத்தில் காண்போம். மக்கள்: உரையாளர், நேபுகாத்நேசர், மந்திரவாதிகள், தானியேல், வேலைக்காரன். © Copyright: CEF Germany |