Home -- Tamil? -- Perform a PLAY -- 087 (I don’t want to live any more)
87. நான் இனி வாழ விரும்பவில்லை
பென்: “எனது அப்பாவும் எப்போதும் சிறப்பானவராக இருப்பதில்லை. நான் தவறு செய்யும் போது, அவர் என்னைக் கவனிக்கிறார். அவர் என்னைத் திட்டும் போது, நான் வருத்தப்படுகிறேன். சில சமயங்களில் எனக்கும் வாழ்வின் மீது வெறுப்பு வந்திருக்கிறது”.
ஹைல்: “இந்த நாளைக் குறித்து நீ எப்படி உணருகிறாய்?”
பென்: “இயேசு இருக்கிறார் என்பதை இன்று நான் அறிந்துகொண்டேன். நான் தோற்றுப்போனாலும் அவர் என்னை நேசிக்கிறார். சரியான தரப்பட்டியல் இல்லாத நிலையிலும், நான் அவரிடம் செல்ல முடியும். அவர் எனது நண்பர். நான் அவரை காண முடியாது என்றாலும், எப்போதும் அவர் என்னுடன் இருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறேன். நான் பலமுள்ளவனாக இருக்க வேண்டியதில்லை. அவருடைய சமூகத்தில் நான் அழ முடியும். அது எனக்கு நன்மையை கொண்டு வருகிறது. நான் அதை உனக்கு கூறுகிறேன்”.
ஹைல்: “உனக்கு அது நல்லது. நான் அதை நம்பினால் தானே எனக்கும் அது நல்லது”.
பென்: “நாம் நடந்துகொண்டே செல்வோம். நான் உன்னுடன் சேர்ந்து, உனது வீட்டிற்கு வருகிறேன். உனது அப்பா நிச்சயம் கோபப்பட்டு எதையும் செய்யமாட்டார்”.
ஹைல்: “இது நல்ல யோசனை, நீ நல்ல நண்பன்”.
பென்: “விடுமுறை முடிந்த பின்பு, நாம் இணைந்து வீட்டுப் பாடங்களை செய்வோம்”.
இருவரும் இணைந்து சென்றார்கள். ஹைல் சற்று பதட்டத்துடன் காணப்பட்டான். அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அவனின் அப்பா ஹைலின் மதிப்பெண்களைக் கண்டு கோபப்படவில்லை. அவர் பள்ளியில் படிக்கும்போது, நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்று தனது நிலையையும் கூறினார்.
பெற்றோர்கள் சிறப்பான காரியத்தை எதிர்பார்க்கும்போது பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் இயேசு வித்தியாசமானவர். அவர் நீ இருக்கும் வண்ணமாகவே உன்னை ஏற்றுக்கொள்கிறார். உனது பாவங்கள் மற்றும் பலவீனங்களோடு உன்னை நேசிக்கிறார். நீ நன்றாக செய்யக் கூடியதையும், உனக்கு செய்ய கடினமாக இருப்பதையும் அவர் அறிகிறார். அவர் உனக்கு உதவி செய்ய விரும்புகிறார். எனவே அவர் மீது நம்பிக்கை வை. நீ இயேசுவை அறிந்தவுடன் உடனடியாக உனது வகுப்பில் நீ சிறந்தவனாக மாறிவிட மாட்டாய். ஆனால் நீ அனைத்தையும் சிறப்பாக செய்ய இயேசு உனக்கு உதவுவார். அவர் நீ கற்றுக்கொள்ளும்போது ஒழுக்கத்தையும், மகிழ்ச்சியையும் தருவார்.
தைரியமாக இரு. அவரை நம்பு. நீ நினைப்பதைவிட அதிகமாக இயேசுவின் உதவியுடன் உன்னால் செயல்பட முடியும்.
மக்கள்: உரையாளர், பென், ஹைல்.
© Copyright: CEF Germany