Home -- Tamil -- Perform a PLAY -- 015 (The baked Bible)
15. சுடப்பட்ட வேதாகமம்
பெண்: “அவர்கள் வருகிறார்கள்! அவர்கள் வருகிறார்கள்”.
ஒரு பெண் ரொட்டி செய்து கொண்டிருந்தாள். அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். கிறிஸ்தவர்களை துன்புறுத்துக்கூடிய ஒரு கூட்டம், அவளுடைய வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்து அனைத்தையும் சோதனையிடுவார்கள். வேதாகமங்கள், பாடல் புத்தகங்களை எடுத்து எரித்து விடுவார்கள்.
மனிதன்: “திறவுங்கள்! உடனடியாக கதவை திறவுங்கள்!” (கதவை தட்டும் சத்தம்)
அவள் என்ன செய்தாள்? அவள் வேதாகமத்தை எடுத்து ரொட்டி மாவுக்குள் மறைத்து வைத்து, ஓவனில் வைத்துவிட்டாள். பின்பு நடுக்கத்துடன் கதவைத் திறந்தாள். அந்த மனிதர்கள் அலமாரி, டேபிள் என்று எல்லா இடங்களிலும் தேடினார்கள்.
அவர்களால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை. சத்தமாக அவளைத் திட்டிவிட்டு, கதவை வேகமாக சாத்திவிட்டு போனார்கள். (கதவை சாத்தும் சத்தம்)
பின்பு அவள் சுடப்பட்ட ரொட்டியை ஓவனில் இருந்து எடுத்தாள். அவளுடைய வேதாகமம் உள்ளே, சேதமில்லாமல் இருந்தது.
அவளுடைய நாட்டில் வேதாகமம் வைத்திருப்பது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவள் இறைவனை அதிகமாக நேசித்தாள். இரகசியமாக இறைவனுடைய வார்த்தையை வாசித்தாள். இது அவளுக்கு பலத்தையும், ஒவ்வொரு நாளும் தைரியத்தையும் கொடுத்தது.
(பின்னணி இசை)
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. (சங்கீதம் 19:8-11)
உனது வீட்டில் உனக்கு வேதாகமம் உண்டா? உனது அலமாரியில் தூசி படிய அதை வைத்திராதே. அதை வாசி. உன்னிடம் இறைவன் பேசுவதை மகிழ்ச்சியுடன் கேள். உனக்கு வேதாகமம் இல்லையெனில் எனக்குத் தெரியப்படுத்து. வேதாகமம் உனது பிரியமான புத்தகமாக மாறட்டும்.
மக்கள்: உரையாளர், பெண், மனிதன்.
© Copyright: CEF Germany