Home -- Tamil? -- Perform a PLAY -- 153 (Does the devil exist 1)
153. சாத்தான் உண்மையாகவே இருக்கிறானா 1
சிறுவன்: “எனக்கு ஒரு கேள்வி. சாத்தான் உண்மையாகவே இருக்கிறானா? அவன் எங்கிருந்து வந்தான்?”
சாத்தான் உண்மையாகவே இருக்கிறான். அவனது கதை பரலோகத்தில் இருந்து தொடங்கியது.
சிறுவன்: “பரலோகத்திலா?”
படைக்கப்பட்ட எல்லா தூதர்களிலும் லூசிபர் மிகவும் அழகுள்ள தூதனாக இருந்தான்.
சர்வவல்லமையுள்ள இறைவனை ஆராதிக்கும்படி அவன் படைக்கப்பட்டான். ஆனால் அவனுடைய இருதயத்தில் பொறாமையின் சிந்தனைகள் தோன்றியது.
லூசிபர்: “நான் பெரியவனாக விரும்புகிறேன். இறைவனைப் போல! நான் அனைத்தையும் ஆளுகை செய்ய விரும்புகிறேன். நான் இறைவனாக விரும்புகிறேன்”.
மிகப்பெரியவரை ஆராதிப்பதற்குப் பதிலாக, அவன் பெரியவனாக வேண்டும் என்று விரும்பினான். உயிருள்ள இறைவன் அவனை பரலோகத்தில் இருந்து கீழே விழத் தள்ளினார்.
அந்த நேரம் முதற்கொண்டு அவன் சாத்தான் அல்லது பிசாசு என்று அழைக்கப்படுகிறான். அவன் இறைவனுடைய எதிரி. அவன் ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்தி இறைவனுடைய மக்களுக்கான அவருடைய திட்டங்களை அழிக்க விரும்புகிறான்.
நாம் வாழும்படி இறைவன் விரும்புகிறார். சாத்தான் நமது மரணத்தை விரும்புகிறான். இறைவன் சத்தியத்தை நேசிக்கிறார். சாத்தான் ஒரு பொய்யன்.
இறைவன் மக்களுடன் ஐக்கியப்பட விரும்புகிறார். சாத்தான் நம்மை அழிக்க விரும்புகிறான்.
சிறுவன்: “அவன் ஆதாம் ஏவாளிடம் வெற்றி பெற்றுவிட்டான். அவர்கள் சோதனையில் தோற்றுப்போனார்கள்”.
அவனுடைய தந்திர செயலை நான் உனக்கு கூறுகிறேன்: மக்களை இறைவனிடம் இருந்து பிரிப்பதற்காக, அவன் சந்தேகங்களை விதைக்கிறான். அவர்களின் இருதயங்களில் இறைவனுக்கு எதிரான அவநம்பிக்கையை விதைக்கிறான்.
சாத்தான்: “நீங்கள் இந்த மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று இறைவன் உண்மையாகவே கூறினாரா? அவர் சிறப்பானதை உங்களுக்கு தடை செய்துள்ளாரா?”
ஆதாமும், ஏவாளும் வஞ்சிக்கப்பட்டார்கள். எனவே தான் உலகத்தில் மரணம் வந்தது. ஒவ்வொரு மனிதனும் இறைவனை விட்டு பிரிக்கப்பட்டிருக்கிறான்.
ஆனாலும் இறைவனுடைய அன்பு பெரியது. எனவே தான் சாத்தானை தோற்கடித்து, எல்லாவற்றையும் சீரமைக்க அவர் வாக்குப்பண்ணினார்.
சிறுவன்: “அவர் இயேசுவைக் குறித்து கூறுகிறார். எனக்கு நிச்சயம் தெரியும்”.
நீ சொல்வது சரி. இயேசுவே வெற்றியாளர், அவருடைய பெயரைக் கேட்டால் சாத்தான் நடுங்குகின்றான்.
இயேசு எந்த நாட்டில் பிறப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான். பார்வோனையும், மற்றவர்களையும் பயன்படுத்தி யூதர்களை நிர்மூலமாக்க அவன் முயற்சித்தான்.
ஆனாலும் இறைவன் தன்னுடைய திட்டத்தை தோற்றுப்போகவிடவில்லை. ஒரு நாள் இரவு பெத்லகேமில் இயேசு பிறந்தார்.
இயேசு வெற்றியாளர், அவர் சாத்தானின் கிரியைகளை அழிக்கும்படி வந்தார். எனவே தான் பிசாசு அவரை வெறுக்கிறான். அவருக்கு எதிர்த்து நிற்கிறான்.
நான் சொல்வதின் அர்த்தத்தை அடுத்த நாடகத்தில் அறிவாய்.
மக்கள்: உரையாளர், சிறுவன், லூசிபர்(சாத்தான்).
© Copyright: CEF Germany